உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா சிறந்த வழிமுறையாகும். அனைத்து வயதினரும் யோகா மூலம் சிறந்த ஆரோக்கியம் பெறலாம். பாலாசனாவை சுலபமாகச் செய்யலாம்.
இதற்கு கீழே இரண்டு முட்டிகளையும் மடக்கி உட்காருங்கள். இடுப்புப் பகுதியை குதிகாலின் மேல் வைக்க வேண்டும். உங்கள் குதி கால்களை சேர்த்து வைக்கவும். பின் இடுப்பை கால்களை நோக்கிக் குனிந்து உங்கள் கால்கள் உங்கள் உடலை பிடித்துக் கொண்டிருப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும்.
உங்கள் நெற்றி யோகா(mat) பாயைத்தொடவேண்டும். உங்கள் கைகளை முன்னால் நீட்டியோ அல்லது பக்கவாட்டில் வைத்தும் இருக்கலாம். கைகளை பக்கவாட்டில் வைக்கும் போது உங்கள் உள்ளங்கை மேலே இருக்கவேண்டும். இப்போது நன்றாக மூச்சு விட்டு ஓய்வு எடுங்கள். இந்த மாதிரி 30 நொடிகள் இருக்கலாம்.
பாலாசனாவின் 10 நன்மைகள்:
இந்த ஆசனத்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்பட்டு நல்ல அமைதியைத் தருகிறது. இது பதட்டத்தைக் குறைக்கிறது.
இந்த ஆசனத்தில் வயிற்றுப்பகுதி அமுங்குவதால் செரிமானம் சீராகிறது. மற்றும் வீக்கத்தை தடுக்கிறது. வாயுவை வெளியேற்றுகிறது.
இது இடுப்புப் பகுதியை வலுவாக்கி, தொடைகளுக்கு நல்ல நெகிழ்வுத் தன்மையை கொடுக்கிறது.
முதுகு வலியை போக்குகிறது.
உங்களுக்குத் தூக்கம் வரவில்லை என்றால் பாலாசனாவில் இருந்தால் நல்ல தூக்கம் வரும்.
உங்கள் உடல் நல்ல ஓய்வில் இருப்பதால் சோர்வைப் போக்குகிறது.
இந்த ஆசனம் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
உங்கள் மனதை அமைதியாக வைக்கிறது.
பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு இந்த ஆசனம் சிறந்த தீர்வாக உள்ளது.
உங்கள் இடுப்பை கால்கள் பகுதிக்கு ஸ்ட்ரெச் செய்வதால் தசைகள் நல்ல நிலையில் வைக்கப்படுகிறது.
முட்டி வலி உள்ளவர்களுக்கு முட்டியை மடக்குவது சிரமமாக இருக்கும்.
முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.