சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்தின் முக்கிய ஆதாரமாக டோஃப்பு மற்றும் பனீர் இரண்டும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டுமே சத்தான உணவுகள் என்றாலும், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் உடலுக்கு ஏற்படுத்தும் நன்மைகள் வேறுபடுகின்றன. இந்தப் பதிவில் டோஃபு மற்றும் பன்னீர் ஆகியவற்றின் ஊட்டச்சத்து மதிப்புகள், நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகியவற்றை விரிவாகப் பார்க்கலாம்.
Tofu: டோஃபு என்பது சோயா பால் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சைவ உணவு. இது புரதம் இரும்பு மற்றும் கால்சியம் ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகும். இதை பல வகை உணவுகளில் சேர்த்து நாம் உண்ண முடியும். தாவர வகை புரதத்தின் சிறந்த ஆதாரமாக இது இருக்கிறது. டோஃபுவில் கொழுப்பு குறைவாக இருப்பதால், இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லது. மேலும், இதில் கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை. எனவே, பல்வேறு உணவுகளில் இதை சேர்த்து நாம் சாப்பிட முடியும். ஆனால், சில வகை டோஃபுகளில் அயோடின் குறைவாக இருக்கும். சோயா பால் கொண்டு தயாரிக்கப்படுவதால் இதில் ஆண்டி நியூட்ரியன்ட்கள் இருக்கலாம்.
Paneer: பனீர் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவு. இதில் கால்சியம், புரதம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதை பொதுவாக வறுத்தோ அல்லது உணவாக சமைத்தோ சாப்பிடலாம். இதில் நிறைந்து காணப்படும் புரதம் தசை வளர்ச்சிக்கு அவசியமானது. இது எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமான கால்சியத்தைக் கொண்டுள்ளது. டோஃபுவை விட பனீர் சாப்பிட சுவையானதாக இருக்கும். ஆனால், பால் பொருட்களில் இருந்து தயாரிப்பதால் பனீரில் கொழுப்பு அதிகமாக இருக்கும். பன்னீரில் லாக்டோஸ் இருப்பதால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும். மேலும், இதில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால், இதய நோய் உள்ளவர்கள் குறைவாகவே உண்ண வேண்டும்.
எது உடலுக்கு நல்லது?
டோஃப்பு மற்றும் பனீர் இரண்டும் சத்தான உணவு என்றாலும், உங்கள் உடல்நிலை மற்றும் உணவுத் தேவைகளைப் பொறுத்து எது உங்களுக்கு நல்லது என்பதைத் தேர்வு செய்யலாம். இதய நோய் உள்ளவர்கள் பனீருக்கு பதிலாக டோஃபு சாப்பிடுவது நல்லது. அதேபோல லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களும் டோஃபு சாப்பிடலாம். பன்னீர் கால்சியத்தின் சிறந்த ஆதாரமாக இருப்பதால், எலும்பு ஆரோக்கிய தேவை இருப்பவர்கள் பனீர் சாப்பிடுவது நல்லது.
இந்த உணவுடன், எல்லா ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்படி சமச்சீர் உணவை உட்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. இவற்றைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கு எது தேவை என்பதை நீங்களே முடிவெடுத்து சாப்பிடுங்கள்.