உங்க வயதுக்கு ஏற்ற tooth paste எது? வாங்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே!

toothpaste
toothpaste
Published on

காலையில் எழுந்ததும் பல் துலக்க பயன்படும் டூத் பேஸ்ட் தவிர்க்க முடியாத அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக இன்றைய நவீன உலகில் மாறிவிட்டது. அத்தகைய டூத் பேஸ்ட் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

பற்பசையில் உள்ள மூலப்பொருட்கள்:

பற்பசைகளில் வேம்பு, லவங்கம் போன்ற இயற்கைப் பொருள்களும், நுரை ஏற்படுத்த சோடியம் லாரியல் சல்பேட்டும் சேர்க்கப்படுகின்றன.

பாக்டீரியா தாக்குதலிலிருந்து பாதுகாக்க ஸ்டேன்னஸ் ஃபுளோரைடு (Stannous Fluoride), ஈரப்பதத்துக்காகச் சார்பிட்டால் (Sorbitol), ஹுமெக்டன்ட் (Humectant) ஆகியவை சேர்க்கப்படுகின்றன.

இனிப்புச்சுவைக்காக சோடியம் சாக்கரின் (Sodium saccharin) சேர்க்கப்படுகிறது. இதனுடன், உப்பு, 'சலவை சோடா' எனப்படும் சோடியம் பை கார்பனேட் (Sodium Bicarbonate), கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் டி போன்றவையும் சேர்க்கப்படுகின்றன.

இயற்கையாக பற்களை வலிமையாக்க உதவும் தாது உப்பான ஃபுளோரைடு நாம் வசிக்கும் இடத்தைப் பொறுத்தும், நாம் அருந்தும் நீரின் அளவைப் பொறுத்தும் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் அளவு மாறுபடும் என்பதால் அவரவருக்கு தேவைப்படும் பற்பசைகளை அறிந்து கொண்டு வாங்க வேண்டும்.

குழந்தைகளுக்கான பற்பசை

குழந்தைகளுக்குப் பற்சொத்தை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், ஃபுளோரைடு கலந்த பற்பசைகளை வாங்க வேண்டும். அதிலும் ஃப்ளோரைடு அதிக அளவு இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.

பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் 1,000 பி.பி.எம் (ppm - parts per million) அளவுக்கு மிகாமலும், சிறுவர்களுக்கான பற்பசையில் 500 பி.பி.எம் (ppm - parts per million) அளவுக்கு மிகாமலும் ஃபுளோரைடு இருக்க வேண்டும். 

பெரியவர்களுக்கான பற்பசை:

பெரியவர்களுக்கு நுரை வருவதற்காகச் சேர்க்கப்படும் டிடர்ஜென்ட், நிறத்தை அளிக்கும் ரசாயனங்கள் ஆகியவை அதிகம் இல்லாத பற்பசையாக வாங்க வேண்டும். மேலும் முதியவர்களுக்கும் வயோதிகம் காரணமாக, பற்கள் தேய்மானம் அடைந்திருப்பதால் சென்சிட்டிவ்வாக (Sensitive) மாறிவிடும். எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி, சென்சிடிவ் பற்பசைகளை உபயோகிப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
ஜாக்கிரதை… சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தச் சர்க்கரை குறையும் அபாயம்!
toothpaste

ஃபுளோரைடு உட்பட பல்வேறு ரசாயனப் பொருட்கள் உள்ள பற்பசையில் ஒரு பட்டாணி அளவு எடுத்து, பல் துலக்கினாலே போதும். பெரியவர்கள் பயன்படுத்துவதைவிடக் குழந்தைகளுக்கு குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும்.

பற்பசை வாங்கும்போது கவனிக்கவேண்டியவை...

  • வண்ணமயமான பேஸ்ட்டைவிட வெள்ளை நிற பேஸ்ட்டே சிறந்தது.

  • ஃபுளோரைடு குறைவான பேஸ்ட்டையே தேர்வுசெய்யுங்கள்.

  • ஜெல் பேஸ்ட்டுகள் பற்களின் தேய்மானத்துக்குக் காரணமாகும் என்பதால், க்ரீம் பேஸ்ட்டுகளே சிறந்தவை.

  • பற்களை பாலீஷ் செய்வதற்கும், சுத்தப்படுத்துவதற்கும் அப்ரேஸிவ் (Abrasives) எனும் 'தேய்க்கும் பொருள்' பயன்படுத்தப்படுவதால் இதன் அளவு குறைந்ததாக இருக்கும் பேஸ்ட்டாகப் பார்த்து வாங்குங்கள்.

  • சோடியம் லாரைல் சல்பேட், சோடியம் லாரெத் சல்பேட், பேக்கிங் சோடா, பெராக்ஸைட் ஆகியவை அடங்கிய பேஸ்ட்டுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    டூத் பேஸ்ட்க்கு அடியில் உள்ள பட்டைகளை வைத்து அதன் வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

பச்சை நிறப் பட்டை

பற்பசை முழுக்க முழுக்க இயற்கைப் பொருள்களால் தயாரிக்கப்பட்டது.

நீல நிறப் பட்டை

பற்பசையில் இயற்கைப் பொருட்களுடன் சில மருந்துகளும் கலக்கப்பட்டிருக்கின்றன.

சிவப்பு நிறப் பட்டை

இயற்கைப் பொருள்களுடன், அதிக அளவில் ரசாயனப் பொருள்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

கறுப்பு நிறப் பட்டை

முழுமையாக ரசாயனப் பொருள்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பெண்களை பாடாய்ப்படுத்தும் ஒற்றைத் தலைவலி - தீர்வுதான் என்ன?
toothpaste

இனிமேல் டூத் பேஸ்ட் வாங்கும் போது மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் கவனித்து உங்களுக்கு ஏற்ற பற்பசையை வாங்கி உபயோகியுங்கள்.

(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின்   ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com