
யூரிக் அமிலம் என்பது உடலில் பியூரின் என்ற தனிமத்தை உடைப்பதால் உண்டாகும் ஒரு கழிவு பொருளாகும். இது சிறுநீரகத்தின் மூலம் வடிகட்டி வெளியே அனுப்பப்படும். சில சமயங்களில் சிறுநீரகங்களில் அதிக அளவில் யூரிக் அமிலம் சேரும் போது அதை வெளியேற்ற முடியாமல் இரத்தத்தில் சேர ஆரம்பிக்கிறது. யூரிக் அமிலம் உடலில் அதிகமாக உருவானாலோ அல்லது சரியான நேரத்தில் வெளியேற்றப் படாவிட்டாலோ, அது இரத்தத்தில் சேர்ந்து மூட்டு வலி, வீக்கம் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, முழங்கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களில் கடுமையான எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை சாதாரணப் பிரச்சனை என்று நினைத்து, கண்டுகொள்ளாமல் விட்டால், பிறகு நடக்கும் திறனிலும், உடல் பாகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். அது சிறுநீரகத்தையும் மற்ற உடல் பாகங்களையும் பாதிக்கும். சிலவகை காய்கறிகளை சாப்பிடுவதால் அவை யூரிக் அமில உற்பத்தியை குறைக்கின்றன.
யூரிக் அமில அதிகரிப்பால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியையும் குறைக்கிறது. குறிப்பாக மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கறிகள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்படுகின்றன. மஞ்சள் நிற காய்கறிகளில் உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் சமநிலையை இயற்கையாக பராமரிக்கும் வேதிப் பொருட்கள் உள்ளன.
கிழங்கு மஞ்சள், மஞ்சள் நிற பூசணிக்காய், மஞ்சள் நிற குடை மிளகாய், மஞ்சள் நிற கேரட் மற்றும் மஞ்சள் நிற தக்காளி போன்ற உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக் கூடியவையாக இருக்கின்றன. இதில் ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. அவை யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவுகின்றன. அதன் தனிப்பட்ட மருத்துவ பண்புகளை காண்போம்.
கிழங்கு மஞ்சள்:
நமது தினசரி உணவுப்பொருளில் மஞ்சள் கட்டாயம் சேர்க்கப்படுகிறது.
வாசனைப் பொருள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இதன் பலனை பெற பாலில் , பொடித்த மஞ்சள் மற்றும் அதனுடன் மிளகுத் தூள் சேர்த்து பருகி வந்தால் அது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கல்லீரல் செயல்பாடு சரியாக இருந்தால் யூரிக் ஆசிட் அமிலம் இரத்தத்தில் சேர்வது குறையும்.
மஞ்சள் பூசணிக்காய்:
ஏராளமான நன்மைகளை கொண்ட பூசணிக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம், யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது. பூசணிக்காயை ஜூசாகவோ, ரசம் வைத்தோ அல்லது கூட்டு வைத்தோ சாப்பிட பலன் கிடைக்கும். பூசணிக்காய் இரத்தத்தை சுத்தம் செய்வதில் உதவிகரமாக இருக்கும்.
மஞ்சள் நிற குட மிளகாய்:
வைட்டமின் சி , நார்ச்சத்து , கால்சியம் , ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ஏராளமாக மஞ்சள் நிற குட மிளகாயில் உள்ளது. யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் வேதிப் பொருட்கள் இயல்பிலேயே மஞ்சள் மிளகாயில் உள்ளது. கூட்டுகள் , சூப்கள் , வறுவல் ஆகியவற்றில் மஞ்சள் மிளகாயை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)