Fish Oil: இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் மீன் எண்ணெய் மாத்திரைகள் சாப்பிடாதீர்கள்! 

Fish Oil
Things to Consider Before Taking Fish Oil Pills

மீன் எண்ணெய் அதன் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளால் பிரபலமாக பேசப்படும் ஒரு உணவாகும். இருப்பினும் உங்களது தினசரி வழக்கத்தில் மீன் எண்ணெய் மாத்திரைகளை சேர்ப்பதற்கு முன் சில காரணிகளை கருத்தில் கொள்வது அவசியம். இந்தப் பதிவில் மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி பார்க்கலாம். 

தரம் மற்றும் தூய்மை: சந்தையில் கிடைக்கும் எல்லாம் மீன் எண்ணெய் மாத்திரைகளும் ஒரே மாதிரியாக உருவாக்கப்படுவதில்லை. எனவே நல்ல தரம் வாய்ந்த புகழ்பெற்ற பிராண்டுகளை தேர்வு செய்யுங்கள். உலோகங்கள், PCB-க்கள் மற்றும் டயாக்சின்கள் போன்ற அசுத்தங்களை அகற்றி சுத்திகரிக்கப்பட்ட மீன் எண்ணெய்யை தேர்வு செய்யவும். 

ஒமேகா 3 உள்ளடக்கம்: உங்களது உடல் தேவைக்கு ஏற்ப சரியான மீன் எண்ணெய்யை தீர்மானிக்கவும். உங்களது வயது மற்றும் உடல் நிலைக்கு ஏற்ப தினசரி குறிப்பிட்ட அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தேவைப்படுகிறது. அந்த தேவையை நீங்கள் எடுத்துக் கொள்ளப் போகும் மாத்திரை பூர்த்தி செய்யுமா என்பதை பார்க்கவும். எனவே அதைத் தெரிந்துகொள்ள சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது. நீங்களாக ஏதோ ஒரு பிராண்டை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டாம். 

பக்கவிளைவுகள்: மீன் எண்ணெய் பொதுவாகவே பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது என்றாலும், சில நபர்களுக்கு இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். வயிற்று உபாதைகள், குடல் அசௌகரியம் போன்ற ஆபத்துக்கள் இதில் அடங்கும். நீங்கள் ஏற்கனவே ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால், மீன் எண்ணெய் மாத்திரைகளை சாப்பிடத் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். 

மருந்துகளுடனானா தொடர்பு: மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் நீங்கள் ஏற்கனவே எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம். இதில் ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள் மற்றும் பிளேட்லெட் மருந்துகளும் அடங்கும். எனவே இதனால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு நீங்கள் ஏற்கனவே எடுத்துக் கொள்ளும் மருந்துகள் பற்றி மருத்துவரிடம் தெரிவித்து, மீன் எண்ணெய் மாத்திரைகள் சாப்பிடுவது பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

உணவு: மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வதற்கு முன் உங்களது ஒட்டுமொத்த உணவை மதிப்பீடு செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே சால்மன் கானாங்கெளுத்தி அல்லது மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்பவராக இருந்தால், உங்களுக்கு அந்த உணவுகள் மூலமாகவே ஒமேகா 3 தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கூடுதல் மீன் எண்ணெய் தேவைப்படாது. 

இதையும் படியுங்கள்:
Armored catfish: பாலைவனத்திலும் வாழும் அபூர்வ மீன்!
Fish Oil

தனிப்பட்ட சுகாதார நிலைமைகள்: உங்களுக்கு ஏற்கனவே ஒவ்வாமை கல்லீரல் பிரச்சினை அல்லது கணைய அழற்சி போன்ற சுகாதார நிலைமைகள் இருந்தால், மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வதற்கு முன் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். 

மீன் எண்ணெய் மாத்திரைகளை சரியான முறையில் சேமித்து வைக்க வேண்டியது அவசியம். இதனால் அவற்றின் தரம் பராமரிக்கப்பட்டு, ஆக்சிஜனேற்றத்தால் ஏற்படும் மாற்றத்தைத் தடுக்க முடியும். நேரடி சூரிய ஒளியில் இவற்றை வைக்காமல், குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் அவற்றை சேமிக்கவும். நீங்கள் பயன்படுத்துவதற்கு முன் காலாவதி தேதியை சரிபார்த்து, ஒருவேளை விரைவில் அதன் தேதி முடியப்போகிறது என்றால் அத்தகைய தயாரிப்புகளை நிராகரிக்கவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com