சக்கை என தூக்கி எறியும் எலுமிச்சம் தோலில் இத்தனை நன்மைகளா?

Lemon peel
Lemon peelhttps://tamil.webdunia.com
Published on

லுமிச்சை சாற்றில் இருப்பதை விட அதன் தோலில்தான் வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து அதிகம் உள்ளது. எலுமிச்சை தோலில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. எலுமிச்சை தோலில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் அதிகரிக்கச் செய்கிறது.

எலுமிச்சை தோலுடன் தயாரிக்கப்பட்ட ஊறுகாயை உணவில் சேர்த்துக்கொள்ள சில வகை சருமப் புற்று நோய்கள் வராமல் தடுக்கலாம். இதன் தோலில் இருந்து கிடைக்கும் எண்ணெயில் டி-லைமோனீன் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் உள்ளது. இது பெருங்குடல், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும். எலுமிச்சை தோலில் இருக்கும் ஃப்ளேவனாய்டு வைட்டமின் சியை உள்வாங்கிக் கொள்ளும் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

பற்கள், எலும்புகளுக்கு வலு சேர்க்கும் கால்சியம் இதில் உள்ளது. எலுமிச்சை தோலில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் ஈறு தொடர்பான பிரச்னைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி நம் உடலில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், தசை நாண்கள், சருமம், இரத்தக் குழாய்களை கட்டமைக்கும் செயல்களில் உதவுகின்றன.

எலுமிச்சை தோலில் கரோட்டினாய்டுகள் அதிகமாக உள்ளதால் இவை கண்களை பாதுகாக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவும். பிரிட்ஜில் சில எலுமிச்சை தோல்களை போட்டு வைக்க குளிர்சாதனப் பெட்டியிலிருந்து துர்நாற்றம் வருவதை தடுக்கலாம்.

எலுமிச்சை தோல்களை நன்கு வெயிலில் காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். அரிசி மாவு ஒரு ஸ்பூன், எலுமிச்சை தோல் பொடி அரை ஸ்பூன், சிறிதளவு பால் கலந்து குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட முகம் பளிச்சென்று மாசு மருவின்றி காணப்படும்.

இதையும் படியுங்கள்:
வயதான தோற்றத்தைத் தள்ளிப்போட உதவும் 8 வழிகள்!
Lemon peel

எலுமிச்சை தோல்களை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது ஆறியதும் வடிகட்டி அதனை முக டோனராகப் பயன்படுத்தலாம். எலுமிச்சை தோல் பொடியுடன் ஓட்ஸ் ஒரு ஸ்பூன், சிறிது தேன் கலந்து ஃபேஸ் ஸ்க்ரபாகப் பயன்படுத்தலாம்.

செப்பு, பித்தளைப் பாத்திரங்களை எலுமிச்சை தோலுடன் சிறிது உப்பு சேர்த்து தேய்த்துக் கழுவ பளிச்சென்று மின்னும். எலுமிச்சை தோலை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொள்ள உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி பலவிதமான உடல்நல பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com