கடின உழைப்பை மேற்கொள்ளும் நிர்பந்தத்தில் உள்ளவர்கள் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு ஸ்டெமினாவின் அளவு அதிகம் தேவைப்படும். அவ்வாறான நேரங்களில் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய உதவக்கூடிய ஆறு வகை பானங்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இளநீரில் இயற்கையான எலக்ட்ரோலைட்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக பொட்டாசியம் இதில் அதிகம் நிறைந்துள்ளது. ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களின் எலக்ட்ரோலைட்களின் இழப்பை ஈடு செய்ய, வர்த்தக ரீதியில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸை விட இளநீர் மிகச் சிறந்த மாற்றாகும்.
க்ரீன் டீயில் காஃபின் மற்றும் கேட்டச்சின்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சகிப்புத் தன்மையையும் ஸ்டெமினாவையும் அதிகரிக்க வல்லவை. காஃபின் அதிகமானால் அது டீஹைட்ரேஷன் மற்றும் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். எனவே, க்ரீன் டீயை அளவோடு நிறுத்திக் கொள்வதே ஆரோக்கியம்.
பீட்ரூட் ஜூஸில் நைட்ரேட்ஸ் அதிகம் உள்ளன. இவை உடற்பயிற்சியின்போது இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவும்; ஆக்ஸிஜன் உபயோகத்தை குறைக்கும்; சகிப்புத்தன்மையையும் ஸ்டெமினாவையும் அதிகரிக்க உதவும்.
பழங்கள், பச்சை இலைக் காய்கறி, புரோட்டீன் பவுடர், ஆரோக்கிய கொழுப்புள்ள அவகோடா அல்லது நட் பட்டர் சேர்த்து ஸ்மூத்தியாக அரைத்து உண்பது அதிக ஊட்டச் சத்து சேர்க்கும். இவை தொடர்ந்து சக்தி தரவும் ஸ்டெமினாவை அதிகரிக்கவும் செய்யும்.
டார்ட் செரி ஜூஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி கூட்டுப்பொருள்கள் உள்ளன. இவை கடினமான உடற்பயிற்சிக்குப் பின் தசைகளில் உண்டாகும் தளர்ச்சியை மீட்டெடுக்கவும் ஸ்டெமினாவை அதிகரிக்கவும் உதவி செய்யும்.
உடற்பயிற்சிக்குப் பின் கார்போஹைட்ரேட் சேர்ந்த புரோட்டீன் ஷேக் அருந்துவது இழந்த க்ளைகோஜென் அளவை நிரப்பவும், தசைகளின் திசுக்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்து பழைய நிலைக்குக் கொண்டு வரவும் உதவும். இதன் விளைவாக சகிப்புத்தன்மையும் ஸ்டெமினாவும் அதிகரிக்கும்.
கடின உழைப்பில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் இந்த ட்ரிங்க்ஸ்களை அருந்தி ஸ்டெமினாவை தக்க வைத்துக் கொள்ளலாமே!