கனவு காண்பதில் இத்தனை நன்மைகளா?

So many benefits of dreaming
So many benefits of dreaminghttps://tamil.boldsky.com

னவு என்பது நாம் எல்லோருமே தூங்கும்போது காணக்கூடிய ஒன்றுதான். எனினும், அவ்வாறு காணும் கனவுகள் சில நேரங்களில் மிகவும் தத்ரூபமாக இருப்பதை எப்போதாவது கவனித்ததுண்டா? இது நடப்பதற்குக் காரணம் உங்கள் மூளை தூங்கும்போது கூட ஆக்டிவாக வேலை செய்வதாலேயாகும். அப்படி நாம் காணும் சில கனவுகள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம் அல்லது வருத்தப்படவும் வைக்கலாம். நம் கனவில் தோன்றும் கதைகளையும், உருவங்களையும் நம் மனதே உருவாக்கிக் கொண்டு நம்மை கனவு காண வைக்கிறது என்று கூறலாம். தூக்கம் கலைந்த பிறகு அதிகமாக யாரும் கனவுகளை நினைவு வைத்துக்கொள்வதில்லை.

கனவுகள் ஒரு நபரின் ஆழ்மனதில் உள்ள எண்ணங்கள், ஆசைகள், முயற்சி போன்றவற்றை வெளிப்படுத்த உதவுகின்றன. கனவு காண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

கனவு காண்பதால் நம் ஞாபக சக்தி அதிகரிக்கும். கனவு நம் நினைவாற்றலை வலுப்படுத்தி நம்மை வேகமாக செயல்பட வைக்கும் என்று கூறப்படுகிறது. கனவு என்பது ஆரோக்கியமான தூக்கத்தின் வெளிப்பாடேயாகும். இது நல்ல விஷயமாகவே கருதப்படுகிறது. கனவுகள் நம்முடைய நினைவுகளையும் மற்றும் நாம் கற்ற விஷயங்களை சேமித்து வைக்கவும் உதவுகிறது.

கனவுகள் நம்முடைய நினைவுகளில் இருக்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. உதாரணத்திற்கு, உங்களுக்கு வாழ்க்கையில் ஏதேனும் உணர்ச்சிகரமான சம்பவம் நடந்திருந்தால், அதை தூங்கும்போது கனவுகள் அந்த சம்பவத்தால் உங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

கனவுகள் படைப்பதற்கான உத்வேகத்தை கொடுக்கிறது. நிறைய கலைஞர்களும், எழுத்தாளர்களும் தங்கள் கனவுகளிலிருந்து புது யோசனைகளையும் படைப்புகளையும் கண்டுப்பிடித்திருக்கிறார்கள். உங்களுக்கு ஏதேனும் வேலையில் பிரச்னைகள் இருப்பின், உங்கள் ஆழ்மனதே கனவுகள் மூலம் அதற்கான தீர்வையும், பதிலையும் கண்டுபிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கனவுகள் நம்மைப் பற்றிய ஒரு சுயபிரதிபலிப்பையும், சுய அறிவையும் நமக்கு உணர்த்துகிறது. நம் ஆழ்மனதிலிருக்கும் பயம், ஆசை, நம்பிக்கை போன்றவற்றை நமக்குப் புரிய வைக்கும். நம்முடைய உணர்ச்சிகளை புரிந்து கொள்வதற்கு உதவும். கனவுகள் நம்முள் மறைந்திருக்கும் நம்மைப் பற்றிய தனித்தன்மையையும், குணநலத்தையும் நமக்கு தெரியப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
புரூஸ் லீ மகள் ஷேனான் லீ சொல்லும் 9 முக்கிய வாழ்க்கைப் பாடங்கள்!
So many benefits of dreaming

கனவு காண்பது நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லதாகும். REM (Rapid Eye Movement) என்ற நிலையிலேயே கனவுகள் அதிகம் வரும். அந்த சமயத்திலேயே உடல் தன்னை சீரமைத்து சரி செய்து கொள்கிறது. REM தூக்கம் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் நரம்பு மண்டல செயல்பாடுகளுக்கு ஊட்டமளிக்கப்படுகிறது.

எனவே, நம் உடலுக்கும், மனதுக்கும் கனவு காண்பது என்பது நல்லதேயாகும். இது நம் மனதை சுத்தப்படுத்தி அடுத்த நாளை புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்க உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com