'கோல்கப்பா' (Golgappa) என்பது ஒரு சுவையான ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ். சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பீகார் மற்றும் உத்தரபிரதேஷ் மாநிலங்களில் அறிமுகமாகி பின் உலகம் முழுக்க பரவியுள்ள ஸ்ட்ரீட் ஃபுட் இது. இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
கோல்கப்பா ரவை அல்லது கோதுமை மாவு உபயோகித்து செய்யப்படுவது. இதில் கார்போஹைட்ரேட்கள், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இதில் நிரப்பப்படும் சுவையூட்டப்பட்ட நீர் புளிக்கரைசல், புதினா மற்றும் ஸ்பைசஸ் கலந்தவை. சம்மர் நேரத்தில் இது உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும்.
இதிலுள்ள புளிப்பு மற்றும் மசாலா பொருட்களின் சுவையானது ஜீரண மண்டலத்தில் உள்ள என்ஸைம்களை ஊக்குவித்து செரிமானம் சிறப்பாக நடைபெறவும், செரிமானக் கோளாறு உண்டாவதைத் தடுக்கவும் உதவுகின்றன.
கோல்கப்பாவின் உள்பகுதி வேகவைத்த உருளைக்கிழங்கு, கொண்டைக் கடலை, முளைகட்டிய பயறு ஆகியவற்றால் நிரப்பப்படும். இக்கலவை வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. இதை உண்பதால் உடலுக்கு நிறைய ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கூடுதல் எண்ணெயின்றி தயாரிக்கப்படும்போது கோல்கப்பா ஒரு குறைந்த கலோரி கொண்ட ஸ்நாக்ஸ் ஆகிறது. எடை பராமரிப்பில் கவனம் வைத்திருப்பவர்களுக்கு, இது ஓர் உண்ணத்தக்க உணவாகிறது.
இதில் சேர்க்கப்பட்டுள்ள பிளாக் சால்ட், சீரகம் மற்றும் மிளகாய்த் தூள் போன்றவை மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெற உதவி புரிகின்றன. இதன் மூலம் அதிகளவு கொழுப்பு எரிக்கப்பட்டு உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. பிளாக் சால்ட் போன்ற கூட்டுப் பொருட்கள் இரத்த ஓட்டம் மேம்படவும் உதவுகின்றன.
இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் சமநிலையில் பராமரிக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் சீரகம் மற்றும் மல்லித் தழைகள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டவை. இவை உடலில் ஏற்படக்கூடிய வீக்கங்களைக் குணமடையச் செய்து உடலுக்கு ஆரோக்கியம் தருகின்றன.
இத்தனை ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள கோல்கப்பாவை, சுகாதாரமான சூழ்நிலையில் வாங்கி உட்கொண்டு நலம் பல பெறுவோம். கோல்கப்பாவுக்கு 'பானி பூரி' என்ற மற்றொரு பெயரும் உண்டு.