
நமது வாழ்க்கை பாதிக்கு பாதி தூக்கத்திலேயே சென்று விடுகிறது. தலையணையை (Pillow) மாற்றாமல் தொடர்ந்து ஒன்றையே பயன்படுத்தி வருவதால் பல கெடுதல்கள் வரும். அந்த வகையில் தலையணைகளை மாற்றுவதன் அவசியத்தைப் பார்ப்போம்.
பழைய தலையணைகளை (Pillow) தொடர்ந்து பயன்படுத்தினால், அவை துர்நாற்றம் ஏற்பட்டு நமது தலைமுடி முதல் பாதம் வரை ஏகப்பட்ட அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
பழைய தலையணையால் தொடர்ச்சியாக கழுத்து வலி ஏற்படும். நல்ல தலையணையை பயன்படுத்துவதால் கழுத்து வலி மட்டுமல்ல முதுகுத் தண்டு சரியாக சீரமைக்கப்படும். மேலும் இவை, ஒவ்வாமை போன்றவை ஏற்படுவதை தடுக்கும். தோள்பட்டை வலி இருந்தால் அது பழைய தலையணை காரணமாகவும் இருக்கலாம்.
அதேபோல் நமது தலையில் இருக்கும் எண்ணெய்கள், தூசிகள், அழுக்குகள் போன்றவை தலையணையில் அண்டிவிடும். இவற்றில் துர்நாற்றம், அழுக்கு, பூஞ்சை போன்ற பாதிப்புகள் இருக்கும்.
தலையணையை எப்போது மாற்ற வேண்டும்?
1. தலையணை தட்டையாக இருந்தால் மாற்ற வேண்டும்.
2. தலையணையை பயன்படுத்துவதற்கு மிகவும் கடினமானதாகவும், கெட்டியாகவும் இருந்தால் அதனை மாற்ற வேண்டும்.
3. தலையணையை பயன்படுத்தும் போது தூக்க இடையூறுகள் இருப்பதை நீங்கள் கண்டறிந்தால் அதனை உடனடியாக மாற்ற வேண்டும்.
4. கழுத்து வலி, தோள்பட்டை வலி முதுகு வலி போன்றவை ஏற்பட்டால், தலையணையில் உள்ள பஞ்சு நைந்து இருக்க வாய்ப்புள்ளது. ஆகையால் அப்போது நீங்கள் தலையணையை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
5. சிலர் பாலிஸ்டர் துணிக்கொண்ட தலையணை உறையை பயன்படுத்துவார்கள். அது முதல் சில நாட்கள் நன்றாக இருக்கும். ஆனால், அதன்பிறகு வேலையை காட்ட ஆரம்பித்துவிடும். பாலிஸ்டர் துணியாலான தலையணைகளை நீங்கள் பயன்படுத்தும் போது அவற்றை குறைந்தது ஓராண்டு வரை மட்டுமே பயன்படுத்தலாம்.
6. லேடெக்ஸ் வகை தலையணைகள் மேற்குறிப்பிட்ட இரண்டு தலையணைகளைவிட நீண்ட நாட்களுக்கு நீடிக்க கூடியவை. இதனை நீங்கள் இரண்டிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றலாம்.
7. பஞ்சு தலையணைகளை மூன்று ஆண்டுகள் வரைப் பயன்படுத்தலாம். இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு தலையணைப் பயன்படுத்துங்கள். குறிப்பிட்ட காலம் பயன்படுத்திவிட்டு மாற்றிவிடுங்கள்.