

சைனஸ் என்றால் மூக்கின் வடிகுழாய்களில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது. இதன் பொதுவான அறிகுறிகள் மூக்கடைப்பு, கெட்டியான சளி மற்றும் முகத்தில் வலி. நீராவி பிடித்தால் உண்மையிலேயே சைனஸ் பிரச்னை குணமாகுமா? இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Steam inhalation என்றால் சுடுத்தண்ணீரை வைத்து அதிலிருந்து வரக்கூடிய தண்ணீரை Inhale செய்வதை தான் Steam inhalation என்று கூறுகிறோம். சைனஸ் (Sinus problem) வந்தாலோ அல்லது சளி பிடித்தாலோ உடனேயே Steam inhalation செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இதற்கான முக்கியமான காரணம், சளி பிடித்தால் மூக்கு பிளாக் ஆகிவிடும்.
சாதாரணமாக மூக்கில் இருக்கும் சதைகள் வீங்கிக்கொண்டு மூக்கை பிளாக் செய்துவிடும். இதனால் உங்களால் சரியாக மூச்சு விட முடியாது. நமக்கு இதுப்போன்ற சளி பிரச்னைகள் வரும்போது உடல் சீக்கிரமே Dehydrate ஆகிவிடும். உடல் நிலை சரியில்லாத சமயத்தில் சாப்பிடுவதோ, தண்ணீர் குடிப்பதோ மிகவும் குறைவாக தான் இருக்கும். இதனால் Dehydration இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
சாதாரணமாக நம் மூக்கிற்குள் செல்லும் காற்றை ஈரப்பதமாக மாற்றி தான் உள்ளே அனுப்பும். ஆனால், இப்போது மூக்கை அடைத்திருக்கும் போது நம் உடலில் தண்ணீர் Dehydrate ஆகிறது. இதனால் மூக்கில் உள்ள சளி கட்டியாகி சைனஸ் பிளாக் ஆகிவிடுகிறது. இதனால் உருவாகும் பிரஷர் தான் நமக்கு வலியாக தெரிகிறது.
இப்போது Steam inhalation செய்யும் போது என்ன நடக்கும் என்றால், இது கெட்டியான சளி தளர்த்துவதற்கு உதவும். சளி தளர்வதால் சைனஸ்க்குள் போகும் அடைப்பு திறந்துக் கொள்ளும். இவ்வாறு நடக்கும் போது சைனஸில் இருக்கும் பிரஷர் குறைந்து சளி வெளியேறிவிடும். இதனால் தான் Steam inhalation அவசியம் செய்யவேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது சைனஸூக்கு மட்டும் பயன்படுவதில்லாமல் தொண்டை, நுரையீரல் பிரச்னையிருந்தாலும் Steam inhalation உதவியாக இருக்கும்.
சளி என்பது சைனஸில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நெஞ்சிலும் இருக்கலாம். தொண்டை வறண்டு போவதால் வறட்டு இருமல் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. Steam inhalation செய்யும் போது மூக்கில் உள்ள சளி நீங்கி தொண்டைக்கும் சற்று இதமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் நெஞ்சில் சளி இருந்தால் அதையும் கரைக்க உதவும். எனவே, இருமலின் போது தானாகவே சளி வெளியேறிவிடும்.
Steam inhalation ஐ எப்படி சரியாக செய்வது என்பது பலபேருக்கு தெரிவதில்லை. Steam inhalation செய்யும் போது அதற்கென்று இருக்கும் Vaporizer Machine ஐ வைத்தும் பிடிக்கலாம்.
இல்லையென்றால் வீட்டில் ஒரு பாத்திரத்தில் சுடுத்தண்ணிரை காயவைத்து அதில் துண்டை போட்டும் பிடிக்கலாம். இதில் கட்டாயமாக மருந்து போட்டு தான் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மருந்துப்போட்டு பயன்படுத்துவதும் தவறில்லை. ஆனால், அந்த மருந்து மூக்கில் Irritation ஐ உண்டாக்குகிறது என்றால், பயன்படுத்த வேண்டாம்.
இந்த Steam ஐ என்றைக்குமே நாம் மிகவும் சூடாக Inhale செய்யக்கூடாது. அவ்வாறு செய்யும் போது அது நேராக நுரையீரலுக்கு சென்று அங்கிருக்கும் திசுக்களை பாதிக்கும். இதனால் மூச்சு விடுவதற்கே திணறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மிதமான வெதுவெதுப்பான சூட்டில் ஆவி பிடிப்பது சிறந்தது. இதை சரியாக செய்தால் அதுவே போதுமானதாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)