திருமண வாழ்க்கைக்கு சவால் விடும் தைராய்டு - விவாகரத்துகளுக்கு இதுவும் ஒரு காரணமாம்!

Thyroid problem
Thyroid problem
Published on

கணவனை அலட்சியப்படுத்துதல், புகுந்த வீட்டாரோடு எந்நேரமும் முகம் சுளித்தல், வியர்த்து வழிதல், நெஞ்சில் படபடப்பு, தன்னிலை இழந்து கத்துதல் என்று (புதுமண) பெண்கள் முறையின்றி நடந்து கொள்வதற்கு முக்கிய காரணம் மனிதர்கள் அல்ல. அப்பெண்களுக்கு இருக்கும் தைராய்டு பிரச்னை என்பது பலருக்கும் தெரிவதில்லை. பெண்ணின் தாய்வீட்டாரும் தன் பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் பாடாய் படுத்துகிறார்களே என்று புலம்பி தவித்து பிரச்னையை விஸ்வரூபமாக்கி விவாகரத்து வரை வந்துவிடுகிறார்கள்.

இன்றைக்கு விவாகரத்து குறித்து வக்கீல்களை கேட்டால், தந்தையை விட தாய்மாரே தம் பெண்களுக்கு விவாகரத்து வாங்கித் தருவதில் மும்முரமாக இருக்கின்றனர் என்று தெரிவிக்கின்றனர். திருமணமாகி மூன்று மாதங்களுக்குள் பலர் விவாகரத்து பெறுவதில் முனைப்பாக செயல்படுகின்றனர். இதற்கு தைராய்டு பிரச்னையும் ஒரு காரணம். இந்த பிரச்னை குறித்து விளக்கமாக காண்போம்.

வயதுக்கு வரும்போது:

தைராய்டு பிரச்னை பெண்கள் வயதுக்கு வரும்போதே தலை காட்ட ஆரம்பித்துவிடுகிறது. மாதாமாதம் ஒழுங்காக இவர்களுக்கு மாதவிடாய் வராது. அதை இப்பெண்களின் தாய்மார் 'சாப்பிடாமல் இருப்பதால் சத்தில்லாமல் இருக்கிறாள்' என்று காரணம் காட்டி பிரச்னையை அறியாமல் இருந்துவிடுகின்றனர். தாய்மாரின் இந்த அறியாமையே மகள்களின் திருமண வாழ்க்கைக்கு யமனாக வந்துவிடுகிறது. ஒழுங்கற்ற மாதவிலக்கு ஒர் உடலியல் பிரச்னை. அதற்கு தக்க மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சில இளம்பெண்களுக்கு வெள்ளைபடுதல் பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதற்கும் தாய்மார் 'உடலில் உஷ்ணம் அதிகரித்துவிட்டது' என்று காரணம் சொல்லி மருத்துவரிடம் காட்டாமல் தவிர்த்துவிடுகின்றனர். கைமருந்து கொடுத்து சுகமாக்க முயன்று தோற்று போகின்றனர். இது பின்னர் பெரிய பிரச்னையாகி கருப்பை அகற்றுதல், கருப்பைவாய் புற்று நோய் என்றளவிற்கு கொண்டுவந்துவிடுகிறது. பள்ளிகளிலும் பெண்களுக்கு வரும் நோய்கள் குறித்து சரிவர கற்றுத் தருவதும் இல்லை.

தைராய்டு சுரப்பி:

இனி இந்த மன(ண)ப்பிரச்சனைகளுக்கு காரணமான தைராய்டு சுரப்பு பற்றி சற்று விரிவாக காண்போம். தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக சுரந்தால், அதை ஹைப்பர் தைராய்டு என்பர். குறைவாக சுரந்தால், ஹய்போ தைராய்டு என்பர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும் போது தைராய்டு மட்டுமென்ன விதிவிலக்கா?

தைராய்டு அதிகமாக சுரத்தலின் விளைவு:

தைராய்டு அதிகமாக சுரந்தால் அந்தப் பெண்கள் எப்போது ஒரு வித படபடப்போடு ரெஸ்ட்லெஸ்ஸாக இருப்பார்கள். அவர்களுக்கு அதிகமாக வியர்க்கும். சிலருக்கு உள்ளங்கை உள்ளங்கால் கூட வியரக்கும். அவர்களின் தலைமுடி மெலிந்து போய் வலுவின்றி இருக்கும். நகங்கள் அடிக்கடி உடைந்துவிடும். மெலிவாக தட்டை குச்சி போல தோன்றுவார்கள். சிலருக்கு [எல்லோருக்கும் அல்ல] கண்கள் சற்று வெளியே துருத்திக் கொண்டிருக்கும்.

அப்போது பெற்றோருக்கு தன் மகளுக்கு தைராய்டு பிரச்சனை இருப்பது தெரியாது. எதிலும் பிடிப்பின்றி இருப்பார்கள். எல்லோரையும் கடுமையாக விமர்சனம் செய்வார்கள் அவ்வாறு பேசும்போது படபடப்பாக பேசுவார்கள். சில சமயம் கைகால் நடுக்கமும் இருக்கும் இவற்றை பெற்றோர் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. புகுந்த வீட்டில் இப்படி பேசினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று பெற்றோர் சிந்திப்பதில்லை. செல்லமாக வளர்ப்பதாக நினைத்துக்கொண்டு பெண்களின் நோயாளித்தனத்தை வளர்த்துவிடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
ஜப்பானின் 'ககெய்போ' முறை - டிஜிட்டல் சாதனங்கள், எக்செல் ஷீட்கள் இல்லாத நிதி மேலாண்மை டெக்னிக்!
Thyroid problem

தைராய்டினால் கண்ணும் பல்லும் கூட பாதிக்கப்படும். இதையும் இவர்கள் யாரும் புரிந்துகொள்வதில்லை

தைராய்டு குறைவாக சுரப்பதன் விளைவு:

ஹைராய்டு சுரப்பி சராசரி அளவுக்கும் குறைவாக சுரந்தால் அப்பெண்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். ஃபேன் காற்றில் இருப்பதைக்கூட தவிர்ப்பார்கள். குளிர் எடுக்கும். நினைவாற்றல் குறைந்துவிடும். எதையும் உடனுக்குடன் மறந்துவிடுவார்கள். இவர்களின் குரல் கரகரப்பாக இருக்கும். திருமணத்துக்கு முன்பே இப்பெண்களுக்கு தலையில் பொடுகு தொல்லை அதிகம் இருக்கும். முடி வறண்டு காணப்படும். கண்புருவம் அடர்த்தியாக இருக்காது. பாதத்தில் பித்த வெடிப்புகள் இருக்கும். முகப்பரு நிறைய வரும்.

தைராய்டு சுரப்பு குறைவாயிருக்கும் பெண்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். இது ஒரு தொந்தரவு. எப்போதும் மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்விருக்கும். ஆனால் கழிவறைக்கு போனால் மலம் கழிக்க வராது. இதனால் இந்தப் பெண்கள் எரிச்சலோடு பேசுவார்கள், மன அழுத்தம் அதிகமாகி சில நேரம் ஓவென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள், எதையும் தூக்கி எறிவார்கள். இந்த அழுகையின் காரணம் புகுந்த வீட்டாருக்கும் புரியாது. மன அழுத்தத்தால் இப்பெண் தவிக்கிறாள் என்பது எவருக்கும் தெரியாது.

இதையும் படியுங்கள்:
நட்சத்திர சோம்பு: ஆடம்பர தோற்றம் கொண்ட மணமூட்டும் மசாலா
Thyroid problem

இதயத் துடிப்பு குறைவாக இருக்கும். எடை கூடிக்கொண்டே போகும். ஆனால் உடம்பில் எந்த வேலை செய்வதற்கும் தெம்பு இருக்காது. சோர்வாக இருக்கிறது என்று இவர்கள் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். பார்க்க புஷ்டியாக தெரிவதால் இவர்கள் வேலை செய்யாமல் இருக்க சோர்வை பொய்காரணம் காட்டி ஏமாற்றுவதாகவே மற்றவர் கருதுவர். இதனாலும் புகுந்த வீட்டில் பல பிரச்னைகளை இவர்கள் சந்திப்பார்கள்.

கருவளத்தை பாதிக்கும் தைராய்டு:

தைராய்டு பிரச்னை இருப்பவர்களுக்கு கருமுட்டை உற்பத்தி ஆகாது. அதனால் மாதாமாதம் விலக்காக மாட்டார்கள். மாத விலக்கின்போது சிலருக்கு பொறுக்க இயலாத வயிற்று வலி இருக்கும். இதற்கு சில வலி நிவாரணிகளை பயன்படுத்தி மேலும் பிரச்சனையை சிக்கலாக்கி கொள்வார்கள். பாலிசிஸ்ட் ஓவரி உண்டாகும். அதாவது சினைப்பையில் சாக்லேட் கட்டிகள் உருவாகும். சிறுநீர் பாதையில் எப்போதும் அரிப்பும், வலியும், நோய்தொற்றும் இருக்கும். தாம்பத்ய வாழ்வில் நாட்டம் இருக்காது. இதனால் கணவரை பொய்க் காரணம் கூறி விலக்கி வைப்பார்கள். கணவர் தன்னை இப்பெண்ணுக்கு பிடிக்கவில்லையோ என்று கருதி சந்தேகப்படுவார்கள். இதுவும் விவாகரத்து வரை கொண்டுவந்து விட்டுவிடும்.

தைராய்டு சிகிச்சை:

பெண்களின் குடும்ப வாழ்க்கையில் பூகம்பம் வீசச் செய்யும் இந்த ஹைராடுக்கு எளிய சிகிச்சை அல்லோபதியில் உண்டு. ஆரம்பத்திலேயே நோயின் அறிகுறியை தெரிந்துகொண்டால், இதற்கு வலி தரும் ஊசியோ செலவு வைக்கும் அறுவை சிகிச்சையோ தேவையில்லை. ரத்த பரிசோதனை செய்து தைராய்டின் [TSH]அளவை மருத்துவர் அறிந்துக்கொள்வார். பின்பு தைராக்சின் என்ற மாத்திரையை பரிந்துரைப்பார். இதை வெறும் வயிற்றில் காபி குடிப்பதற்கு முன்பு போட்டுக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் இது தான் சிகிச்சை. தைராய்டு பிரச்சனை அதிகமாகிவிட்டால் அறுவை சிகிச்சை செய்வதுண்டு.

தொடர் பரிசோதனை, தினமும் வெறும் வயிற்றில் ஒரு மாத்திரை. இது போதும். உங்களின் மண வாழ்க்கையை மணமுள்ள வாழ்க்கையாக மாற்றிவிடும்.

இதையும் படியுங்கள்:
சேப்பாக்கம் மைதானத்தில் 'தல, தல' என்று ரசிகர்கள் கொண்டாட்டம்!
Thyroid problem

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com