சிறுநீர் தொற்று சம்மரில் ஆபத்து!முன்னெச்சரிக்கையுடன் இருப்பது, நமக்கு பாதுகாப்பு

Infection
Infection
Published on

வெயில் காலங்களில் முக்கால் வாசி பேர் எதிர்க்கொள்ளும் ஒரு பிரச்சனை சிறுநீர் தொற்று. வாருங்கள்! அதற்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் அதனை சரி செய்யும் வழிகள் ஆகியவற்றைப் பார்ப்போம்.

அறிகுறிகள்:

வெயில் ஆரம்பித்தாலே சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல், நீர்க்கடுப்பு போன்ற உபாதைகள் ஏற்படும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், எரியும் உணர்வு, வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், காய்ச்சல் மற்றும் குளிர், துர்நாற்றம் கொண்ட சிறுநீர், இடுப்பு அல்லது முதுகு வலி போன்ற அறிகுறிகள் சிறுநீரில் தொற்று இருக்கிறது என்பதை உணர்த்தும். இதற்கு முக்கிய காரணம் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளாததுதான்.

சிறுநீர் தொற்று ஏற்படுவதன் காரணங்கள்:

a) சிறுநீரில் பாக்டீரியாக்கள் செழித்து பெருகி சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகத்தை அடையும் போது தொற்று ஏற்படுகிறது.

b) வயதான ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி வீங்கினால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டு தொற்று ஏற்படலாம்.

c) நீரிழிவு நோயால் சிறுநீரில் சர்க்கரை அளவு அதிகமாகி பாக்டீரியாக்கள் பெருகி தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

d) சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் அவை சிறுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்தி தொற்றை ஏற்படுத்தலாம்.

e) நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும் எளிதில் இந்த தொற்றுக்கு ஆளாகலாம்.

f) சிறுநீர்ப்பை முழுமையாக காலி செய்யப்படாவிட்டால் பாக்டீரியாக்கள் பெருகி தொற்று உண்டாகலாம்.

இதையும் படியுங்கள்:
ட்ரோன் எதிர்ப்பு லேசர் ஆயுதத்தை (anti drone laser weapon) உருவாக்கிய 4வது நாடானது இந்தியா!
Infection

g) போதுமான சுகாதாரம் இல்லாமல் (குறிப்பாக கழிவறைப் பழக்கம்) சிறுநீர் தொற்றுக்கான காரணமாக அமைகிறது.

h) கர்ப்பம் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு சிறுநீர் தொற்று வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

வீட்டு வைத்தியங்கள்:

a) நிறைய தண்ணீர் குடிக்கவும்:

சிறுநீர் பாதையில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றவும் நோய்த்தொற்றின் அபாயத்தை போக்கவும் தினமும் குறிப்பாக வெயில் காலங்களில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

b) சுத்தமாக இருப்பது:

ஆரோக்கியமான குளியலறை பழக்கங்கள், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் பொழுது சிறுநீர் கழித்து விடுவது, அத்துடன் சிறுநீர் கழிக்கும் பொழுது சிறுநீர்ப்பை முழுவதுமாக காலி செய்ய நேரம் எடுத்துக் கொள்வது போன்றவையுடன் பருத்தி உள்ளாடைகள் அணிவதும் சிறந்த பலனைத் தரும்.

c) வைட்டமின் சி:

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இவை நோயெதிர்ப்பு பண்புகளை அதிகம் கொண்டிருப்பதால் நோய் தொற்றுகளை தடுக்க உதவும்.

d) புரோபயாடிக்குகள்:

நல்ல பாக்டீரியாக்களை கொண்ட உணவுகள் சிறுநீர் பாதையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதனால் சிறுநீர் பாதையில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கவும் உதவும்.

e) குருதி நெல்லிச் சாறு பருகுவது தொற்று நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்க உதவும்.

f) மோரில் ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடியைக் கலந்து தினம் இரண்டு முறை குடிக்கலாம்.

g) தனியா விதைகளை 2 ஸ்பூன் எடுத்து ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு ஆறியதும் வடிகட்டி குடிக்கலாம். இது சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை தடுக்கவும் உதவுகிறது.

h) ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த அவுரி நெல்லி சாறு மற்றும் நெல்லிக்காயின் சாறைப் பருக சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கு சிறந்த வீட்டு வைத்தியமாகும். இது சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் உணர்வை போக்கும்.

i) ஆப்பிள் சிடர் வினிகரை சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் இரண்டு முறை எடுத்துக் கொள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள இது நல்ல பலன் அளிக்கும்.

j) எலுமிச்சை சாறுடன் வெதுவெதுப்பான நீர் மற்றும் தேன் கலந்து பருகுவது நல்லது. பல அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் நிரம்பிய, உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவும் இளநீரை பருகுவதும் நல்ல பலன் தரும்.

இதையும் படியுங்கள்:
மனதைத் தயார் நிலையில் வையுங்கள்!
Infection

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com