கண்களே நமக்கு ஒளி தருபவையாகும். அதை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் பேணிக்காக்க வேண்டியது நம்முடைய பொறுப்பாகும். எனவே, கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில ஜூஸ் வகைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. கேரட் ஜூஸ்: கேரட் ஜூஸில் அதிகமாக பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. இது கண்களைப் பாதுகாத்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கண் பார்வையை தெளிவாக்குகிறது.
2. கீரை ஜூஸ்: கீரையில் செய்யப்படும் ஜூஸில் lutein மற்றும் zeaxanthin நம் கண்களை புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது கண்களில் ஏற்படும் ஒளிக்குவியல் சிதைவு நோயை சரிசெய்கிறது.
3. ஆரஞ்சு ஜூஸ்: ஆரஞ்சில் அதிகமாக வைட்டமின் சி சத்து உள்ளது. தினமும் ஒரு ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால், கண்களில் இருக்கும் இரத்த நாளங்களைப் பாதுகாத்து கேட்டராக்ட் வராமல் தடுக்கிறது.
4. பீட்ரூட் ஜூஸ்: பீட்ரூட் ஜூஸில் நைட்ரேட் அதிகமாக இருப்பதால், கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் Oxidative stressஐ எதிர்த்துப் போராட உதவுகிறது.
5. நெல்லிக்காய் ஜூஸ்: நெல்லிக்காய் ஜூஸில் அதிகமாக வைட்டமின் சி சத்து இருக்கிறது. இது கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து கண்களில் உள்ள கருவிழி மற்றும் கண் திசுக்களை பாதுகாக்க உதவுகிறது.
6. தக்காளி ஜூஸ்: தக்காளி ஜூஸில் Lycopene மற்றும் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இது கண்களில் ஏற்படும் பிரச்னையான விழித்திரை பாதிப்பு மற்றும் மாலைக்கண் நோயை குணமாக்க உதவுகிறது.
7. வெள்ளரிக்காய் மற்றும் புதினா ஜூஸ்: வெள்ளரிக்காய் மற்றும் புதினா சேர்த்து செய்யப்படும் ஜூஸை அருந்துவதால், சோர்ந்துபோன கண்களுக்குப் புத்துணர்ச்சி தருகிறது. கண்களில் ஏற்படும் வறட்சி போன்றவற்றை குணமாக்க உதவுகிறது.
8. இளநீர்: இளநீரில் வைட்டமின், அமினோ ஆசிட், மினரல், எலக்ரோலைட் என்று கண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்துமே இருக்கிறது.
9. சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் பூசணி ஜூஸ்: சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது கண்களுக்கு மிகவும் நல்லதாகும். மேலும், பூசணியில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.