

எல்லோருக்கும் ஆரோக்கியம் அவசியம். ஆரோக்கியம் இல்லை என்றால், வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. நாம் பல்வேறு உணவுகளை உணர்கிறோம். அவற்றின் நன்மை, தீமை பற்றி அறிவது இல்லை.
இப்போது நாம் எல்லாருக்கும் பொதுவான உணவு ஒன்றைப் பார்க்கப் போகிறோம். அது உணவு மட்டுமே அல்ல. அது உடல் சம்பந்தப்பட்ட பல வியாதிகள் வராமல் தடுக்கிறது. ஆம். தயிர் (Yogurt) மட்டுமே! இதன் நன்மைகள் அதிகம். ஆதலால் இதை சூப்பர் ஃபுட் என்று அழைக்கிறார்கள்.
இங்கு தயிர் மருந்தாகச் செயல்படுகிறது. ஆதலால் வெளியே தயிர் வாங்காமல் வீட்டிலேயே பாலை காய்ச்சி, அது ஆறியவுடன் சிறிது மோர்-ஐ சேர்த்து தயிராக்கி குளிர் சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள்.
வீட்டுத் தயிரில் (Yogurt) அப்படி என்ன உள்ளது?
கால்சியம், புரதம், விட்டமின் பி 12, ப்ரோபயாட்டிக் இருக்கிறது. இந்த ப்ரோபயாட்டிக் நமது குடல், செரிமானம் ஆகியவற்றை சரியாக வைத்துக் கொள்ளும். ப்ரோபயாடிக் என்றால் நல்ல பாக்டீரியாக்கள். வயிற்றுப்போக்கு வந்தால் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் போதுமானது.
மேலும், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆம். உணவே மருந்து. தயிர் ஒரு மருந்து போல. சிறுவர், சிறுமியர் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். தினமும் குறைந்தது ஒரு கப் தயிர் எல்லோரும் சாப்பிட வேண்டும். கால்சியம் தயிரில் உள்ளது. உடல் எலும்புகளை வலுவடையச் செய்யும். விட்டமின் பி 12 அறிவாற்றலை அதிகரிக்கும். எனவே, குழந்தைகளும் சாப்பிட வேண்டும்.
தயிரில்(Yogurt) நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது. இது இதயத்திற்கு நல்லது. மேலும் இதில் உள்ள புரதம் நீரழிவு (சக்கரை நோய்) நோயிக்கு மருந்துபோல செயல்படும்.
தயிரின் பெருமைகளைச் சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். தயிருக்கு நிகராக எதுவும் இல்லை.
ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு கப் தயிர் உண்ண வேண்டும். கப் தயிரை அப்படியே சாப்பிடலாம். இல்லை என்றால் உணவுக்கு சைட் டிஷ் ஆக பயன்படுத்தலாம். ஒரு வேளையாவது வீட்டு தயிர் சாப்பிட வேண்டும். தயிர் சிறப்பு இப்போது எல்லோருக்கும் புரிந்து இருக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)
கூடுதலாக ஒரு வேண்டுகோள்:
இப்போது பசு பற்றி பார்ப்போம். பால், வெண்ணெய், நெய், மோர் என்று எல்லாவற்றையும் தருகிறது. அது நம்மிடம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. வாயில்லா ஜீவன்.
அதை போற்ற வேண்டாமா? அதை கொன்று உண்பது தவறு. இதற்கு தேவை வெறும் மனிதாபம் தான். நமக்கு உதவி செய்யும் ஒரு ஜீவனைக் கொல்லுவது எப்படி தர்மம் ஆகும்? இது என் கருத்து. இது சரியே என திடமாக நம்புகிறேன். தயவு செய்து செய்து அந்த ஜீவனைக் கொல்லுவது எப்படி சரியாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள். நீங்களே ஒரு நல்ல முடிவிற்கு வருவீர்கள்.
இது மதப் பிரச்னை இல்லை. இது மனிதப் பிரச்னை.
கோ மாதா நம் குல மாதா!
சிந்திப்போமே!