இளநீர் வழுக்கையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

So many health benefits in coconut baldness
So many health benefits in coconut baldnesshttps://www.thandoraa.com

வெள்ளரி, நுங்கு, வாட்டர் மெலன், தக்காளி போன்ற சம்மரில் தாகம் தணிக்க உதவும் உணவுகளில் இளநீரும் ஒன்று. இளநீரின் உள்ளிருக்கும் நீரைக் குடித்துவிட்டு காயை இரண்டாக வெட்டினால் உள்ளே தேங்காய் உண்டாகக்கூடிய அறிகுறியாய் மலாய் போன்ற பொருள் தோன்றி வழுவழுப்பாய்ப் படர்ந்திருக்கும். இதைத் தமிழில் 'வழுக்கை' என்போம். ஆங்கிலத்தில் 'கோகனட் மலாய்' என்றும் 'கோகனட் க்ரீம்' என்றும் கூறுவர். இந்த கோகனட் மலாய்யை உண்பதால் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

கோகனட் மலாயில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்தின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் ஈரப்பசையுடன் வைக்க உதவுகின்றன. மேலும், சருமத்தின் மிருதுத் தன்மையைக் காக்கவும் உதவுகின்றன.

கோகனட் மலாயில் லாரிக் ஆசிட் (Lauric Acid) என்றொரு அமிலம் உள்ளது. இது ஆன்டி மைக்ரோபியல் குணம் கொண்டது. இக்குணமானது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்து தொற்று நோய்க் கிருமிகளின் தாக்கத்தைத் தடுக்க உதவுகிறது.

நம் உடலுக்கும் மூளைக்கும் உடனடி சக்தியைத் தரவல்லது கோகனட் மலாய். கோகனட் மலாயில் உள்ள நார்ச்சத்தானது செரிமானம் எவ்வித தடங்கலுமின்றி நடைபெற உதவும்; மலச்சிக்கல் நீங்கவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
வியப்பில் விழிகளை உயர்த்தவைக்கும் வெற்றிலையின் மருத்துவப் பயன்கள்!
So many health benefits in coconut baldness

கோகனட் மலாயை அளவோடு உட்கொள்ளும்போது அது வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். அடிக்கடி பசி எடுக்கும் உணர்வை தடுக்கும். இதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்து எடை அதிகரிக்கும் அபாயம் தடுக்கப்படுகிறது.

கோகனட் மலாய், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து ஆகிய ஊட்டச் சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவு. அடுத்த முறை இளநீர் வாங்கிக் குடிக்கும்போது, மறக்காமல் அதன் உள்ளிருக்கும் வழுக்கையை வழித்தெடுத்துத் தருமாறு கடைக்காரரைக் கேட்டு வாங்கி உண்ணுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com