எடை குறைப்பு பயணத்தில் சாப்பிடக் கூடாத சில பழங்கள்

இயல்பாகவே சில பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் கலோரிகள் உங்கள் எடையினை அதிகரிக்க வைக்கும்.
these Fruits To Avoid For Weight Loss
these Fruits To Avoid For Weight Loss
Published on

உடல் எடையை குறைத்து உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால், இந்த எடைக் குறைப்பு பயணத்தின் போது ஆரோக்கியத்தை பராமரிக்கும் சில பழங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டி இருக்கலாம் என்பது பலருக்கும் தெரியாது. பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருந்தாலும் கூட எடை குறைப்பு பயணத்தில் பழங்களின் உட்கொள்ளல் அளவை பெருமளவு குறைப்பது நன்மை தரும். சில பழங்களில் அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருப்பதால், இந்த பழங்களை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.

தற்போதைய காலத்தில் மாறிவரும் வாழ்க்கை முறையாலும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், உடல் எடை பலருக்கும் அதிகரித்துள்ளது. உடல் எடை ஒருவரின் தன்னம்பிக்கையைக் குறைப்பது மட்டுமல்லாமல், நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தப் பிரச்சினைகளையும் கொண்டு வருகிறது. உடல் எடையை குறைக்க பலரும் உடற்பயிற்சி செய்கிறார்கள். மேலும் டயட்டையும் கடைபிடிக்கிறார்கள். ஆனால் அதற்கான பலன்கள் கிடைப்பதில்லை.

அதற்கு காரணம் அவர்கள் பசியின் போது பழங்களை உட்கொள்வது தான். இயல்பாகவே சில பழங்களில் இயற்கை சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளன. அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் உங்கள் எடையினை அதிகரிக்க வைக்கும். எடை குறைப்பு திட்டத்தின் போது தவிர்க்க வேண்டிய சில பழங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

வாழைப்பழம் :

எடை குறைப்பு திட்டத்தின் உணவுகளில் பெரும்பாலும் பலர் வாழைப்பழங்களை எடுத்துக் கொள்கிறார்கள். இது உடனடியாக சர்க்கரையை இரத்தத்தில் அதிகரிக்கும் தன்மையை கொண்டது. மேலும் வாழைப் பழத்தில் அதிக கலோரிகள் உள்ளன. என்ன தான் உடற்பயிற்சி செய்து கலோரியை எரித்தாலும் அதை விட அதிக கலோரிகள் இந்த பழத்தில் உள்ளன. அதனால் உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

உலர் பழங்கள் :

ஒரு கைப்பிடி உலர் பழத்தில் தேவைக்கு அதிகமான கலோரிகளும் அதிகளவு சர்க்கரையும் உள்ளன. இவை உடனடியாக ஆற்றலை தருவதால் உடற்பயிற்சி செய்பவர்கள் உலர் பழங்களை சாப்பிட விரும்புகின்றனர். பேரிச்சம்பழம், அத்திப்பழம், உலர்திராட்சைகள் போன்றவற்றில் அதிகப்படியான சர்க்கரைகள் உள்ளன. இதனால் உங்களின் எடை குறைப்பு திட்டத்தில் சரியான பலனை பெற முடியாது. அதனால் எடை குறைப்பின் போது உலர் பழங்களை மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
அதிகமாக சாப்பிடுவதால் மட்டுமல்ல, இதனாலும் உடல் எடை அதிகரிக்கலாம்… ஜாக்கிரதை! 
these Fruits To Avoid For Weight Loss

மாம்பழம் :

மாம்பழம் அனைவருக்கும் பிடித்த ஒரு பழமாக இருந்தாலும் இதில் மிக அதிகளவில் சர்க்கரை சத்துக்கள், கார்போஹைட்ரேடுகள், கலோரிகள் உள்ளன. மாம்பழத்தை சாப்பிடுவது பொதுவாகவே உடலில் கொழுப்பின் அளவில் அதிகரிக்கச் செய்யும். மாம்பழம் அதிக ஆற்றலையும் கொடுக்கும் தன்மை உடையது. சில நேரங்களில் பலருக்கு செரிமான பிரச்சனைகளையும் மாம்பழம் ஏற்படுத்த வல்லது. இது திடீரென்று உடல் சூட்டினை அதிகரித்து வயிற்றுப் போக்கையும் உண்டாக்கலாம். அதற்காக மாம்பழத்தின் நன்மைகளை குறைத்து மதிப்பிடவும் முடியாது. மாம்பழம் பொதுவாக சில மாதங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதால், வாரத்தில் இரண்டு முறைகள் அளவோடு சாப்பிடலாம்.

திராட்சை :

திராட்சையில் அதிக சத்துக்களும் அதனுடன் அதிக சர்க்கரையும் உள்ளது. திராட்சையில் உள்ள சர்க்கரை எடை குறைப்பில் பலனளிக்காது. மேலும் திராட்சையில் உள்ள சில ரசாயனங்கள் கொழுப்பினை குறைப்பதில் பலன் தராது. அதனால் எடை குறைக்க நினைப்பவர்கள் திராட்சை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். திராட்சையில் சில வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் வாரத்தில் இரு நாட்களில் ஒரு கைப்பிடி அளவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
இப்படி செய்தால், உடல் எடை எப்படி குறையும்? 
these Fruits To Avoid For Weight Loss

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com