
அல்சர் நோய் வயிற்று பிரச்னைகளில் பொதுவான ஒன்று. 100 பேரில் 60 பேர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் நாம் எடுத்துக்கொள்ளும் தவறான உணவுப் பழக்கங்கள், மன அழுத்தம், மற்றும் தீய பழக்கங்கள் ஆகும். இந்நிலையில், அல்சர் நோயை குணப்படுத்த சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றினால், வீட்டிலிருந்தே இதை குணப்படுத்தவும் முடியும்.
அல்சர் வருவதற்கான காரணம்
நாம் சரியான முறையில் உணவு எடுத்து கொள்ளாததும் அல்சர் நோய் வருவதற்கான முக்கிய காரணமாகும். நாம் உணவு எடுத்துக்கொள்ளும் போது, நம் வயிற்றில் சில சுரப்பிகள் உணவுகளை செரிக்க உதவுகிறது. ஆனால், காலை உணவை தவிர்ப்பது, உணவு பழக்கங்கள் மாறுவது போன்ற காரணத்தினால் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது, அதுவே அல்சர் நோயாக மாறுகிறது.
சரியான நேரத்தில் சரியான உணவு எடுத்துக் கொள்ளாததும், இதற்கான முக்கிய காரணமாகும். இதை தவிர, வேறு காரணங்களாலும் அல்சர் நோய் பாதிக்கிறது.
மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல்:
ஆரோக்கியமாக உணவுகளை சரியான நேரத்தில் உட்கொண்டும் அல்சர் நோய் பாதிக்க வாய்ப்புள்ளது. இதற்கான முக்கிய காரணம் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலாகும். மன உளைச்சலால் உடலில் ஏராளமான அமிலங்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன, அதனால் வயிற்றில் புண்கள் ஏற்படும். எனவே, மன அழுத்தத்தை தவிர்த்து கொள்வது சிறந்தது.
உணவு பழக்கங்கள்
நாம் உண்ணும் உணவு காரமாகவும், புளிப்பாகவும் எண்ணெய், மற்றும் அதிக மசாலா நிறைந்த உணவுகளாக இருந்தாலும் அல்சர் நோயை ஏற்படுத்துகின்றன.
அதிக உணவு
உணவுகளை மிகுந்த அளவில் எடுத்துக்கொள்ளும்போது, அந்த உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. அதனால் அதிக அமிலங்கள் உருவாகி வயிற்று புண்கள் ஏற்படலாம்.
மது மற்றும் புகை:
மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களாலும், தவறான மருந்துகள் எடுத்துக்கொள்வதாலும், அல்சர் நோயை ஏற்படுத்த முடியும்.
மாத்திரைகள் உணவிற்கு முன் அல்லது பின் என்பதை மருத்துவர்கள் பரிந்துரைப்படி சரியாக எடுக்க வேண்டும், தவறான நேரத்தில் எடுத்துக்கொள்வது அல்சர் நோயின் காரணமாக இருக்கலாம்.
குணமடைதற்கான வழிகள்:
1. அல்சர் நோய் பாதித்தவர்களுக்கு, முதல் கட்டத்தில் ஒரு நல்ல மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம்.
2. சரியான நேரத்தில், சரியான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. காலையில் எழுந்தவுடன் சீரகத்தண்ணியை வெறும் வயிற்றில் குடித்தால், வயிற்றில் உள்ள புண்கள் வளராது.
4. அல்சர் பாதித்தவர்கள் மணத்தக்காளி கீரை மற்றும் அகத்திகீரை போன்ற கீரைகள் உண்பதால், புண்கள் குணமாகும்.
5. பழங்களில் ஆப்பிள், மாதுளை, வாழைப்பழம், மாம்பழம் ஆகியவை வயிற்றுப் புண்களை குணப்படுத்த உதவுகின்றன.
6. வாழைத்தண்டு மற்றும் வாழைப்பூ ஆகியவை வயிற்றுப் புண்கள் குணமாக்க சிறந்த முறைகள்.
7. பால், வெண்ணை, தயிர், நெய் போன்ற உணவுகள் வயிற்றுப் புண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இப்படி, பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம், அல்சர் நோயினை வீட்டிலிருந்தே எளிமையாக குணப்படுத்த முடியும்.