
ஒருவர் திடீரென்று மயக்கமடைந்து விழுகின்ற நிலையில், அவரை மயக்கத்திலிருந்து விடுவித்து விட்டால் போதும் என்று பலரும் நினைக்கின்றனர். மயக்கம் என்பது சாதாரணமானதல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
மயக்கம் தெளிந்த நிலையில், அவரிடம் ‘STR' எனும் மூன்று ஆங்கில எழுத்துகளிலான மூன்று படிநிலைகளைச் சோதித்துப் பார்ப்பது நல்லது என்கின்றனர்.
S - Ask the individual to SMILE - அவரைப் புன்னகைக்கச் சொல்லுங்கள்.
T - Ask the person to TALK A SIMPLE SENTENCE (Coherently) - ஒத்திசைவான ஒர் வாக்கியத்தைச் சொல்லச் சொல்லுங்கள். உதாரணமாக, ‘நேற்று மழையில் நனைந்தீர்களா?’ என்று கேட்டுப் பாருங்கள்.
R - Ask him or her to RAISE BOTH ARMS - இரு கைகளையும் உயர்த்தச் சொல்லுங்கள்.
அவர் மூன்றையும் சரியாகச் செய்து விட்டால், அவருக்குச் சாதாரண மயக்கமென்று எடுத்துக் கொள்ளலாம்.
மூன்றில் ஒன்று சரியாகத் தோன்றவில்லையென்றாலும், அவருக்குப் பக்கவாத நோய்க்கான அறிகுறி இருப்பதாகக் கருதி, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட வேண்டும்.
மேற்காணும் மூன்று நிலைகளைத் தவிர்த்து, பக்கவாத (Stroke) நோய்க்கான மற்றொரு அடையாளமும் இருக்கிறது.
மயக்கம் தெளிந்து எழுந்த நபரிடம், அவரது நாக்கை நீட்டச் சொல்லுங்கள். அவரது நாக்கு, வளைந்திருந்தால் அல்லது ஒரு பக்கமாகவோ அல்லது மறு பக்கமாகவோச் சென்றால் அதுவும் பக்கவாதத்தின் அறிகுறியாகும். மயக்கமடைந்து தெளிந்த நபரின் நாக்கில் எந்தவிதமான மாறுபாடுகள் இருந்தாலும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விடுங்கள்.
மருத்துவமனையிலிருக்கும் மருத்துவரிடம், தாங்கள் கண்டறிந்த அறிகுறிகளை முன்பேச் சொல்லி விடுங்கள். அவர் காலதாமதமின்றி, அவருக்கு உடனடியாகச் சிகிச்சையளித்து பக்கவாதம் வராதபடி தடுக்க உதவும். ஒருவர் மயக்கமடைந்து நான்கு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால், அவருக்கு வரவிருக்கும் பக்கவாதப் பாதிப்பைச் சரி செய்துவிட முடியும் என்கின்றனர்.