
யூரிக் அமிலம் காரணமாக, இதய நோய், சிறுநீரக கற்கள் மற்றும் மூட்டுவலி போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, அதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இன்றைய காலகட்டத்தில், முக்கால் வாசி நபர்கள் யூரிக் அமிலத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
உடலில் பியூரின் உடைவதால் யூரிக் அமிலம் உருவாகிறது. இது இரத்தத்தின் உதவியுடன் சிறுநீரகங்களை அடைகிறது. யூரிக் அமிலம் உடலில் இருந்து சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால், அது சிறுநீர் வழியாக உடலில் இருந்து வெளியேறாத போது, அதன் அளவு நம் உடலில் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக நம் கால் மூட்டுகளில் வலி ஏற்படுகிறது. மேலும் பாதிக்கபட்டவர்கள் எழுந்திருப்பதிலும், உட்காருவதிலும் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
யூரிக் அமிலத்தால், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள் மற்றும் மூட்டுவலி போன்ற நோய்களும் ஏற்படலாம். எனவே, இதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இத்தகைய சூழ்நிலையில், இதைக் கட்டுப்படுத்த, நீங்கள் பாகற்காய் சாற்றை அருந்தலாம். பாகற்காய் சாறு யூரிக் அமிலத்தை கட்டுபடுத்த மிகவும் சிறந்தது எனக் கருதப்படுகிறது. ஒரு கிளாஸ் பாகற்காய் சாறு இயற்கையாகவே யூரிக் அமிலத்தைக் குறைக்கும் அற்புதமான பண்புகளைக் கொண்டுள்ளது.
பாகற்காய் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது, மேலும் கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை நல்ல அளவில் கொண்டுள்ளது. இந்த கூறுகள் கீல்வாதத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
பாகற்காய் நீரிழிவு நோய்க்கும் மிகவும் நன்மை பயக்கும் எனக் கருதப்படுகிறது. பாகற்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பீட்டா கரோட்டின் மற்றும் பிற தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. இதன் காரணமாக இது இன்சுலின் போல செயல்பட்டு அதிகரித்து வரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
பாகற்காய் எப்படி சாப்பிடுவது
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை கப் பாகற்காய் சாற்றைக் குடிக்கலாம். கசப்பை நீக்க சிறிது கருப்பு உப்பு அல்லது எலுமிச்சை சேர்க்கலாம். இது கீல்வாதம் மற்றும் மூட்டுவலிக்கு நன்மை பயக்கும். நீங்கள் விரும்பினால், சாறு தவிர, பல்வேறு வகையான பாகற்காய் காய்கறிகளைச் செய்தும் சாப்பிடலாம்.
மேலே குறிப்பிட பட்ட விவரங்கள் பொதுவானதாகும். பாகற்காய் மிகவும் நல்லது என்பது யாவரும் அறிந்த உண்மை. இருந்தாலும் உங்களுக்கு யூரிக் அமிலம் மற்றும் நீரிழிவு நோய் இருந்தால் மருத்துவரை நாடி முறையான சிகிச்சை பெற்று கொள்ளவும் மற்றும் அவரின் ஆலோசனைப்படி தினமும் எத்தனை அளவு பாகற்காயை உணவில் சேர்க்க வேண்டுமோ அத்தனை அளவை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)