வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டுப் பாருங்க.. அதிக நன்மைகள் கிடைக்கும்!

வேர்க்கடலை.
வேர்க்கடலை.

வேர்க்கடலையை நாம் வேக வைத்தோ அல்லது வறுத்தோதான் சாப்பிடுவோம். ஆனால் வேர்க்கடலையை நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொண்டால், அதில் அத்தனை நன்மைகள் உள்ளனவாம்.

நட்ஸிலேயே மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடிய வேர்க்கடலையை எப்போதும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக மாலை நேரத்தில் கொடுப்போம். தனியாக சாப்பிடும்போது நன்மைகள் உள்ளதுதான், ஆனால் ஊறவைத்து எடுத்துக்கொள்ளும்போது எல்லா நட்ஸ்களுமே இன்னும் ஆரோக்கியமானதாக மாறும். அந்தவகையில் ஊறவைத்த வேர்க்கடலையின் நன்மைகளைப் பார்ப்போம்.

புரோட்டின் அதிகரித்தல்:

வேர்க்கடலையில் உள்ளத் தாவர வகைப் புரோட்டின்களை முழுமையாகப் பெறுவதற்கு ஊற வைப்பது அவசியம். ஏனெனில் ஊறவைக்கும்போதுதான் புரோட்டின்களின் உயிர்த்தன்மை அதிகரித்து, உடல் அதனை எளிதில் உறிஞ்ச எளிதாக அமைகிறது.

செரிமானம் மேம்பாடு:

வேர்க்கடலையை பச்சையாக சாப்பிடும்போது செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட்டு வயிற்று வலியை உண்டாக்குகிறது. இதுவே நாம் வேர்க்கடலையை ஊறவைக்கும்போது அதில் உள்ள சிக்கலான சேர்மங்கள் உடைத்தெரியப்படுகிறது. இதிலுள்ள பைட்டிக் அமிலம் உடலில் உள்ளச் சத்துகளை உறியவிடாமல் தடுக்கிறது. ஆகையால் ஊறவைத்து சாப்பிடும்போது செரிமானத் தன்மை மேம்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்பட்டும்:

வேர்க்கடலையை ஊறவைக்கும்போது ஊட்டச்சத்து அளவுகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக தாதுக்கள், வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை வெளியிடும் நொதிகள் செயல்படுவதால் இது ஒட்டுமொத்த ஆராக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

எடைப் பராமரிப்பு:

இந்த ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் வெகுநேரத்திற்கு வயிறு நிரம்பிய திருப்தியைக் கொடுக்கிறது. ஆகையால் வேறு எந்த உணவையும் எடுத்துக்கொள்ளத் தோன்றாது. அந்தச் சமையத்தில் வேர்க்கடலையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புச் சத்துகள் வேலைசெய்ய ஆரம்பித்து எடையைக் குறைக்காமலும், அதிகரிக்காமலும் பராமரிக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு:

ஊறவைத்த வேர்க்கடலையில் தான் இதய ஆரோக்கியத்திற்குத் தேவையான மோனோ அன்சாச்சுரேட்டட் (Mono unsaturated) மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் (Polu unsaturated) கொழுப்புகள் அதிகம் உள்ளன. இந்தக் கொழுப்புகள் உடல் எடையைப் பராமரிப்பதோடு இதய ஆரோக்கியத்திற்கும் காரணமாகிறது.

இதையும் படியுங்கள்:
ஊதுபத்தி புகை நரம்பு கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?
வேர்க்கடலை.

ஆன்டி- ஆக்ஸிடன்ட்:

மேலும் இதில் ரெஸ்வெராட்ரோல் போன்ற ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளுக்கும் உதவுகிறது. இதனை ஊறவைக்கும்போது இந்த ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் எளிதில் வெளிவந்து நம் உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

இரத்த சர்க்கரை நோய்க்கு:

வேர்க்கடலையில் நார்சத்து அதிகம் உள்ளது. ஆகையால் இதனை ஊறவைக்கும்போது அதிகளவு நார்சத்து வெளிவந்து நமது உடலால் உறிஞ்சப்படுகிறது. இதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் இருக்க உதவி செய்கிறது.

ஆகையால் அனைவருமே ஊறவைத்த வேர்க்கடலையை தினமும் மாலை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com