Soya chunks ஆ? மீல்மேக்கர் ஆ? உடலுக்கு நல்லதா? கெட்டதா? பின்னணி என்ன?

Soya chunks
Soya chunks
Published on

நம் அன்றாட பழக்க வழக்கங்களில் உணவு வகைகளில் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? என்ற பல்வேறு குழப்பங்கள் இன்றளவும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த soya chunks. இதனை மீல் மேக்கர் என்றும் கூறுவர். இதன் உண்மையான பெயர் மீல் மேக்கர் கிடையாது. Soya chunks என்பதேயாகும். மீல்மேக்கர் என்பது அதை முதன் முதலில் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் ஆகும். அதன் பெயரிலேயே மீல்மேக்கர் என்று அழைக்கப்படுவது வழக்கமாகி போனது.

Soya chunks முதன் முதலில் கண்டுபிடித்தவர் Nave என்ற அமெரிக்கர். 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அதிகமாக இருந்தது. அதனை சரி செய்வதற்காக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட போது சோயாபீன்ஸிலிருந்து சோயா எண்ணெய் எடுக்கப்பட்டு மீதமுள்ள சக்கையை  நன்கு பவுடராக்கி அதிலிருந்து soya chunks தயாரித்து உள்ளனர். MSF என்று அழைக்கக்கூடிய Mysore Snacks Factory நிறுவனம்தான் அதனை முதன் முதலில் மீல் மேக்கர் என்ற பெயரில் விற்பனை செய்துள்ளது. சில நாட்களில் அதுவே அதன் பெயராகி இன்று வரை கூட பெரும்பாலான மக்கள் அதனை மீல்  மேக்கர் என்றே  அழைக்கின்றனர்.

இந்த soya chunks உணவில் கொண்டு வருவதற்கு முன்னர் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனிதர்கள் எடுத்துக்கொள்ளும் அளவை போல ஐந்து மடங்கு எலிகளுக்கு கொடுக்கப்பட்டு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் எலிகளின் உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் எலிகளின் உடற்கூறுகளும் மனிதனும் உடற் கூறுகளும் பல்வேறு வகையில் வேறுபடுவதால் இது உண்ண தகுந்த பொருள் என்பது என்று  ஆராய்ச்சி முடிவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சோயா சங்க்ஸ் உடலுக்கு நல்லதா?.. வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்!
Soya chunks

மீல்மேக்கரை சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா? என்ற கேள்விகள் இன்றும் நம்மிடையே இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

மீல் மேக்கரில் அசைவ உணவுகளுக்கு இணையான புரதச்சத்து உள்ளது. சைவ உணவுகளை விரும்புபவர்கள் இதனை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் செரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்கு பயன்படுகிறது. இதில் உள்ள அதிகமாக விட்டமின் மற்றும் மினரல்களின் பயன்பாடு காரணமாக இதய ஆரோக்கியத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைப்பதற்கு இது பயன்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளும் இதனை தாராளமாக உணவில் எடுத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்வதற்கு இந்த மீல் மேக்கர் முக்கிய பங்காற்றுகிறது. இதனை ஆண்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால் அவர்களின் மார்பகம் பெரிதாகும் என்ற தவறான புரிதல்களும் இன்று வரை நிலவி வருகிறது. ஆனால் அதற்கு இதனை சாப்பிடுவது மட்டுமே முக்கிய காரணம் என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இதனைத் தாண்டி சாஸ், கேக் போன்ற உணவு வகைகளிலும் அதனை கெட்டிப் படுத்துவதற்காக இந்த சோயா மாவு ஊடு பொருளாக சேர்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உடல் எடையை அதிகரிக்க உதவும் Soya Chunks… எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா? 
Soya chunks

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நன்று. அதிலும் குறிப்பாக தைராய்டு சுரப்பு குறைவாக இதனை சாப்பிடவே  கூடாது. தைராய்டு பிரச்சினை உள்ளவர்களை தவிர்த்து மற்ற அனைவரும் இதனை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இதனை அடிக்கடி உணவில் சேர்க்காமல் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்ற அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அவ்வாறு உணவில்  சேர்த்துக் கொள்ளும்போதும் அதிக அளவில் சேர்க்காமல் குறைந்தபட்ச 100 கிராம் என்ற அளவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com