ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கொய்யா பழத்தின் நன்மைகள்!

Surprising Guava Benefits
Surprising Guava Benefitshttps://tamil.herbalsinfo.com

ம் அன்றாட வாழ்வில் மிகவும் எளிதாகவும், விலை மிகக் குறைவாகவும் கிடைக்கும் ஒரு பழம் என்றால் அது கொய்யாதான். இதில் உடல் நலனுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடெண்டுகள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இதில் உள்ள இயற்கையான சர்க்கரை அளவு உடலுக்கு பல நன்மைகளைத் தரும் என்பதுடன், இந்தப் பழம் குறைந்த கலோரிகளைக் கொண்டதாக இருப்பதால் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை அனைவரும் சாப்பிடலாம்.

கொய்யா பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சீராக நடைபெறுவதற்கு உதவுவதுடன், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் தருகிறது. குடல் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது நன்மை தரும். கொய்யாவில் இருக்கும் நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மூல நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று அமெரிக்க வேளாண்மை துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொய்யா இலையிலும் நலன் காக்கும் சத்துக்கள் உள்ளதால் அதன் சாறு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. கொய்யா சாறில் ஸ்பாஸ் மோலிடிக் எனும்  பண்புகள் உள்ளதால் இந்த சாறை அருந்துவதால் பெண்களின் கர்ப்பப்பை பிரச்னை மற்றும் மாதவிடாய் வலிகளை  நீக்கி நிவாரணம் தருகிறது. வயிற்றுப்போக்கு சமயத்திலும் கொய்யா இலை சாறு அருந்தி  நிவாரணம் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள்! 
Surprising Guava Benefits

மேலும், கொய்யா இலைகளில் நார்ச்சத்துடன் பொட்டாசியம் மற்றும் பாலி சாக்கரைடுகள் உள்ளதால் இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை பாதுகாக்க உதவும். கொய்யா பழத்தில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து சளி தொந்தரவு பாதிப்புகளைக் குறைக்கும். உடலில் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடி செல்களை மேம்படுத்தும் செயலைச் செய்கிறது. புற்றுநோய், இதய நோய் போன்ற கடும் பாதிப்புகளை நெருங்க விடாமல் காக்கிறது. பழுத்த கொய்யாவில் அதிக வைட்டமின் சி இருப்பதால் அதை உண்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள்  கொய்யா பழத்தில் உள்ளதால், புற்றுநோயை உருவாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் வல்லமை கொண்டதாக உள்ளது. மேலும், கொய்யா பழத்தில் வைட்டமின் சியுடன் வைகோபீன் அதிகமாக இருப்பதால் மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவர் அனுமதியுடன் தாராளமாக கொய்யா பழத்தை உண்ணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com