முறையற்ற மாதவிடாய் பிரச்னையா? முடிவு கட்ட உதவும் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!

Menstruation
Menstruation
Published on

ஹார்மோன் மருந்து மாத்திரைகள் இல்லாமல் முறையற்ற மாதவிடாயை சரி செய்ய உதவும் எளிய குறிப்புகள்...

  • மாதவிடாய் சரியாக ஏற்படாமல் இருந்தால் அதற்கு ஒரு வாரம் முன்பே அன்னாசிப்பழம் அல்லது பப்பாளி பழத்தை சாப்பிட்டு வர வேண்டும்.

  • வெறும் வயிற்றில் திராட்சை சாப்பிடலாம். மாதவிடாய் சரியாக ஏற்படாமல் இருந்தால் அடிக்கடி திராட்சை சாறு எடுத்து கொள்ள நல்ல தீர்வு கிடைக்கும்.

  • உணவில் பீட்ரூட்டையும் சேர்த்து வர வேண்டும்.

  • கோதுமை கஞ்சியை மாதவிலக்கு காலங்களில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு சுழற்சி சீர்படும்.

  • வாரத்திற்கு மூன்று முறை வாழைத் தண்டு கூட்டு பொரியல் செய்து சாப்பிட்டு வர எடை குறையும். அதனால் மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

  • உணவில் மிளகு, சீரகம் மற்றும் இஞ்சி அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • ஸநாக்ஸாக உலர் திராட்சை, பேரீச்சை மற்றும் வால்நட் சாப்பிட்டு வர வேண்டும்.

  • மாதவிடாய் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பூசணி விதைகளை உட்கொள்வது நல்லது. காலையில் விதைகளை எடுத்துக்கொள்வது உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும்.

  • அதேபோல், கருப்பு எள் உருண்டை ஒரு மிகச்சிறந்த உணவு. இதை ஒரு நாளைக்கு இரண்டு உருண்டைகள் வரை உட்கொள்ள மாதவிடாய் கழிவுகள் எளிதாக வெளியேறும். 100 கிராம் வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்துத் தூளாக்கி வெறும் வயிற்றில் சாப்பிட மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

  • வெற்றிலையில், இரண்டு பூண்டு பற்களையும், 5 மிளகையும் வைத்து காலையில் வெறும் வயிற்றில், வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சுழற்சி சீர்படும்.

  • கால் கரண்டி கொள்ளை, ஒரு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அது ஒரு டம்ளராக சுண்டியதும், அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், பூண்டு சேர்த்தும், மறுநாள் சீரகத்தூள், மற்றொரு நாள், தனியா தூள், இன்னொரு நாள் கட்டிப் பெருங்காயம் கரைத்து அருந்தினால் மாத மாதம் சரியாக மாதவிடாய் வரும்.

  • மிளகு, சீரகம் மற்றும் கட்டிப் பெருங்காயம் சேர்த்து இஞ்சி போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் "சூப்"பாக குடிக்க சினைப்பை கட்டிகள் பிரச்சினைகள் ஏற்படாது.

இதையும் படியுங்கள்:
கோவில் நிலைவாசல்படியை தாண்டலாமா கூடாதா?
Menstruation
  • புதினாக் கீரையை வெயிலில் காய வைத்து அதை பவுடர் செய்து வைத்துக் கொண்டு நாள் தோறும் மூன்று வேலை அரைத் தேக்கரண்டித் தூளுடன் அதே அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு காலக் கணக்குப்படி சரியான நாட்களில் வெளியேறும்.

  • 20 கிராம் கருஞ்சீரகத்தை மண் சட்டியில் போட்டு வறுத்துத் தூள் செய்து 40 கிராம் பனை வெல்லத்தை சேர்த்து பாலுடன் மூன்று வேளை குடித்து வர மாதவிடாய் சிக்கல் மறையும்.

  • பெரிய நெல்லிக்காயை துருவி காயவைத்து நைஸாக அரைத்து பொடி செய்து அதை நாள் தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட மாதவிடாய் பிரச்சனைகள் சீர் படும்.

  • மாதவிடாய் சரியாக ஏற்படாமல் விட்டு விட்டு வந்தால், அவர்கள் தினமும் காலையில் செம்பருத்திப்பூ நான்கை , சிறிதளவு அருகம்புல் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு பகலில் மோர் சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட்டு வர குணமாகும்.

  • நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் களாச்சி காயை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து பவுடர் செய்து அதனுடன் மிளகு சேர்த்து அரைத்து பொடி செய்து காலையில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர மாதவிலக்கு சுழற்சி மற்றும் PCOD போன்றவை சரியாகும்.

  • வல்லாரை இலையை நன்கு உலர்த்தி தூளாக அரைத்த பொடியை ஒரு தேக்கரண்டியுடன் 5 கிராம் சுக்கு, 5 கிராம் சோம்பு தட்டிப் போட்டு 200 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் வடிகட்டி காலை மாலை என குடித்தால் மாதவிடாய் தொல்லைகள் நீங்கும்.

  • மாங்காயின் தோலை நெய்யில் வதக்கி சர்க்கரையுடன் கலந்து சாப்பிட மாதவிலக்கு சுழற்சி சீர்படும்.

  • சிகப்பு நிறத்தில் இருக்கும் துளசி இலையை சுத்தம் செய்து நன்றாக அரைத்து மாதவிடாய் காலத்தில் 4 நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வர மாதவிலக்கு குறைகள் நீங்கும்.

    முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.

இதையும் படியுங்கள்:
ட்ரெட்மில்லில் நடப்பது, வீட்டுக்கு வெளியே நடப்பது - இரண்டில் எது நல்லது?
Menstruation

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com