குழந்தைகளின் அதிவேக வளர்ச்சிக்கு உதவும் எளிய நட்ஸ்!

Groundnut
Groundnuthttps://news.lankasri.com

பாதாம், பிஸ்தா போன்ற விலை உயர்வான நட்ஸை விட, எளிதாகக் கிடைக்கும் வேர்க்கடலை குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளை வழங்குகிறது. வளரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு அருமையான பருப்பெனில் அது நிலக்கடலைதான்.

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப் பேறு ஏற்படுவதுடன், மார்பகக் கட்டி உருவாவதையும் தடுக்கப்படுகிறது. பெண்களுக்கு பெரிதும் தேவைப்படும் போலிக் ஆசிட், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச் சத்து, வைட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் போன்றவை வேர்க்கடலையில் அதிகம் நிறைந்துள்ளன.

கருவின் மூளை, நரம்பு வளர்ச்சிக்கு இது மிகவும் நல்லது. நீரிழிவு நோயைத் தடுப்பதில் இது பெரும் பங்காற்றுகிறது. இதி மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. இதில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் உடலுக்கு தேவையான கால்சியத்தை தந்து எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. நிலக்கடலை பித்தப்பை கல்லைக் கரைக்கிறது. தினமும் 30 கிராம் அளவுக்கு நிலக்கடலை சாப்பிட, பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்கலாம்.

நிலக்கடலை உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்பது உண்மையல்ல. அளவாக இதை சாப்பிட நல்ல பலன்களைத் தரும். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய் வருவதையும் தடுக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
அன்னாசி பூ ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல; அழகுக்கும்தான்!
Groundnut

இதில் உள்ள பாலிஃபீனால் நமக்கு நோய் வருவதைத் தடுத்து ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இளமையை பராமரிக்கவும் உதவுகிறது. மூளை வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் 3 நியாசின் இதில் அதிகம் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் உதவுகிறது. உடலின் இரத்த ஓட்டத்தை நிலக்கடலை சீராக்குகிறது. நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டி சுறுசுறுப்பாக இயங்க வைப்பதோடு, மன அழுத்தத்தையும் போக்குகிறது.

இவ்வாறு பல நன்மைகளைத் தரும் வேர்க்கடலையை உண்போம். உடல் நலம் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com