

தினமும் காலையில் சின்ன வெங்காயத்தை (Small onion) வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால், சோர்வு, மூட்டு பிரச்னை ஆகியவற்றை சரி செய்யும். காலையில் சின்ன வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டிவிட்டு வெறும் வயிற்றில் பத்து நிமிடம் கழித்து சாப்பிடுங்கள். 24 மணி நேரத்தில் உங்கள் உடலில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்று பாருங்கள். வயிறு லேசாகும், அதிக சக்தியோடு காணப்படுவீர்கள், செரிமானம் சிறப்பாக செயல்படும்.
பல நூற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் பயன்படுத்திய சிறந்த உணவு தான் இந்த சின்ன வெங்காயம். இதில் kemperol, allicin போன்ற மூலப்பொருட்கள் அடங்கி உள்ளது. அதுமட்டுமில்லாமல் வைட்டமின் ஏ, பி6, சி ஆகியவை இருக்கிறது. மேலும் தாதுக்களான பொட்டாசியம், மெக்னீசியம் அடங்கியுள்ளது. வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை (Small onion) சாப்பிட்டு வர உடலில் உள்ள அலர்ஜியை நீக்குகிறது. உடலில் உள்ள உயிர் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்கிறது.
ஹைப்போ தைராய்ட் உள்ளவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இந்த பிரச்னை உள்ளர்களுக்கு எல்லாம் மெட்டபாலிசம் குறைவாக இருக்கும். சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் என்சைம்மின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. சின்ன வெங்காயத்தில் நார்ச்சத்து உள்ளதால் உங்கள் வயிறை எப்போதும் நிறைவாக வைக்கும், அடிக்கடி பசி ஏற்படாது.
கழுத்துவலி, இடுப்புவலி போன்ற வலி பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு வீக்கமும் இருக்கும். சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் வலிகளை உருவாக்கும் என்சைம்களை தடுக்கிறது. இதனால் வலி மற்றும் வீக்கம் இரண்டுமே குறையும்.
இதற்கு முதலில் கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு அதில் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதை காலை உணவு எடுத்துக் கொள்ளும் போது சேர்த்து சாப்பிடுவது நல்லது.
குடலில் உள்ள நல்ல பேக்டீரியாவின் அளவு குறைவாக இருந்தால் அஜீரண கோளாறு, அசிடிட்டி, வயிறு உப்பசம், பசியின்மை போன்ற பிரச்னை வரும். இதற்கு சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது இது Prebiotic ஆக குடலில் வேலை செய்கிறது.
இதனால் நல்ல பேக்டீரியாக்கள் குடல் பகுதியில் உருவாகிறது. இதனால் கழிவுகள் எளிதில் வெளியாக உதவுகிறது. சின்ன வெங்காயம் தயிர் சேர்த்து சாப்பிட்டு வர அசிடிட்டி மட்டுமில்லாமல் செரிமான பிரச்னைகளும் சரியாகும்.
பொதுவாகவே ரத்தம் சுத்தமாக இல்லாதவர்களுக்கு மங்கு, முகப்பருக்கள், முகச்சுருக்கம் வரும். அதுமட்டுமில்லாமல் முடி உதிர்வு, முடியின் வேர்கள் பலவீனமாக இருத்தல் போன்ற பிரச்னைகள் வரும்.
இதற்கு சின்ன வெங்காயத்தை வெட்டி வைத்துக் கொண்டு அதனுடன் எழுமிச்சை சாறும் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுக் கொண்டே வந்தால், எழுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது இது உங்கள் உடலை டீடாக்ஸ் செய்து சருமத்தை பளபளப்பாக்கும். எனவே, தினமும் உணவுடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)