அக்குளில் உள்ள வியர்வை நாற்றம் போகணுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...

Sweat armpit
Sweat armpit
Published on

சிலருக்கு நறுமணம் மிக்க சோப்பில் குளித்து வாசனை திரவியங்களை போட்டும் வெளியே வந்த அரை மணி நேரத்தில் வேர்வை நாற்றம் தோன்றி அனைவர் முன்னிலையிலும் அவர்களை அசிங்கப்படுத்தும்.

வியர்வை நாற்றம் என்பது உடலில் சுரக்கும் ஒரு வித சுரப்பிகளில் இருந்து வெளிப்படுகிறது. வியர்வைக்கு என்ன காரணம்? என்பதை தெரிந்து கொண்டு எப்படி நீக்கலாம்? என்பதை பார்ப்போம்.

நம்முடைய சருமத்தில் இரண்டு விதமான வியர்வை சுரப்பிகள் உண்டு. எக்ரைன் என்றும் மற்றொன்று அபோக்ரைன் என்றும் அழைக்கப்படுகிறது. நமது உடலின் பல பகுதிகளில் முகம், கை, கால், நெஞ்சு பகுதிகளில் சுரக்கும் சுரப்பி எக்கரைன் என்றழைக்கப்படுகிறது.

அக்குள், நெஞ்சு பகுதி பிறப்புறுப்பு ,பகுதியில் அபோக்ரைன் சுரப்பி சுரக்கிறது. இதுபருவ வயதுக்கு பிறகு உண்டாவதால் குழந்தைகள் மீது இந்த துர்நாற்றம் உண்டாவதில்லை.

நாற்றம் அடிக்கும் வியர்வை ஏன் ?

வியர்வையில் கொழுப்பு புரதங்களுடன், கெட்ட பாக்டீரியாக்கள் இணைந்து கடுமையான நாற்றத்தை உண்டாக்குகிறது. காற்று உட்புகாத ஈரப்பதமான உறுப்புகள் வியர்வையால் மேலும் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன.

இதனைபோக்க வீட்டிலேயே உள்ள எளிய பொருட்களை கொண்டு வியர்வை வாடையை நிரந்தரமாக விரட்டி அடிக்கலாம்.

தினமும் இரண்டு முறை குளியுங்கள். குளித்த பின் ஈரம் போக அக்குளை துடைத்து உடை அணியுங்கள்.

எலுமிச்சை:

தினமும் குளிக்கும்போது ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை தண்ணீரில் கலந்து கால் மணி நேரம் கழித்து உடம்பில் ஊற்றி குளித்து வந்தால் கிருமிகள் அழிவதோடு சிறந்த மணமூட்டியாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அதிக புரதம் உயிர் ஆபத்து தருமா?
Sweat armpit

சந்தனக்கட்டை:

சந்தனக்கட்டையை சிறிய அளவு வாங்கி தினமும் இரவு நேரங்களில் படுக்கும் போது சந்தனத்தை நீர் விட்டு குழைத்து அக்குளில் இரவில் தடவி வந்தால் வேர்வை நாற்றம் மறைந்து சந்தன மணம் கமழும். (தரமான ஒரிஜினல் சந்தனம் வாங்குவது நல்லது. கிடைக்காதவர்கள் சந்தன பொடி வாங்கி ரோஸ் வாட்டரில் குழைத்து அக்குளில் தடவி வரலாம்.)

தயிர்:

தினமும் குளிக்கும் முன்பு கெட்டி தயிர் உடன் ரோஸ் வாட்டர் கலந்து நன்றாக குழைத்து, அக்குளில் பூசி அரை மணி நேரம் கழித்து, குளித்து வாரம் இரு முறை இதனை செய்து வந்தால் வியர்வை வாடை நிரந்தரமாக நீக்கும்.

கற்றாழை:

கற்றாழையை எடுத்து அதில் உள்ளிருக்கும் ஜெல்லை அக்குளில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் வாடையும் அக்குளில் இருக்கும் கருமையும் நீங்கும். வெளியில் செல்லும் போது கற்றாழை ஜெல்லை மசாஜ் செய்தும் செல்லலாம். நீண்ட நேரம் வியர்வை வாடையை வெளியேறாது.

தக்காளி:

நன்றாக பழுத்த நாட்டு தக்காளியை மிக்ஸியில் நைசாக அடித்து அக்குளில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால், நாள் முழுக்க வியர்வை வாடை இல்லாமல் இருக்கலாம். இதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

நறுமண பொடி:

சந்தனப் பொடி, வெட்டிவேர் பொடி, பாசிப்பருப்பு மாவு, ரோஸ் வாட்டர் அனைத்தையும் குழைத்து அக்குளில் தடவி நன்றாக காய்ந்ததும் குளிக்கலாம். குளித்த பின் ஈரம் போக துடைத்து அதில் கெமிக்கல் இல்லாத டியோரண்டை தடவி வந்தால் வேர்வை நாற்றத்தை உண்டாக்காது.

வேப்பிலை:

வேப்பிலை வியர்வை நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை விரட்டி அடிக்க பயன்படுகிறது. வேப்பிலையுடன், மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி பத்து நிமிடங்கள் கழித்து குளித்து வரலாம். இது நறுமணம் கொடுக்காது என்றாலும் கிருமிகளை ஒழித்து நாற்றத்தை தடுக்கும். இதில் ரோஸ் வாட்டர் கலந்தும் தேய்க்கலாம்.

புதினா:

புதினா இலையுடன், தயிர் சேர்த்து அரைத்து அக்குளில் பூசி காய விட்டு குளிர்ந்த நீரில் கழுவினாலும் வியர்வை நாற்றம் போகும். நறுமணமாகவும் இருக்கும். இதனை அக்குள் மட்டும் இல்லாமல் கழுத்து பகுதியில் எல்லாம் சுற்றி தேய்த்தும் குளிக்கலாம். புதினா நீரில் ஊற வைத்தும் குளிக்கலாம். வியர்வை நாற்றம் நீங்கும்.

இதையும் படியுங்கள்:
கொரோனா - ஒரு சுவாரஸ்யமான ஃபிளாஷ் பேக்!
Sweat armpit

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com