உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பாட்டி வைத்தியம் பதினாறு!

Mother feeding baby
குழந்தைக்கு உணவூட்டும் தாய்https://www.madhimugam.com
Published on

* இரவில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து மோரில் போட்டு ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, நாளடைவில் வாய்வு தொல்லைகள் நீங்கும்.

* பூப்பெய்திய பெண்களுக்கு உளுந்து மாவை வறுத்து அதில் நாட்டு சர்க்கரை கலந்து நெய்விட்டு தனியாக கிண்டி கொடுத்து வந்தால் அவர்களின் இடுப்பு வலியானது நீங்கிவிடும்.

* குங்குமப்பூவை சிறிதளவு பால் விட்டு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை பசும்பால் கலந்து அருந்தி வந்தால் கபம், கால் வலி நீங்கி விடும்.

* தேவையான திப்பிலியை அம்மியில் அரைத்து எடுத்து ஒரு மெல்லிய துணியில் ஜலித்து அந்தத் தூளை ஒரு பாட்டிலில் சேமித்துவைத்துக்கொண்டால் தேவையான போது கொஞ்சம் எடுத்து தேன் கலந்து சாப்பிட இருமல் நீங்கி விடும்.

* வசம்பு துண்டை தூளாகப் பொடி செய்து வைத்துக்கொண்டு, அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து வாயில் போட்டு ஒரு தம்ளர் இளஞ்சூடு தண்ணீர் அருந்த நாளடைவில் நரம்பு தளர்ச்சி மற்றும் வாய் நாற்றம் எல்லாம் நீங்கிவிடும்.

* பெருங்காயத்தை நீர் விட்டு அரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைக்கு கட்டு உண்டாக்கும் கக்குவான் நாளடைவில் நீங்கிவிடும்.

* துளசி இலையை ஒரு டம்ளரின் போட்டு ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் மூளை பலம் அதிகமாகும்.

* பூண்டு, ஏலக்காய், நன்னாரி, சீரகம், எலுமிச்சம்பழம், நார்த்தங்காய், இளநீர் இவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு அடங்கிவிடும்.

* திராட்சை சாறை ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என இருவேளை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் பல் முளைக்கும்போது ஏற்படும் மலக்கட்டை நீக்கும்.

* புதினா கீரையை துவையலாக அரைத்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் வாந்தி, மாந்தம் நின்று விடும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் தனக்குத் தானே பேசிக் கொள்ளும் நபரா? உளவியல் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
Mother feeding baby

* பொன்னாங்கண்ணிக் கீரையுடன் பூண்டு, நெய் சேர்த்து உணவில் கலந்து உண்டு வந்தால் ஒரு மாதத்தில் மூல நோய் குணமடையும், கண் பார்வையும் தெளிவடையும்.

* தனியாவை கசாயமாக்கி சிறிது பால், சர்க்கரை உடன் அருந்தி வந்தால் அதிக தாகம் தீரும். நாக்கு வறட்சியும் நீங்கும்.

* நெல்லிக்காய் தூளை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் நரை முடியானது கறுத்து விடும்.

* தலையில் துளசியை நன்றாகத் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லைகள் ஏற்படாது.

* சிறிது சுக்கு துண்டை வாயில் அடக்கிக்கொள்ள சீதளத்தினால் பல்லில் ஏற்பட்ட கூச்சம், வலி நீங்கும்.

* வெந்தயப் பொடி கால் பங்கு கோதுமை மாவு அரை பங்கு இந்த இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து களி போல் கிண்டி சாப்பிட உடல் சூடானது மட்டுப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com