பெண்களை பாடாய்ப்படுத்தும் ஒற்றைத் தலைவலி - தீர்வுதான் என்ன?

migraines
migraines
Published on

ஒற்றைத் தலைவலி என்பது மிகவும் பொதுவான நரம்பியல் நிலைகளில் ஒன்றாகும். இது எந்த வயதிலும் ஏற்படலாம். ஆண்களை விட பெண்களை ஒற்றைத் தலைவலி என்பது அதிகம் பாதிக்கிறது.

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள்:

  • தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலியை உணர்வது,

  • குமட்டல் மற்றும் வாந்தி,

  • பசியின்மை, சோர்வு, மன அழுத்தம்

  • தலைசுற்றல், தூக்கமின்மை 

  • அதீத குளிர்ச்சி அல்லது வியர்வை

  • நாள்பட்ட ஒற்றைத் தலைவலி நீண்ட நேரம் நீடிக்கும் அல்லது அடிக்கடி ஏற்படும்.

காரணங்கள்:

  • ஒற்றைத் தலைவலி என்பது மரபணு ரீதியாக இருக்கலாம்.

  • சில வாசனை திரவியங்கள், மன அழுத்தம், தூக்கமின்மை, கண் பார்வையில் பிரச்னை, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது போன்றவை  ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு காரணமாகலாம். இருப்பினும் நாள்பட்ட தலைவலி ஒற்றைத் தலைவலியின் அறிகுறியாக இருக்கலாம். சில நேரங்களில் கடுமையான தலைவலிக்கும், ஒற்றை தலைவலிக்கும் அறிகுறிகள் ஒரே மாதிரியாகத் தோன்றலாம்.

  • சீஸ், சாக்லேட், சிட்ரஸ் பழங்கள் மற்றும் ஆல்கஹால் போன்றவை ஒற்றைத் தலைவலியைத் தூண்டலாம்.

  • அதிகப்படியான காஃபின் உட்கொள்ளுதல் ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கும். அதிகப்படியான காப்பி, டீ அருந்துதல் போன்றவை தலைவலியைத் தூண்டும். எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.

  • ஹார்மோன்கள் மாறுபாடு: மாதவிடாய் சுழற்சி காலங்களிலும் மற்றும் கர்ப்பம் போன்ற நேரங்களிலும் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களின் அளவு மாறுபடுகிறது. இது ஒற்றைத் தலைவலிக்கு ஒரு காரணமாக அமைகிறது.

இதையும் படியுங்கள்:
ஜாக்கிரதை… சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தச் சர்க்கரை குறையும் அபாயம்!
migraines
  • அதிகப்படியான உப்பு (சோடியம்)  கொண்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன் ஒற்றை தலைவலியும் தூண்டும்.

  • புளித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஒற்றைத் தலைவலியை தூண்டும் காரணியாக உள்ளன.

  • மது அருந்துவது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது ஒற்றைத் தலைவலியும் ஏற்படுத்தும்.

தீர்வுகள்: 

  • வந்தபின் கஷ்டப்படுவதை விட வராமல் தடுப்பது சிறந்தது. பொதுவாக ஒற்றைத் தலைவலியை தூண்டும் காரணிகளை கட்டுப்படுத்துவது நல்லது. இதற்கு உணவு முறையில் மாற்றங்கள், காஃபின் தவிர்ப்பது, மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வது, உடற்பயிற்சிகள் போன்றவை நல்ல பலனை தரும்.

  • தியானம் மற்றும் ஆழமான சுவாசம், யோகா போன்ற தளர்வு நுட்பங்கள் ஒற்றைத் தலைவலியை போக்க உதவும்.

  • போதுமான தூக்கம் பெறுவதும், உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வதும், ஒற்றை தலைவலியைத் தூண்டும் பால் பொருட்கள், திராட்சை சாறு போன்றவற்றை தவிர்ப்பதும் நல்ல பலனைத் தரும்.

  • சற்று குளிர்ந்த, அமைதியான இருள் நிறைந்த அறையில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பது ஒற்றைத் தலைவலியை போக்கும்.

  • தலைவலிக்கு சூடான ஒத்தடம் கொடுப்பது, கழுத்துக்குப் பின்புறம் லேசான அழுத்தம் கொடுக்கும் வகையில் மசாஜ் செய்வது போன்றவை ஒற்றைத் தலைவலியை குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
எளிய பயனுள்ள வைத்திய குறிப்புகள்!
migraines
  • ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்வதும், ஒற்றைத் தலைவலி தொடர்ந்து இருப்பின் அதற்கு தகுந்த  சரியான மருத்துவரை அணுகி ஆலோசனையும், சிகிச்சையும் மேற்கொள்வது சிறந்த தீர்வாக அமையும்.

(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com