

ஒவ்வொரு மனித உடலிலும் 37 லட்சம் கோடி செல்கள் உள்ளன. இது இதுவரை யாருக்கும் தெரியாது. அவற்றின் சிறப்பு வாய்ந்தவை ஸ்டெம் செல்கள் ஆகும். இவை என்ன தனித்துவம் பெற்றுள்ளன? ஒரு ஸ்டெம் செல் தானே உடைந்து, மீண்டும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மை உடையது.
உடலின் எந்தப் பகுதி சேதமடைந்தாலும் இந்த ஸ்டெம் செல்லை வைத்தால் மீண்டும் வளர ஆரம்பித்து புதிதாக தோன்றிவிடும் தன்மை கொண்டது. ஒரு ஆரோக்கியமான மனித உடலில் சராசரியாக 50,000 முதல் 2 லட்சம் வரை ஸ்டெம் செல்கள் இருக்கும். மனிதன் வளர வளர இந்த ஸ்டெம் செல்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு போகும். ஒரு குழந்தையின் உடலில் சுமார் பத்து லட்சம் ஸ்டெம் செல்கள் இருக்கும். பிரசவத்தின் போது தொப்புள் கொடியை கத்தரிக்கும் போது அதில் உள்ள ஸ்டெம் செல்கள் 90 விதமான உடல் பிரச்சினைகளை தீர்க்க வல்லது.
நம் உடம்பின் மூளையில் ரத்தம், எலும்பு மச்சை, தோல் திசுக்கள் இவற்றில் ஸ்டெம் செல்கள் காணப்படுகின்றன. ஸ்டெம் செல்கள் நம் உடம்பில் உள்ள பல வியாதிகளை குணப்படுத்துகிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
இவை குணப்படுத்தும் நோய்கள் :
ரத்தப் புற்று நோய், நிணநீர் குழாய் புற்று நோய், எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய், ரத்த சோகை, நரம்பு சிதைவு நோய், இதயநோய், டைப் ஒன் நீரழிவு நோய், கீல் வாதம், தண்டுவட பிரச்சனைகளை எல்லாம் ஸ்டெம் செல்கள் குணமாக்குகிறது.
சில உயிரினங்களுக்கு உறுப்புகள் பழுதுபட்டால் மீண்டும் அவை முளைத்து விடும். பல்லியின் வால் துண்டிக்கப்பட்டால் அந்த வால் மீண்டும் முளைத்து விடும். இதற்கு அதன் உடம்பில் உள்ள ஸ்டெம் செல்கள் தான் காரணம். இதேபோன்று நட்சத்திர மீன், கடல் குதிரை, கடல் பாம்பு, தட்டை புழு இவற்றிற்கும் உடல் பாகங்கள் சேதமடைந்தால் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் தன்மை உள்ளது.
இதே போன்று தான் மனிதர்களின் தலைமுடி, நகம் இவற்றை வெட்டினால் மீண்டும் முளைக்கும் தன்மை உடையது.
குழந்தைகளுக்கு 20 பால் பற்கள் முளைக்கும். ஆறு வயதில் விழ ஆரம்பித்து 12 வயதில் முழுமையாக பல் வளர்ச்சி அடைந்து விடும். 17 முதல் 21-வது வயதில் அறிவு பல் முளைக்கும்.
இனி விஷயத்துக்கு வருவோம்...
தற்போது ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் விழுந்த பற்களை மீண்டும் வளர வைக்கலாம். இது ஒரு மேஜிக் போன்று உள்ளது. மனிதன் வாயில் ஐந்து வகையான ஸ்டெம் செல்கள் இருக்கின்றன. பல் குழியில் காணப்படும் ஸ்டெம் செல்கள் மீண்டும் பற்களை உருவாக்கும் தன்மை கொண்டவை. மூன்றாவது கடவாய் பல் சதைகள் ஈறுகளிலும் திசுக்களிலும் ஸ்டெம் செல்கள் காணப்படுகின்றன.
இவை பல்லுக்கும் சதைக்கும் இடையே உள்ளன. பல் வேரின் நுனியில் இவை கூழ் போன்று காணப்படும். ஈறு தசைநார்களிலும், உதிரும் பற்களிலும் ஸ்டெம் செல்கள் உள்ளன. இத்தகைய செல்கள் மூலம் விழுந்த பற்களை மீண்டும் முளைக்க வைக்கலாம்.
இந்த ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் சேதமடைந்த பற்கள் ஈறு நோயால் தேய்ந்த பற்கள் போன்றவற்றை பழைய நிலைக்கு கொண்டு வரலாம். வேர்ப்பகுதியை பழுது பார்க்கலாம். உமிழ்நீர் சுரப்பியை புதுப்பிக்கலாம். வாயில் உள்ள அலர்ஜியை சரி செய்யலாம்.
உடலில் உள்ள பழுதுபட்ட உறுப்புகளை இந்த செல் மூலம் மீண்டும் புதுப்பிக்கலாம். புற்றுநோய் மற்றும் புதிய நோய்களுக்கு உள்ள ஆராய்ச்சிகளை ஸ்டெம்செல் மூலம் சோதிக்கலாம். அடுத்த 10 ஆண்டுகளில் ஸ்டெம் செல் சிகிச்சைமுறை பயன்பாட்டுக்கு வந்து விடும்.
மனிதர்களின் ஆராய்ச்சி பல புதிய பரிணாமங்களுக்கு வழிவகுத்து வருகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)