drinking chilled water
drinking chilled water

உஷ்ணத்திற்கு ஐஸ் வாட்டரா? போச்சு போச்சு!

Published on

கோடைக்காலம் தொடங்கி விட்டது. வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த வெயிலின் கொடூரம் நம்மை தவறான முடிவெடுக்க வைக்கும். ஆம்! வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்ததும் வெப்பக் கொடுமையால் ஐஸ் வாட்டரை குடிக்க தோணுமல்லவா? அந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்!

இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயிலினால் இயல்பாவே நமக்கு ஐஸ் வாட்டர் குடித்தால்தான் இதமாக இருக்கும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக்கு என்று குடிப்போம். அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக் குழாய்கள் வெடித்து விடும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அதாவது, குளிர்ந்த நீர் குடிப்பது இதயத் துடிப்பைக் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குளிர்ந்த நீர் குடிக்கும்போது தலையில் உள்ள நரம்புகள் கட்டுபடுத்தப்படுகிறது. இது இதயத் துடிப்பைக் குறைக்கிறது. 

ஐஸ் வாட்டர் குடிப்பது மட்டுமல்ல ஐஸ்வாட்டரில் கைகளையோ, முகத்தையோ, பாதங்களையோ, கழுவுவது கூட ஆபத்து என்கிறார்கள். அதாவது உஷ்ணமான நமது உடலை ஐஸ் நீரால் திடீரென தாக்கக் கூடாது என்கிறார்கள். வீட்டிற்குள் நுழைந்து 30 நிமிடங்கள் வரை ஆசுவாசப்படுத்தி வீட்டுக்குள் நிலவும் வெப்பத்துக்கு ஏற்ப நமது உடலை தயார் செய்து விட்டு பிறகுதான் இயற்கையான குளிர் நீரிலோ வெது வெதுப்பான அதாவது 90 முதல் 95 டிகிரி வெப்பம் உள்ள தண்ணீரை குடிக்கலாம்.

குளிர்ந்த நீரைக் குடிக்கும் பழக்கம் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு எரிக்கச் செய்வதை கடினமாக்குகிறது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள், குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்கவும். 

வெயில் நேரத்தில் பிரிட்ஜ் வாட்டர் மற்றும் ஐஸ் போட்டு தண்ணீர் குடிக்காதீர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கும் எச்சரிக்கை செய்யுங்கள்.

ஐஸ்வாட்டரை தவிர்த்து உடல் நலத்தை பாதுகாப்போம்!

இதையும் படியுங்கள்:
5 ஐஸ் க்யூப்களும், அழகிய மாயா ஜாலங்களும்!
drinking chilled water
logo
Kalki Online
kalkionline.com