சருமத்தில் நிறமாற்றம் ஏற்படுகிறதா? இந்த வைட்டமின் குறைபாடு கூட காரணமாக இருக்கலாம்!

Vitamin c deficiency
Vitamin c deficiency
Published on

நம் உடலுக்கு வைட்டமின், மினரல், ஆன்டி ஆக்ஸிடென்ட் போன்றவை இன்றியமையாதவை ஆகும். இவை நம் உடலுக்கு தேவையான அளவு கிடைப்பதால் தான் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இவற்றில் ஏதேனும் குறைப்பாடு இருந்தால் அது நம் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். நம் உடலுக்கு வைட்டமின் சி என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். நம் உடல் வளர்ச்சிக்கு, திசு பாதிப்பை சரிசெய்வதற்கு, சரும ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு வைட்டமின் சி மிகவும் முக்கியம். அது தேவையான அளவு நமக்கு கிடைக்கவில்லை என்றால், அதை சில அறிகுறிகள் மூலமாக நாம் தெரிந்துக் கொள்ளலாம். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1. வைட்டமின் சி நம் உடலில் குறைவாக இருந்தால் வயதான தோற்றம் இளமையிலேயே ஏற்படும்.

2. நம் உடலில் ஏற்படும் காயங்கள் குணமாக அதிக காலம் எடுத்துக் கொண்டால், அதற்கு வைட்டமின் சி குறைப்பாடே காரணமாகும்.

3. உடல் சோர்வு அதிகமாக ஏற்பட்டால் நம் உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளது. வைட்டமின் சி பற்றாக்குறை உள்ளது என்று அர்த்தம்.

4. நம் உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், சருமத்தில் நிறமாற்றம் ஏற்படுவதை காணலாம்.

இதையும் படியுங்கள்:
இந்த பழங்களை தோலுடன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
Vitamin c deficiency

5. பற்களில் உள்ள ஈறுகளில் அடிக்கடி ரத்தக்கசிவு ஏற்பட்டால், உடலில் வைட்டமின் சி குறைப்பாடு உள்ளதாக அர்த்தம்.

6. நம்முடைய சருமப்பராமரிப்பிற்கு வைட்டமின் சி மிகவும் அவசியமாகும். சூரிய ஒளியில் இருந்து ஏற்படும் பாதிப்பிலிருந்து சருமத்தை வைட்டமின் சி காக்கிறது. நம் சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

7. வைட்டமின் சி குறைவாக இருந்தால் ரத்த குழாய் பலவீனமாவதன் காரணமாக சருமத்தில் புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

8. வைட்டமின் சி குறைவாக இருந்தால் எலும்புகள் பலவீனமடைவதோடு Osteoporosis வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதையும் படியுங்கள்:
compulsive buying disorder (CBD) என்ற மனநோய் பெண்களை அதிகமாக தாக்குவது ஏன்?
Vitamin c deficiency

9. நம் உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாக வேலை செய்ய வைட்டமின் சி மிகவும் அவசியமாகும். வைட்டமின் சி குறைப்பாடு இருப்பவர்களுக்கு குறைவான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதோடு நிமோனியா போன்ற நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வைட்டமின் சி குறைப்பாடு உள்ளவர்கள் Scurvy என்னும் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். Scurvy வந்தால் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து இறப்பு நிகழுக்கூட வாய்ப்புகள் உள்ளது.

வைட்டமின் சி குறைப்பாட்டை சரிசெய்ய கொய்யாப்பழம், கிவி, சிட்ரஸ் பழமான ஆரஞ்ச், எலுமிச்சை, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, பிரக்கோலி போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com