வயசான காலத்துல வர்ற சோர்வுனு அசால்ட்டா விட்றாதீங்க... பின்னால இருக்கு பெரிய ஆபத்து!

வயது கூட சோர்வு, உடல் எடை மாற்றம், இதயத் துடிப்பு, வெப்பம் கட்டுப்பாடு வரை பாதிக்கும் தைராய்டு கோளாறுகள்: அயோடின் குறைபாடு முதல் ஹைப்போ, ஹைப்பர் தைராய்டிசம் வரை அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது ஏன் அவசியம்?
Thyroid symptoms
Thyroid symptomsImage credit: AI
நடேஷ் கன்னா

என் பெயர் நடேஷ் கன்னா. எனது உண்மை பெயர் சிவராம சுப்ரமணியன். எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. தற்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 57 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். சிறுகதை கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகள் ஜோக்ஸ் என எழுதி உள்ளேன். நான் கல்கி, தீபம், மங்கையர் மலர், குமுதம், விகடன், சாவி இதயம் பேசுகிறது முத்தாரம், ராணி, தேவி, ஜூனியர் விகடன், நக்கீரன், துக்ளக், தினமலர், போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளேன். எனக்கு ஆரம்ப காலத்தில் எழுத தூண்டியது கல்கி வார இதழ். அதில் நான் எழுதிய முதல் துணுக்கு இடம் பெற்றது அன்றிலிருந்து இன்று வரை எழுதி வருகிறேன். நான் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. என்னை எழுத தூண்டிய கல்கிக்கு வாழ்த்துக்கள்.

Updated on

கழுத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள சிறிய தைராய்டு சுரப்பி உடலின் வளர்சிதை மாற்றம் ஆற்றல் அளவு இதயத்துடிப்பு உடல் வெப்பம் உட்பட பல்வேறு விஷயங்களை பராமரிக்க தேவையான ஹார்மோனை சுரக்கிறது. இந்த சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால் பாதிப்பை உடல் முழுவதும் உணர முடியும்.

வயது அதிகரிக்கும் போது தைராய்டு சுரப்பதில் மாற்றங்கள் ஏற்படலாம் குறைவாக சுரந்தால் உடலின் செயல்கள் மந்தமாகும் அதிகமாக சுரப்பது ஆபத்தானது வளர் சிதை மாற்றத்தை ஏற்படுத்தலாம். நாம் பயன்படுத்தும் உப்பில் அயோடின் கலந்து இருந்தாலும் அயோடின் குறைபாட்டால காய்ட்டர் (Goitre) எனப்படும் தைராய்டு சுரப்பி வீக்கம் ஏற்படும். தைராய்டு அறிகுறிகள் பெரும்பாலும் சோர்வு வயது முதிர்வு தொடர்பான பிரச்சனைகளை போலவே இருப்பதால் பலர் இதை கவனிக்க தவறுகின்றனர் இவற்றை முன்கூட்டியே கண்டறிந்தால் இதன் பாதிப்பை குறைக்க முடியும்.

தைராய்டு ஸ்கிரீனிங் பரிசோதனையில் டி.எஸ்.ஹெச் அளவு அதிகமாக இருந்தால் ஹைப்போ தைராய்டிசம் எனப்படும் குறைந்த சுரப்பு மற்றும் டி.எஸ்.ஹெச். அளவு குறைவாக இருந்தால் ஹைபர் தைரொட்டிசம் எனப்படும் அதிக சுரப்பை குறிக்கிறது.

இதையும் படியுங்கள்:
45+ பெண்களுக்கு... வெயிலை விட கொடுமையான 'ஹாட் பிளாஷஸ்': தப்பிப்பது எப்படி?
Thyroid symptoms

ஃப்ரீ டி 3 டி4 சோதனை மூலம் ரத்தத்தில் உள்ள தைராய்டு ஹார்மோன் அளவுகளை கண்டறியலாம். மேலும் சில பரிசோதனைகள் செய்வதால் ஆட்டோஇம்மூன் கோளாறுகளை கண்டறியலாம். கழுத்துப் பகுதியை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்தால் தைராய்டு முடிச்சுகள் நீர்க்கட்டிகள் சுரப்பியின் வீக்கத்தை கண்டறியலாம்

ஊசி மூலம் நீர் எடுத்து தைராய்டு முடிச்சுகள் இருப்பதை கண்டறியலாம். இந்த நோய் ஏற்பட்டால் தினமும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

ஆபத்து இல்லாத முடிச்சு வகைக்கு எந்த வித சிகிச்சையும் தேவையில்லை சந்தேகத்திற்குரிய முடிச்சுகள் காணப்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும்.

இவற்றைத் தடுப்பதற்கு அயோடின் கலந்து உப்பை உபயோகப்படுத்த வேண்டும். செலினியம் துத்தநாகம் நிறைந்த சத்தான உணவை சாப்பிடுவது, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, போதுமான அளவு தூக்கம் ஆகியவை அவசியம். டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை சாப்பிடக்கூடாது. வருமுன் காப்பது சிறந்தது

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com