சிலர் தாக மிகுதியால் அவசர அவசரமாக நின்றுகொண்டே தண்ணீர் குடிப்பார்கள். அப்படி நின்றுகொண்டே தண்ணீர் குடிப்பதால் உடல் சில பிரச்னைகளை சந்திப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி நின்றுகொண்டு தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் உடல் நலப் பிரச்னைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
இதய பாதிப்பு: தண்ணீரை நின்று கொண்டே குடிக்கும்போது, வழக்கத்தை விட விரைவாக உடல் திரவங்களை செயலாக்கத் தூண்டுகிறது. இது உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. இந்த விரைவான உட்கொள்ளல் காரணமாக சரியான சூழற்சி மற்றும் திரவ சமநிலையை பராமரிக்க இதயம் முயற்சிக்கலாம். இதனால் இதயம் அதிகமாக செயல்பட வேண்டி இருக்கும். இதனால் இதயப் பிரச்னை மோசமடையலாம்.
செரிமானம் அடைவதில் சிக்கல்: நின்றுகொண்டே தண்ணீர் அருந்தும்போது செரிமான செயல்முறை பாதிக்கப்படலாம். நிற்கும்போது உடல் பதற்றமாக இருப்பதால் செரிமானப் பாதை வழியாக நீர் மிக விரைவாக செல்கிறது. இதனால் ஊட்டச்சத்து உறிஞ்சுவது மெதுவாகவும். காலப்போக்கில் வீக்கம், அசௌகரியம் போன்றவை ஏற்படலாம்.
மூட்டு பாதிப்பு: நின்றுகொண்டே தண்ணீர் அருந்தும்போது உடலின் திரவநிலை சீர்குலைகிறது. இதன் காரணமாக மூட்டு வலி மற்றும் எலும்புப் பிரச்னைகள் ஏற்படலாம். விரைவாக உட்கொள்ளும்போது மூட்டுக்களில் திரவம் குவிந்து நிலைமை மோசமடையலாம். முறையற்ற நீரேற்றத்தால் தசைப் பிரச்னை ஏற்படலாம்.
சிறுநீரக செயல்பாடு அபாயம்: நின்ற நிலையில் தண்ணீரை வேகமாக அருந்துவதால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை தவிர்க்கப்படுகின்றது. இது சிறுநீரகத்தின் செயல்திறனைக் குறைக்கிறது. இதனால் சிறுநீரகக் கற்கள் மற்றும் பிற பிரச்னைகளும் ஏற்படுகிறது.
வீக்கம் அதிகரித்தல்: நின்றுகொண்டே தண்ணீர் குடிப்பதால் அதிகப்படியான காற்று உட்கொள்ளலுக்கு வழி வகுக்கலாம். இதனால் வீக்கம், வாயு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
தொண்டை சுருக்கம்: நின்றுகொண்டே தண்ணீர் குடிப்பதால் தொண்டையில் தற்காலிக சுருங்குதல் உணர்வு ஏற்படலாம். இந்த அசௌகரியம் பெரிய அளவில் விழுங்கும்போது எரிச்சலை உண்டாக்கலாம். இயற்கையான விழுங்கும் ஓட்டத்தை சீர்குலைக்கலாம். சமயத்தில் மூச்சுத் திணறலும் ஏற்படலாம்.
நுரையீரல் பாதிப்பு: நின்றுகொண்டே தண்ணீர் அருந்தும் போது உடலில் தேவையான சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தைச் சென்றடையாது.
மேற்கூறிய விளைவுகளைத் தடுக்க காலை மடக்கி, முதுகுத் தண்டை நேராக்கி உட்கார்ந்து தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.