நூக்கலில் இத்தனை நன்மைகளா?

நூக்கலில் இத்தனை நன்மைகளா?
சௌமியா சுப்ரமணியன்

என் பெயர் சௌமியா சுப்பிரமணியன். பள்ளி கல்லூரி படித்து முடித்து திருமணமாகி, என் கணவர் , மற்றும் இரண்டு மகன்கள், தாயார், என் அண்ணன், என் மற்றும் மாமியார் என அனைவரும் ஒன்றாக சென்னையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். வீட்டில் விதவிதமாக சமைத்து குடும்பத்தாருக்கு பறிமாறுவது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. இது தவிர சமையல் குறிப்பு, கவிதை, சிறுகதை துணுக்கு எழுதுவது, புத்தகங்கள் படிப்பது, பாடல்கள் கேட்பது , தோட்டத்தை பராமரிப்பது எனது பொழுதுபோக்கு. வீட்டு வேலைகளை நானே செய்வதோடு, எனது தாயார் மற்றும் மாமியாரை கவணமாக பார்த்துக்கொள்கிறேன். மேலும் எங்கள் வீட்டு செல்லப்பிராணியாகிய "ஆஸ்கர்" மற்றும் "அதீனா" என்கிற இரு நாய்குட்டிகளுடன் நேரம் போவது தெரியாமல் விளையாடுவதும், என் வீட்டு மீன் தொட்டியில் உள்ள மீன்களை பார்த்து ரசிப்பதும் மனதிற்கு ஆனந்தத்தை தருகிறது.

Updated on

காய்கறி சந்தைகளில் மிகவும் எளிதாகக் கிடைக்கும் ஒரு காய் நூக்கல். விலை அதிகமில்லாத இந்த காயில் அதிக சத்துக்கள் மிகுந்துள்ளன என்பது பலருக்கும் தெரிவதில்லை. இனி, நுக்கலில் உள்ள சத்துக்கள் பற்றி காண்போம்.

* நூக்கலில் அதிகமாக நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

* வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் நிறைய உள்ளன.

* நூக்கலின் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

* நூக்கல் இலை உடலில் உள்ள கொழுப்பு மற்றும் பித்தநீர் ஆகியவற்றை வெளியேற்றுகிறது. மேலும், கொலஸ்ட்ராலைக் குறைந்து இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

* நூக்கலை வாரத்துக்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தியை அதிகரித்து, செரிமானத்தை சீராக்குகிறது.

* நூக்கலில் உள்ள வைட்டமின் கே இதயப் பிரச்னை வராமல் பாதுகாக்கிறது.

* வயிற்றுப் பிரச்னைகள் மற்றும் வயிற்றுப்புண்களை உண்டாக்கக் கூடிய செல்களை எதிர்த்து அழிக்கும் வல்லமை நூக்கலுக்கு உண்டு.

* நூக்கல் உடலில் ரத்தத்தின் அளவை சரியாக வைத்து, உடல் எடையையும் குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.

* நூக்கலை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதால் குடல் நாளங்கள் உறுதிப்படும், எலும்புகள் உறுதியாகும்.

* குழந்தை பெற்ற பெண்கள் நூக்கலை தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

* நூக்கல் காயிலும்,  இலையிலும் அதிக அளவிலான ஃபோலேட் சத்து நிறைந்துள்ளதால் அது இதயத்தை பாதுகாப்போடு வைத்து, மாரடைப்பு பிரச்னை வராமல் தடுக்கிறது.

* ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை இரு மடங்காக அதிகரிக்க நூக்கல் உதவுகிறது.

logo
Kalki Online
kalkionline.com