டாக்டர் வீட்டுக்கே போகாமல் இருக்க இந்த ஒரு அரிசி வீட்டில் இருந்தால் போதும்!

மன்னர்கள் சாப்பிட்ட பாரம்பரிய அரிசி
Karuppu kavuni rice and weight loss
Karuppu kavuni rice
Published on

ம்முடைய பாரம்பரிய அரிசி வகைகளில், கருப்பு நிற அரிசி வகையைச் சார்ந்தது இந்த கருப்பு கவுனி அரிசி. இந்த அரிசி சீனாவிலிருந்து வந்தது என்றும், ஆரம்பக் காலத்தில் மன்னர்கள் மட்டுமே சாப்பிடும் அரிசி வகையாக இது இருந்தது என்றும் கூறப்படுகிறது. இதனால் இதற்கு ஆங்கிலத்தில் Purple Rice மற்றும் Forbidden Rice என்ற பெயர்கள் உண்டு.

கருப்பு கவுனி அரிசியில் (Karuppu kavuni rice) இல்லாத சத்துகளே இல்லை என்று கூடச் சொல்லலாம். இதில் ஏராளமாக வைட்டமின்கள், தாதுக்கள் (Minerals) மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.

முக்கிய சத்துகள் மற்றும் பயன்கள்:

  • ஒட்டுமொத்த ஆரோக்கியம்: இதில் ஊட்டச்சத்துகள் (Nutrients) மிக அதிகம். இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், சீரான செயல்பாட்டிற்கும் மிக முக்கியம். குறிப்பாகக் குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை இது மேம்படுத்தும்.

  • வீக்கம் குறைத்தல்: இதில் உள்ள 'ஆன்ட்டி-இன்ஃபிளமேட்டரி' (Anti-inflammatory) பண்புகள் உடல் வீக்கங்களைக் குறைக்க உதவும்.

  • சுவாசப் பிரச்னைகள்: இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் 'ஆந்தோசயனின்' (Anthocyanin) என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் கருப்பு கவுனி அரிசியை எடுத்துக் கொள்வது நல்லது.

  • நச்சு நீக்கம் (Detox): உடலில் உள்ள கழிவுகளைச் சுத்திகரித்து வெளியேற்றும் வேலையை இதில் உள்ள மூலக்கூறுகள் செய்கின்றன. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி 'டீடாக்ஸ்' செய்யும் வேலையைச் செய்கிறது.

நோய் தடுப்பு முறைகள்:

  • நீரிழிவு மேலாண்மை: சிறுதானிய வகைகளை விடவும் கருப்பு கவுனி அரிசியில் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) மிக மிகக் குறைவு. இதைச் சாப்பிடும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் வேகமும் விகிதமும் மிகவும் குறைவாக இருக்கும். இது நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய அளவில் உதவும்.

  • இதய ஆரோக்கியம்: இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கவும், இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதைத் தடுக்கவும் இது உதவுகிறது. இரத்தத்தில் இருக்கும் LDL (கெட்ட கொழுப்பை) கரைத்து வெளியேற்றி, HDL (நல்ல கொழுப்பை) அதிகரிக்கச் செய்யும்.

  • புற்றுநோய் எதிர்ப்பு: இதில் உள்ள ஆந்தோசயனின், புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது எனக் கூறப்படுகிறது. எனவே, புற்றுநோய் ஆபத்தைக் குறைக்க இதனை உண்பது சிறந்தது.

அழகு மற்றும் கண் ஆரோக்கியம்:

முடி வளர்ச்சி: இதில் உள்ள புரதங்கள் மற்றும் தாதுக்கள் முடி உதிர்வைத் தடுத்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சியைத் தூண்டக்கூடியவை.

கண் பார்வை: இதில் இருக்கும் 'பீட்டா கரோட்டின்' கண் ஆரோக்கியத்திற்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்தாகும். இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கண்கள் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயும், உயர் இரத்த அழுத்தமும் உங்களை செவிடாக்குமா?
Karuppu kavuni rice and weight loss

பயன்படுத்தும் முறை:

கோடைகாலக் குளிர்ச்சிக்கும் உடல் எடையைக் குறைப்பதற்கும் இதனைப் பாயசம், கஞ்சி அல்லது கூழ் செய்து சாப்பிடலாம். காலை உணவாகவோ அல்லது மாலை நேரச் சிற்றுண்டியாகவோ இந்தச் சத்தான கூழைத் தயாரித்துக் குடிப்பது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com