ஸ்லிம்மா வாழ என்ன வழி?

Slim Secret
Slim Secret
Published on

40+ வயதிலும் உடலை ஸ்லிம் (Slim Secret) ஆக வைத்துக் கொள்வதன் பின்னால் பெரிய கம்பசூத்திரம் எல்லாம் கிடையாதுங்க. எல்லாமே தெரிஞ்ச விஷயம்தான் என்றாலும் அப்பப்போ நமக்கு நாமே நினைவுபடுத்தணுமா இருக்கே!

ஆரோக்கியமான வீட்டு சாப்பாடு, கலோாிகள் நிறைந்த உணவு, துாித உணவை தவிர்த்தல், சரியான உடற்பயிற்சி, யோகா, மெடிட்டேசன், நல்ல உறக்கம், தெளிவான சிந்தனை, உயர்ந்த எண்ணம் இவையே ஸ்லிம்மா வாழ வழி!

நடிகர் ரஜினி சொன்னது போல 'நாற்பது வயதானால் வொயிட் வகைகளை குறையுங்கள்'! இதுதான் முதல் மந்திரம்!

நாா்ச்சத்து மிகுந்த உணவு வகைகளை சாப்பாட்டில் சோ்த்துக் கொள்ளலாம். கேரட், முள்ளங்கி, சில கீரை வகைகள், ஆப்பிள், கொய்யா, மாதுளை, திராட்சை, சொிமானத்திற்கு பூவன் மற்றும் செவ்வாழைப்பழம், உடல் சூடு தனிய மொந்தன் வாழைப்பழம் சாப்பிடலாம்.

அந்த வகையில் உணவில் சாதத்தின் அளவை குறைத்து காய்கறி வகைகளை அதிகம் சோ்த்துக் கொள்ளவேண்டும்.

தினசரி முடியாவிட்டாலும் அவ்வப்போது ஏ.பி.சி ஜூஸ் அருந்துவது நல்லது.

சர்க்கரையை (சீனி) குறைத்து நாட்டு சர்க்கரை, கருப்பட்டி சோ்ப்பது நல்லது.

நோய் எதிா்ப்பு சக்திக்கான கஷாயங்கள் தயாா் செய்து சாப்பிடலாம்.

வாயு மிகுதியான காய்கறி வகைகளை குறைப்பது நல்லது.

மது அருந்துதல், புகை பிடித்தல் பழக்கம் தவிா்ப்பதே உத்தமம்.

அதிக எண்ணைய் பதாா்த்தங்கள் தவிா்க்கலாம். நட்ஸ் வகைகள் சோ்க்கலாம். மீன், ஒமேகா மாத்திரைகள் சோ்க்கலாம்.

துாித உணவே வேண்டாமே! கடைவீதி, சாலை ஓர கடைகளில், தரமில்லாத எண்ணைய் மற்றும் தரம் குறைவான பொருட்கள் மூலம் தயாாிக்கப்படும் உணவு வகைகளை தவிா்ப்பது நல்லது. பரோட்டா சால்னா அறவே வேண்டாமே!

அடிக்கடி காபி அருந்துவது தவிா்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
மாணவர்களே! Diet என்பது பட்டினி கிடப்பதல்ல! உங்கள் தட்டை 80/20 விதியில் மாற்றிப் பாருங்கள்!
Slim Secret

பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரை, புடலங்காய், கத்தரிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, செளசெள, கேரட், கீரைவகைகள் இவற்றை அடிக்கடி சோ்ப்பது நல்லது. மலச்சிக்கல் வராமல் பாா்த்துக்கொள்வது நமது கையில்தான் உள்ளது. நமது ஆரோக்கியம் நமது வசமே உள்ளது.

ஆக, ஆசையைக் கட்டுப்படுத்தி, நாவை அடக்கினாலே போதும் ஆரோக்கியம் நம்மிடம் தொடரும்! கலோாி மிகுந்த உணவு வகைகளை சாப்பிடுவோம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com