உடலுக்குள் உருவாகும் புற்றுநோய் கட்டிகள்... நண்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?

Cancer
Cancer
Published on
mangayar malar strip

உலகத்தில் புற்றுநோயை பற்றி கேள்விப்படாத மக்களே கிடையாது. இருப்பினும், புற்றுநோய் ஏன் cancer என்று அழைக்கப்படுகிறது என்ற விளக்கத்தை அறிந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். இப்பதிவில் அதற்கான விளக்கத்தை பார்ககலாம்.

மருத்துவத்தில் இந்த வார்த்தையின் தோற்றம்:

புற்றுநோய் என்று நாம் அழைக்கும் இந்த நோய்க்கான நவீன மருத்துவச் சொல், கிரேக்க வார்த்தையான கார்கினோஸிலிருந்து வந்தது. கிமு ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளைக் கொல்லும் ஒரு குறிப்பிட்ட வகை கட்டியை விவரிக்க கார்கினோஸிலிருந்து 'நண்டு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். இந்த வகை கட்டி உடலின் பல பகுதிகளில் உருவாகும் என்று அறியப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் வந்த மருத்துவப் படைப்பான 'டிசீசஸ் ஆஃப் வுமன்' என்ற புத்தகத்தில் மார்பகப் புற்றுநோயைப் பற்றிய மிக ஆரம்பகால விளக்கம் மட்டுமே இருக்கிறது.

மார்பகங்களில் கடினமான கட்டிகள் உருவாகின்றன. அவை மிகப் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ தோன்றுகின்றன. இவற்றிலிருந்து சீழ் வெளியேறுவதில்லை.

ஆனால், அவை மிகவும் கடினமாக இருக்கும். மேலும், அவற்றிலிருந்து கார்கினாய் உருவாகின்றன. இந்த கார்கினாய் உருவாகும்போது, நோயாளிகள் சாப்பிடும் அனைத்து உணவுமே கசப்பாகத் தோன்றும். வாயில் கசப்பான சுவை என்பது புற்றுநோய் உருவாகி வருவதற்கான அறிகுறி என்ற கருத்து அதே காலகட்டத்தைச் சேர்ந்த வெவ்வேறு மருத்துவப் படைப்புகளில் காணப்படுகின்றன.

கி.மு. 400 இல் எழுதப்பட்ட தொற்றுநோய்களின் இரண்டாவது புத்தகத்தில், 'புற்றுநோய் (கார்கினோஸ்) உருவாகும்போது, வாய் கசப்பாக மாறும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் எழுதப்பட்ட ஐந்தாவது புத்தகமான எபிடெமிக்ஸில், திரேஸில் உள்ள அப்டெரா நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண் மார்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அந்த நோயால் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தைச் சேர்ந்த ஏழாவது எபிடெமிக்ஸ் புத்தகத்தில், தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர் அவரைக் குணப்படுத்தியதாகவும் கூறபட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மூலிகைகளை மூலையில் கிடத்தாதீர்கள்! அவற்றின் முக்கியத்துவத்தை மறக்காதீர்கள்!
Cancer

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியைப் பற்றி மிக நீண்ட மற்றும் பழமையான பதிவுகளில் ஒன்றை வரலாற்றாசிரியர் மெம்னான் வழங்கியுள்ளார். மெம்னான் தன்னுடைய விளக்கத்தில், கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆசியா மைனரில் black sea கடற்கரையில் உள்ள ஹெராக்லியாவின் கொடுங்கோலன் சாட்டிரஸ், வயதான காலத்தில் இடுப்புப் புற்றுநோயால் அவதிப்பட்டதாகவும் மேலும் அந்த நோய் இறுதியில் அவரைக் கொன்றதாகவும் கூறியிருக்கிறார்.

Cancer Patient
Cancer Patient

Cancer என்ற பெயர் எப்படி வந்தது?

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், கி.மு. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், மருத்துவர்கள் 'cancer’ (கார்கினோஸ்) என்ற வார்த்தையை உடலின் பல்வேறு பகுதிகளில் உருவாககூடிய கொடிய கட்டிகளைக் குறிக்க பயன்படுத்தத் தொடங்கினர்.

கிரேக்க-ரோமானிய பழங்காலத்தில், இந்த நோய்க்கு நண்டு என்ற விலங்கின் பெயரான 'cancer' என்ற‌ பெயரை வைத்ததற்கான பல்வேறு விளக்கங்கள் இருந்தன. கி.பி ஏழாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் மருத்துவம் குறித்து விரிவுரை செய்த மருத்துவர் ஸ்டீபனஸ், தனது ஹிப்போகிரட்டீஸின் பழமொழிகள் பற்றிய வர்ணனையில் இதை சுருக்கமாகக் கூறியுள்ளார். 'பாதிக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள நரம்புகள் ஒரு நண்டின் கால்களை ஒத்திருப்பதால் இது கார்கினோஸ் (cancer) என்று அழைக்கப்படுகிறது'.

கி.பி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இன்னொரு மருத்துவ எழுத்தாளரான ஏஜினாவின் பால், தனது மருத்துவத் தொகுப்பில் புற்றுநோய் நிகழ்வுகளில், நரம்புகள் நண்டு எனப்படும் விலங்கின் கால்களைப் போலவே நிரப்பப்பட்டு நீண்டுள்ளன. எனவே, இந்த நோய் அதன் பெயரைப் பெற்றுள்ளது என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால், ஒரு சிலர் இது நண்டு போல பிடிவாதமாக எந்தப் பகுதியையும் ஒட்டிக்கொள்வதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது என்றும் கூறியிருக்கிறார்கள். இந்த விளக்கங்களின் அடிப்படையில் சில நண்டுகள் ஆக்ரோஷமாக இருப்பது போல, நோய் ஆக்ரோஷமாக இருக்கலாம் மற்றும் ஒரு சில நண்டுகள் அதன் நகங்களால் பிடிவாதமாக இருப்பது போல, நோய் பிடிவாதமாக இருக்கலாம்.

இந்த விளக்கங்களில் மூன்றாவதாக புற்றுநோய் வளர்ந்த பகுதியில் உள்ள நரம்புகள் நண்டுகளின் கால்கள் போல இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உஷார்! கிரீம் பிஸ்கட்டுகளில் (Cream Biscuit) உள்ள கிரீமில் இருப்பது என்ன?
Cancer

பழங்காலத்தில் புற்றுநோயைப் பற்றிய ஆய்வுக்கு குறிப்பிட்ட பெயர் எதுவும் இல்லை; அது மருத்துவ விசாரணையின் சிறப்புப் பகுதியாக மாறவில்லை. இதற்கான நவீன சொல், புற்றுநோயியல், கிரேக்க வார்த்தையான ஆன்கோஸிலிருந்து வந்தது. இதற்கு பரந்த அளவிலான அர்த்தங்கள் இருந்தன. ஆனால், அதன் அடிப்படை அர்த்தம் 'மொத்த, நிறை, உடல்'. பண்டைய மருத்துவத்தில், ஆன்கோஸ் என்ற சொல் பொதுவாக உடலில் உள்ள பல்வேறு வீக்கம் மற்றும் கட்டிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஆன்கோஸ் என்ற சொல் புற்றுநோய் என்று நாம் நினைப்பதை குறிப்பிட்டு கூறவில்லை.

ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கட்டிகளை விவரிக்க மருத்துவர்கள் கார்கினோஸ் (cancer) என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தினர். உடலின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்ட பொதுவாக கொடிய கட்டிகளுக்கு இந்த வார்த்தையை அவர்கள் பயன்படுத்தினர்.

இதையும் படியுங்கள்:
தேசிய ஊட்டச்சத்து வாரம்: 'சிறந்த வாழ்க்கைக்கு சரியாக சாப்பிடுங்கள்!' எப்படி?
Cancer

பண்டைய பாரம்பரியத்தின் படி, நண்டு ஆக்ரோஷமாகவும் பிடிவாதமாகவும் இருப்பதால் அல்லது கட்டி வளர்ந்த பகுதியில் உள்ள நரம்புகள் நண்டின் கால்கள் போல தோற்றமளிப்பதால் இந்த நோய்க்கு நண்டு அதாவது cancer என்று பெயரிடப்பட்டது. பல நூற்றாண்டுகளாக இந்தப் பெயர் ஒருபோதும் மாற்றப்படவில்லை. அதனால்தான் புற்றுநோய் இன்றும் 'cancer' பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com