
ஆரோக்கியமான மனிதனுக்கு சரிவிகித உணவு மிகவும் இன்றியமையாதது. இந்த சரிவிகித உணவுகள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. அந்த வகையில் தினந்தோறும் அனைத்து சத்துக்களும் கிடைக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. சியா விதை
இரண்டு ஸ்பூன் அளவு சியா விதைகளில் ஒரு நாளைக்கு தேவையான 95 சதவிகித மக்னீசியம் உள்ளது. நம் தசைகளை வலுப்படுத்தவும் சரி செய்யவும் அதிலிருந்து மீட்டு எடுக்கவும் தேவைப்படும் அத்தியாவசியமான ஊட்டச்சத்தாக மக்னீசியம் உள்ளது.
2. கொய்யாப்பழம்
கொய்யாப்பழம் அல்லது காயில் ஒரு நாளைக்கு தேவையான 100 சதவிகித அளவு வைட்டமின் சி கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கவும், தோல் பராமரிப்புக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்தாக வைட்டமின் சி சத்து உள்ளது.
3. ப்ரக்கோலி
ஒரு நாளைக்கு தேவையான முழுமையான வைட்டமின் கே ஒரு சிறிய சைஸ் ப்ரக்கோலி சாப்பிட்டால் கிடைக்கிறது. பல் மற்றும் எலும்புகளை வலுவாக்கவும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் கே இன்றியமையாதது.
4. குடைமிளகாய்
ஒரே ஒரு குடைமிளகாயில் ஒரு நாளைக்கு தேவையான முழு வைட்டமின் சி யும் அதில் இருந்து கிடைத்துவிடும். கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து தோல் நெகிழ்வுத் தன்மைக்கு உதவி புரியும் ஊட்டச்சத்தாக வைட்டமின் சி உள்ளது.
5. பூசணி விதை
இரண்டு ஸ்பூன் அளவு பூசணி விதையிலிருந்து ஒரு நாளைக்கு தேவையான துத்தநாகம் 60 சதவிகிதம் கிடைக்கும். உடலில் உள்ள காயங்களை குணப்படுத்தி, ஹீலிங் செய்வதோடு, நிறைய உடல் செயல்பாடுகள் ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றிற்கு ஜிங்க் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
6. கருப்பு எள்
ஒரு நாளைக்கு தேவையான 100% காப்பர் சத்து ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளில் மட்டும் கிடைக்கிறது. காப்பர் இரும்புச் சத்தை உடல் உறிஞ்சிக் கொள்ளவும் இளநரையை சரிசெய்து கருப்பாக்கவும் பயன்படுகிறது.
மேற்கூறிய இந்த காய்கறிகள் மற்றும் உணவுகள் எல்லாமே மிக மிக எளிதாகக் கிடைக்கக்கூடியது. அதேபோல அதிக அளவு எடுக்க வேண்டிய தேவையும் இல்லை. மிகக் குறைந்த அளவு எடுத்தாலே தினந்தோறும் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)