சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூலிகைதான் சிறுகண்பீளை. இதை சிறுபீளை, கண்பீளை, பொங்கல் பூ, பாஷாணபேதி போன்ற பல பெயர்களைக் கொண்டு அழைக்கிறார்கள். இந்த மூலிகையில் Antioxidant, flavonoids, alkaloids போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இது நம் உடலில் ஏற்படும் வயிற்றுவலி, தலைவலி தொடங்கி புற்றுநோய் வரை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகம் சம்பந்தமான அனைத்துப் பிரச்னைகளையும் குணமாக்கக்கூடியது. இதன் பயன்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. சிறுநீரகக் கற்கள் பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது சிறுகண்பீளை. இதில் இயற்கையாகவே anti urolithiatic activity உள்ளது. இது சிறுநீரகத்தில் உருவாகக்கூடிய கற்களை சிறிது சிறிதாகக் கரைத்து வெளியேற்றக்கூடியது. சிறுநீர் பிரச்னை காரணமாக அதிக எரிச்சலுடனும், வலியுடனும் வெளியேறும் சிறுநீரை குணமாக்கும். எனவே, சிறுநீரகக் கற்கள் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சிறுகண்பீளையுடன் சமஅளவு சீரகம் சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆனதும் அதை எடுத்து காலை, மாலை என உணவுக்கு முன்பு அருந்தி வர சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும்.
2. அதிக இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையின் காரணமாக சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய நெப்ரான் மற்றும் வடிகட்டி செல்கள் சேதமடைந்து சிறுநீரகம் சுருங்கி செயலிழக்கும் பிரச்னை ஏற்படும். இதைத் தடுக்கும் ஆற்றல் சிறுகண்பீளைக்கு உண்டு. இதில் அதிகமாக இருக்கும் Anti oxidant மற்றும் Anti inflammatory பண்புகள் நேப்ரான் பாதிப்படைவதை தடுப்பதோடு, கழிவுப்பொருட்கள் வெளியேறவும் உதவும்.
3. சிறுநீரகத் தொற்று என்று சொல்லப்படும் Urinary track infection வராமல் தடுக்கும் ஆற்றல் சிறுகண்பீளைக்கு உண்டு. இதில் ஏராளமான Phenolic compounds, saponins, flavonoids, tannins போன்றவை உள்ளன. இது சிறந்த anti microbial ஆக செயல்பட்டு சிறுநீரகத்தில் தொற்றை ஏற்படுத்தும் E.coli பாக்டீரியாவை அழிக்கும். இது சிறந்த சிறுநீர் பெருக்கி என்பதால், அதன் வழியாக பாக்டீரியாவை வெளியேற்றி மீண்டும் சிறுநீர் தொற்று ஏற்படாமல் காக்கும்.
4. டைப் 2 சர்க்கரையால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகவும் நல்லதாகும். இதில் உள்ள Anti inflammatory பண்புகள் அதிக சர்க்கரை காரணமாக உடலில் ஏற்படும் Chronic inflammationஐ தடுக்கும். அதோடு, இரத்தத்தில் சர்க்கரை அளவும் சீராக இருக்க உதவுகிறது.
5. குடல் சார்ந்த நோய்களை குணமாக்கும் ஆற்றல் சிறுகண்பீளைக்கு உண்டு. இதில் உள்ள அதிகப்படியான Anti inflammatory பண்புகள் குடலின் உட்சுவரில் ஏற்படும் அழற்சியை தடுக்கும். குடலில் ஏற்படும் Inflammatory bowel disease போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் காலை வெறும் வயிற்றில் சிறுகண்பீளை சாறுடன் நீர்மோர் கலந்து குடித்துவர நாளடைவில் நல்ல பலனைத் தரும். இந்த ஒரு மூலிகையை சாப்பிடுவதால், உடலில் உள்ள எண்ணற்ற பிரச்னைகள் தீர்ந்து ஆரோக்கியமாக வாழலாம். முக்கியமாக, இந்த மூலிகையை நல்ல சித்த மருத்துவர் ஒருவர் மேற்பார்வையில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.