
ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி கடைசியா பார்க்குறது மொபைல் ஸ்கிரீனை... காலையில கண் முழிச்சதும் முதல்ல தேடுறது அதே மொபைலைத்தான். இது நம்மில் பலரோட வாடிக்கையான ஒரு பழக்கமா மாறிடுச்சு.
அலாரத்தை ஆஃப் பண்ற சாக்குல ஆரம்பிச்சு, வாட்ஸ்அப் மெசேஜ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், பேஸ்புக் நோட்டிபிகேஷன்னு நம்ம காலைப் பொழுது ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே நம்ம மனசு ஆயிரத்தெட்டு விஷயங்களுக்குள்ள மூழ்கிடுது. இது ஏதோ ஒரு சாதாரண பழக்கம்னு நாம நினைக்கலாம்.
ஆனா, இந்த ஒரு சின்ன பழக்கம், நம்மளோட ஒரு நாள் முழுவதையும் எப்படி எல்லாம் பாதிக்குதுன்னு தெரிஞ்சா, நீங்களே ஆச்சரியப்படுவீங்க.
மன அமைதியைக் கெடுக்கும்!
யோசிச்சுப் பாருங்க, ஒரு எட்டு மணி நேர உறக்கத்துக்குப் பிறகு நம்ம மூளை ஃப்ரெஷ்ஷா, அமைதியா இருக்கும். அந்த அமைதியான நேரத்துல, நல்ல எண்ணங்களையோ, அந்த நாளுக்கான திட்டங்களையோ யோசிக்கிறதுக்குப் பதிலா, நாம என்ன பண்றோம்?
அடுத்தவங்க லைஃப்ல என்ன நடக்குது, நாட்டுல என்ன பிரச்சனை ஓடுது, யார் என்ன ஸ்டேட்டஸ் வெச்சிருக்காங்கன்னு தேவையில்லாத தகவல்களை மூளைக்குள்ள திணிக்கிறோம். இப்படிச் செய்யும்போது, நாள் ஆரம்பிக்கும்போதே நம்ம மனசுக்குள்ள ஒருவித பதற்றமும், அழுத்தமும் உருவாக ஆரம்பிச்சுடும்.
"ஐயோ, அவங்க ஊருக்குப் போயிருக்காங்க, நாம இங்கயே இருக்கோமே" ங்கிற பொறாமையா இருக்கலாம், அல்லது ஒரு நெகட்டிவ் செய்தியைப் பார்த்து வர்ற கவலையா இருக்கலாம். எதுவா இருந்தாலும், அது உங்க நாள் தொடங்குறதுக்கான சரியான வழியே கிடையாது.
வேலைத்திறனை பாதிக்கும்!
காலையிலேயே மொபைல் போனைப் பார்க்குறது, உங்களுடைய கவனக்குவிப்புத் திறனை பயங்கரமா பாதிக்கும். ஏன்னா, உங்க மூளை காலையிலேயே பல விஷயங்களைப் பார்த்துப் பழகிடுச்சு. அதனால, ஒரு குறிப்பிட்ட வேலையில மட்டும் கவனம் செலுத்தச் சொன்னா, அது தடுமாறும்.
வேலை செய்யும்போதுகூட, "யாராவது மெசேஜ் பண்ணியிருப்பாங்களா?" "நோட்டிபிகேஷன் வந்துச்சா?"-ன்னு மனசு அலைபாய்ஞ்சிட்டே இருக்கும். இதனால, உங்களோட வேலை செய்யும் வேகம் குறையும், தப்புகள் நடக்க வாய்ப்பு அதிகமாகும். ஒரு மணி நேரத்துல முடிக்க வேண்டிய வேலையை, மூணு மணி நேரம் இழுத்தடிப்பீங்க. இது ஒரு போதை மாதிரி, போகப் போக இந்த பழக்கத்துல இருந்து வெளிய வர்றதே ரொம்பக் கஷ்டமாகிடும்.
இந்த பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி?
இது ஒண்ணும் கஷ்டமான விஷயம் இல்லை. சின்னச் சின்ன மாற்றங்கள் போதும்.
முதல்ல, உங்க பெட்டுக்கு பக்கத்துல போனை வெச்சுட்டுத் தூங்குறதை நிறுத்துங்க. வேற ஒரு ரூம்ல சார்ஜ் போடுங்க.
அலாரத்துக்குப் பதிலா, ஒரு பழைய அலாரம் கடிகாரத்தை வாங்குங்க.
காலையில் எழுந்ததும், போனைத் தொடாம, ஒரு பத்து நிமிஷம் ஜன்னல் வழியா வெளிய வேடிக்கை பாருங்க, அல்லது பால்கனிக்கு வந்து நின்னு காலாற நடங்க. ஒரு டம்ளர் தண்ணி குடிங்க.
சின்னதா ஒரு நடைப்பயிற்சி போங்க, இல்லன்னா உங்களுக்குப் பிடிச்ச பாட்டைக் கேட்டுக்கிட்டே சில உடற்பயிற்சிகளைச் செய்யுங்க. இந்த மாதிரி விஷயங்கள் உங்க மனதையும், உடலையும் புத்துணர்ச்சியாக்கும்.
இந்த ஒரு சின்ன மாற்றத்தை செஞ்சு பாருங்க, உங்க வாழ்க்கையில ஒரு பெரிய பாசிட்டிவ் மாற்றம் வர்றதை நீங்களே உணர்வீங்க.