உடல் காட்டும் நோய் அறிகுறிகளும் தீர்வுகளும்!

Body symptoms and solutions
Body symptoms and solutions
Published on

மது உடல் உறுப்புகளில் தென்படும் ஒருசில அறிகுறிகளை வைத்து நம் உடலில் எந்தவித நோய் பாதிப்பு உள்ளது என்பதை பெரும்பாலும் தெரிந்து கொள்ளலாம். அதுபோன்ற சில அறிகுறிகளைக் கொண்டு நாம் கண்டறிய உதவும் சில உடல் பிரச்னைகளை இந்தப் பதிவில் காண்போம்.

கண்கள் வழக்கத்துக்கு மாறாக உப்பி இருந்தால், சிறுநீரகங்களின் செயல்பாடு சீராக இல்லை என்று அர்த்தம். எனவே, உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் அவை கண்களைச் சுற்றி தேங்கி விடுவதால் கண்கள் வீக்கமாக காணப்படுகிறது. இப்பிரச்னையை தடுக்க உடலில் உப்பை குறைக்க வேண்டும்.

அதிகப்படியான வேலை, உடலில் மக்னீசியம் குறைவு போன்ற காரணங்களால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது. இப்பிரச்சனைகளை போக்க போதுமான அளவு ஓய்வு எடுத்துக்கொள்வதுடன், உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சருமத்தில் தடிப்புகள் இருந்தால் அது இருதய நோயாக இருக்கலாம். அதுவும் காதுகளுக்கு பக்கத்தில் சருமம் தடித்து இருந்தால் அது பெரும்பாலும் இருதய பாதிப்பை குறிப்பதாகக் கொள்ளலாம். இதற்கு மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். தியானம், யோகா பயிற்சி செய்ய மன இறுக்கம் குறைந்து, சரும நோய்கள் குணமாகும்.

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருந்தால் நம் உடலில் உள்ள இரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும். ‌இதனைப் போக்க தேவையான தண்ணீரை அருந்துவது அவசியம்.

கல்லீரல் பாதிப்பு அடையும்போது உடலிலுள்ள பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்கள் வெளியேற முடிவதில்லை. அதனால் சருமம் மஞ்சள் நிறத்திற்கு மாறும். இதற்கு உடலில் ஆல்கஹால் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடிப்பழக்கத்தை கை விட வேண்டும்.

பாதம் உணர்வில்லாமல் இருப்பது, மரத்துப் போவது, அதிக தாகம், சோர்வு போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகள். இதற்கு இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைப்பது, கிரீன் டீ, பிளாக் டீ அருந்துதல் போன்றவை கை கொடுக்கும். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்கள்:
மருதாணி இலை அர்ச்சனை செய்தால் மண வாழ்க்கை அமைத்துத் தரும் அம்மன்!
Body symptoms and solutions

தைராய்டு இருந்தால் பாதங்களில் வெடிப்பு தோன்றும். தைராய்டு சுரப்பி சருமத்துக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இது சரியாக வேலை செய்யாதபோது பாதங்களில் சருமம் உலர்ந்து போகும். முடி உதிர்தல், எடை அதிகரிப்பு இருக்கும். மருத்துவ ஆலோசனையும் அவசியம்.

உள்ளங்கை சிவந்து இருந்தால் அது கல்லீரல் பிரச்னையாக இருக்கும். ஏனெனில், நோய்வாய்ப்பட்டு கல்லீரலால் நம் இரத்தத்தில் உள்ள ஹார்மோன்களை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும். அதனால் இரத்தத்தின் நிறம் அதிக சிவப்பாக இருக்கும். இதற்கு கீழாநெல்லியை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம். மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இவை அனைத்தும் உடல் காட்டும் அறிகுறிகள் மட்டுமே. பிரச்னைகளின் தன்மைக்கு ஏற்ப மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். ஆரம்ப நிலையில் எந்த நோயையும் குணப்படுத்தி விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com