மழைக் காலங்களில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்குகாய்ச்சல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகளவில் ஒரு ஆண்டிற்குப் பல மில்லியன் மக்களைப் பாதிக்கின்றன. இந்த டெங்குகாய்ச்சலின் அறிகுறிகள், யார் யாருக்கு வரும் மற்றும் என்ன உணவுகள் எடுத்துக்கொள்ளலாம் என்பன பற்றி பொதுநல மருத்துவர் செல்வ நாயகம் கூறியதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
டெங்குகாய்ச்சலின் அறிகுறிகள்:
டெங்கு காய்ச்சல் (அதிகபட்சம் 102 டிகிரி அளவு இருக்கும்)
தலைவலி
வாந்தி
உடல்சோர்வு
கடுமையான உடம்பு வலி
எலும்பு வலி
பசியின்மை
போன்றவை டெங்குகாய்ச்சலின் அறிகுறிகள்.
மேலும் ஏற்கனவே உடம்பில் நீரிழிவு போன்ற நோய்கள் இருந்தால் ஈறுகளில், மூக்கில், சிறுநீரில் இரத்த கசிவு ஏற்பட்டு உயிரைக் கொல்லும் அதிதீவிரமான காய்ச்சலாக மாறும் வாய்ப்பு உண்டு. ஆனால் அதுபோன்ற கடுமையான காய்ச்சல் நூற்றில் ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே ஏற்படும்.
டெங்கு யாரை அதிகம் பாதிக்கும்?
பொதுவாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு டெங்குகாய்ச்சல் அதிக அளவில் பாதிக்கின்றன. அதேபோல் உடம்பில் ஊட்டச்சத்து குறைவாக உள்ளவர்கள் அதிகளவு டெங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக ஏற்கனவே டெங்கு பாதிக்கப்பட்டவர்களை ஏடிசு கொசுவகைகள் கடித்துவிட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களைக் கடிக்கும்போது டெங்கு வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் உடம்பில் பெருக ஆரம்பிக்கும். பிறகு ஒரு வாரத்திலேயே அவர்களுக்கும் டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து டெங்குகாய்ச்சல் உருவாகும்.
டெங்குகாய்ச்சலின் போது எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:
அதிகளவு தண்ணீர், இளநீர் மற்றும் நீராதாரம் உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது.
வாழைப்பழம், பப்பாளி, மாதுளை போன்ற பழங்கள் சாப்பிடுவதால் காய்ச்சல் நேரத்தில் உடலுக்குத் தெம்பாக இருக்கும்.
ஆரஞ்சு பழம் போன்ற வைட்டமின் சி இருக்கும் பழங்கள் எடுத்துக்கொள்வதால் தூக்கம் அதிகரிக்கும், டெங்குகாய்ச்சல் குறைவதற்கு உதவும்.
காய்கறி சூப் எடுத்துக்கொள்வதால் வைட்டமின் சி அதிகமாகி நோய் எதிர்ப்புச் சக்திகளை அதிகரித்துக் காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது
சத்துமிக்க உணவுகள் எடுத்துக்கொள்வதால் உடம்பில் நோயெதிர்ப்பு சக்திகள் அதிகமாகி சீக்கிரம் காய்ச்சலிலிருந்து வெளிவர உதவும்.
டெங்கு நோய் தடுப்பு வழிமுறைகள்:
மழைக்காலத்தில் வீட்டை சுற்றி இருக்கும் தேவையற்ற பாட்டில்கள், குப்பைகளை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்வது டெங்கு நோய் பரபரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் பொருகுவதை தடுக்கும்.
வீட்டில் கொசு வராத அளவுக்குக் கொசு வர்த்தி அல்லது கொசு வலைகள் பயன்படுத்திக்கொள்ளவும்.
வீட்டில் உள்ள யாராவது ஒருவருக்கு 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் மற்றும் மேற்குறிப்பிட்ட டெங்கு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவர்களை அணுகி பாதிக்கப்பட்டவரைத் தனிமைப்படுத்தி வைக்கவும்.
வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளுக்கு டெங்கு வராமல் இருக்க முன்னதாகவே மருத்துவ ஆலோசனையுடன் தடுப்பூசி (Dengvaxia vaccine) போட்டுக்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அருகிலிருக்கும் தோட்டங்கள், பூங்காக்கள், சாக்கடைகள் போன்றவற்றைச் சுகாதார பணியாளர்களிடம் சொல்லி ( நாமும் சுத்தம் செய்யலாம்) சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளும் அதேநேரம், தினமும் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக்கொள்வது நல்லது.
அறிகுறிகள் தென்பட்ட பின்னரோ அல்லது வெளியூருக்குச் சென்று வந்தபின்னரோ எதாவது காய்ச்சல் ,அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.