

‘சூப்பர் பக்ஸ்’ (Superbug Infection) பற்றியும், அவை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் குறித்தும், அவற்றிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
‘சூப்பர் பக்ஸ்’ (Superbugs) என்பவை சாதாரண ஆன்டிபயாடிக் (antibiotic) மருந்துகளுக்குக் கட்டுப்படாத, மருந்து எதிர்ப்புத் திறனைப் பெற்ற ஆபத்தான பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை கிருமிகள் ஆகும்.
இவை வழக்கமான சிகிச்சைகளை முறியடித்து, உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. உலகளவில் இந்த கிருமிகளால் வருடத்திற்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் இறக்கின்றனர்.
கடுமையான வெயில் மற்றும் வெப்பம் காரணமாக ‘சூப்பர் பக்ஸ்’ வகை பாக்டீரியாக்கள் மண்ணில் உருவாகின்றன. இந்த கிருமிகள் எந்த மருந்தகங்களையும் எதிர்க்கும் திறன் கொண்டவை. ஸ்டைபலோகாக்கஸ் அரெஸ், என்ட்ரோ காக்கி, கேன்டீடாஆரிஸ் போன்ற சில பாக்டீரியாக்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்த ‘சூப்பர் பக்ஸ்’ பாக்டீரியாக்களால், நிமோனியா, ரத்தநோய், சிறுநீர் தொற்றுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அதுபோன்ற நிலையில் மருந்துகள் பலன் அளிக்காமல் போனால் கடுமையான பாதிப்புக்கு வழிவகுக்கும்.
உலக அளவில் ஆண்டுதோறும் ஏராளமானோர், இந்த ‘சூப்பர் பக்ஸ்’ பாக்டீரியாக்கள் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். கடும் வெப்பம் நிலவும் நாடுகளில் இந்த கிருமிகள் அதிகமாக காணப்படுகின்றன.
பல்வேறு காரணங்களால் ஒரு நாட்டின் சுற்றுச்சூழல் மோசமாக மாறி காலநிலை மாற்றம் ஏற்படும் போது வறட்சி உருவாகி, ‘சூப்பர் பக்ஸ்’ பாக்டீரியாக்கள் உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது.
அசுத்தமான நீர், உணவு, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகள் மற்றும் சுகாதாரமற்ற மருத்துவமனைச் சூழல் மூலம் பரவுகின்றன.
இந்த பாக்டீரிக்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்க உணவுக்கு முன்னும் பின்னும் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும். ஏதேனும் நோய்களுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுக்கும்போது டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஏனெனில் ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக அல்லது தவறாகப் பயன்படுத்துவதால், கிருமிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் திறனைப் பெறுகின்றன.
ஒருவருக்கு ‘சூப்பர் பக்ஸ்’ பாக்டீரியா தாக்கினால் காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் அல்லது மார்பு வலி, வயிற்று வலி அல்லது வயிற்றுப் போக்கு, சோர்வு, தசை, மூட்டுவலி ஏற்படலாம்.
உங்களுக்கு ‘சூப்பர் பக்ஸ்’ தொற்று ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்த்ததை விட நீண்ட காலத்திற்கு அல்லது பல மருந்துகளைக் கொண்டு சிகிச்சை பெற வேண்டியிருக்கலாம்.
அதேபோல் ஒரு சிலருக்கு, ‘சூப்பர் பக்ஸ்’ கிருமியால் தொற்று இருப்பதற்கு எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. ஆரோக்கியமான நபர்கள், அறிகுறிகள் ஏதுமின்றி கிருமிகளைத் தங்கள் உடலில் கொண்டிருக்கும்போது, தாங்களே உணராமல் மற்றவர்களுக்கு பாதிக்கப்படக்கூடிய நோய்த்தொற்று பரவக்கூடும்.
‘சூப்பர் பக்ஸ்’ தொற்றின் அறிகுறிகள், மற்ற தொற்றுகளின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். ஆனால், இந்த அறிகுறிகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளுக்குப் பலனளிப்பதில்லை என்பதே இதிலுள்ள வேறுபாடு.
இளம் மற்றும் ஆரோக்கியமான நபர்களுக்குக் கூட, ஏன் யார் வேண்டுமானாலும் ‘சூப்பர் பக்ஸ்’ தொற்றால் பாதிக்கப்படலாம். நாள்பட்ட நோய் அல்லது புற்றுநோய் சிகிச்சை காரணமாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்தவர்களுக்கு, ‘சூப்பர் பக்ஸ்’ தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம்.
‘சூப்பர் பக்ஸ்’ தடுப்பு முறைகள்:
சூப்பர்பக்ஸ் என்பது எவ்வளவு அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், அவற்றால் தொற்று ஏற்படாமல் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள வழிகள் உள்ளன.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)
உங்கள் கைகளை எப்போது நன்கு கழுவுங்கள்.
கிருமி நீக்கம் செய்யப்பட்ட உணவை உண்ணுதல்.
உங்கள் குடும்பத்தினருக்குத் தடுப்பூசி போடுங்கள்.
மருத்துவர் ஆலோசனையின்றி ஆன்டிபயாடிக் மாத்திரைகளைத் தவிர்த்தல்.
இறைச்சி மற்றும் காய்கறிகளை நன்றாக கழுவி சமைக்க வேண்டும்.
பாதுகாப்பான உணவு தயாரிப்பு முறைகளைப் பின்பற்றவும்.
ஆணுறை அல்லது பிற தடுப்பு முறையைப் பயன்படுத்தி உடலுறவு கொள்ளுங்கள்.
தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
உடலில் காயங்கள் இருந்தால் சுத்தமாக வைத்திருக்கவும்.
உங்களுக்கு நாள்பட்ட நோய் இருந்தால், உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.
‘சூப்பர் பக்ஸ்’ தொற்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நாள்பட்ட நோயின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பவர்களுக்குத் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது என்பதை மட்டும் மறக்க வேண்டாம்.