மரணத்தை தள்ளிப்போடும் ரகசிய கடிகாரம்!

கடிகார நேரப்படி நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளலாம். உடல் உறுப்புகளுக்குப் பின்னால் இருக்கும் Time Table. இதற்கு பெயர் 'உயிரியல் கடிகாரம்'.
Biological clock for eating and sleeping
Biological clock
Published on

நாம் பரபரப்பாக வேலை பார்க்கும் நேரத்தில் திடீரென்று பசிக்க துவங்கும் நேரத்தை பார்த்தால் வழக்கமாக நாம் சாப்பிடும் நேரமாக இருக்கும். வெளியில் எப்படி நம்மை இயக்க கடிகாரம் இருக்கிறதோ, அதைப்போல நம் உடலுக்குள்ளும் ஒரு கடிகாரம் இருக்கிறது. இதுதான் உயிரியல் கடிகாரம் (Biological clock).

தினசரி நிகழும் இந்த மாற்றங்களுக்கு 'சிற்கார்டியன் ரிதம்' என்று பெயர். இதற்கு காரணமாக இருப்பவை பீரியட் ஜீன், டைம்லெஸ் ஜீன் ஆகிய இரண்டு மரபணுக்கள். ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் பீரியட் ஜீன் ஒரு வகை புரதத்தை உற்பத்தி செய்யும். புரதத்தின் அளவு குறைய குறைய இரண்டாவது ஜீனான டைம்லெஸ் ஜீன் சிதையும். இந்த சிதைவு தான் காலம் நகர்வதை செல்களுக்கு உணர்த்தும்.

இதன் மூலம் தான் நமக்கு தூக்கம், பசி போன்ற வெளிப்படையான உடலியல் இயக்கங்களும் உடலுக்குள் ஏற்பட வேண்டிய இயக்கங்களும் சரிவர நடக்கின்றன. ஒரு நாளில் 24 மணி நேரத்தில் சிற்கார்டியன் ரிதத்தின் அடிப்படையில் புரதத்தின் அளவில் மாற்றம் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

உயிரியல் கடிகாரத்தின் இயக்கம் பாதிக்கப்படுவது தான் வாழ்க்கை முறை மாற்றங்களால் வரும் நோய்களுக்கு காரணம் என சமீபத்திய ஆய்வு சொல்கிறது. நம் உடலிலேயே இயக்கும் உறுப்புகளின் நேரத்தை நாம் அறிந்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றலாம். அது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

காலை 3 மணி முதல் 5 மணி வரை

வான்வெளியில் சுத்தமான காற்று அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி, தியானம் செய்தால் நுரையீரல் பலம் பெறும். இந்த நேரத்தில் கிடைக்கும் ஆற்றல் உணவின் மூலம் கிடைப்பதை விட சிறந்தது.

காலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை

இந்த நேரத்தில் மலம் கழிக்க உடலை பழக்கப்படுத்தினால் பெருங்குடல் சுத்தமாகி எந்த நோயும் வராது.

காலை 7:00 மணி முதல் 9 மணி வரை

காலை உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். நேரம் கடந்து சாப்பிடும் போது மற்ற உறுப்புகளின் இயக்கமும் சேர்ந்து சுழற்சி தடைப்படும்.

காலை 9 மணி முதல் 11 மணி வரை

காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச்சத்து ஆக மாற்றும் நேரம். இந்த நேரத்தில் அதிகமான உடல் உழைப்பு திரவ உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

காலை 11:00 மணி முதல் ஒரு மணி வரை

இது இதயத்தின் நேரம் இந்த நேரத்தில் படபடப்பு கோவப்படுதல் கூடாது. கடினமான வேலை எதுவும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடிக்கலாம்.

மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை

சிறு குடல் நேரத்தில் மதிய உணவு சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

மாலை 3 மணி முதல் 5 மணி வரை

அன்றைய நாளின் கழிவை உடலில் இருந்து பிரித்து எடுத்து சிறுநீர்பையில் தேக்கி வைக்கும் பணி நடைபெறும்.

மாலை 5 மணி முதல் 7:00 மணி வரை

இந்த நேரத்தில் இளம் சூடான உணவுகள் திரவு உணவுகள் சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்வது சிறுநீரகங்களுக்கு நல்லது.

இரவு 7 மணி முதல் 9 மணி வரை

இந்த நேரத்தில் மிதமான எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். நாள் முழுவதும் நம் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு செயல்பட்ட இதயம், இதயம் சார்ந்த பகுதிகள் ஓய்வெடுக்கும் நேரம். மன அழுத்தம், பதற்றம், எரிச்சல் போன்ற எதிர்மறை உணர்வுகள் கூடாது.

இரவு 9 மணி முதல் 11 மணி வரை

உடலின் வெப்பத்தை சமன் செய்யும் நேரம் எண்ண ஓட்டங்கள் இன்றி அமைதியாக உறங்க வேண்டும்.

இரவு 11:00 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரை

இந்த நேரத்தில் இரவு உணவு சாப்பிடவே கூடாது. தூங்காமல் விழித்திருந்தால் பித்தப்பை செயல்பாடு தடைப்பட்டு கற்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி நகம் வெட்டுபவரா நீங்கள்... அப்போ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!
Biological clock for eating and sleeping

அதிகாலை ஒரு மணி முதல் 3 மணி வரை

இந்த நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் இருந்தால் உடலில் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதன் வீரியம் குறைந்து குணமாகிவிடும்.

இதுதான் நம் வாழ்க்கையின் உயிரியல் கடிகாரம் எனப்படுகிறது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com