நாக்கு உணவை ருசி பார்க்க மட்டுமல்ல; நோய் காட்டும் கண்ணாடியுமாகும்!

Tongue is not only for tasting food; it is also a mirror that shows disease!
Tongue is not only for tasting food; it is also a mirror that shows disease!
Published on

நாக்கு, நம் உடம்பின் தன்மையை அப்படியே வெளிக்காட்டும் கண்ணாடி. நாக்கின் தன்மையை வைத்தே உடம்பில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விட முடியும். அதனால்தான், எந்தப் பிரச்னை என்றாலும் மருத்துவர்கள் முதலில் ‘நாக்கைக் காண்பியுங்கள்‘ என்று டார்ச் அடித்துப் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்த உடனே, நம் உடலுக்கு என்ன பாதிப்பு என்பதை ஓரளவுக்கு அனுமானித்து விடுவார்கள்.

நாக்கின் நிறம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய சொல்லும். ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு முதல் அடர் இளஞ்சிவப்பு வரை இருக்கும். ஆனால், குறிப்பிடத்தக்க நிற மாற்றங்கள் அடிப்படை சுகாதார குறைபாடு நிலையைக் குறிக்கலாம். இவை உடல் சிக்கல்களை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும். எனவே, உங்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெறலாம்.

ஆரோக்கியமான நாக்கு நிறம் இளஞ்சிவப்பு. சாதாரண நிறமுடைய நாக்கின் மேற்பரப்பு முழுவதும் சிறிய புடைப்புகள் இருக்கும். இவை பாப்பிலாக்கள். அவை உங்களுக்கு பேசவும், சுவைக்கவும், மெல்லவும், விழுங்கவும் உதவுகின்றன. இளஞ்சிவப்பு நிறத்தைத் தவிர வேறு எந்த நாக்கு நிறமும் உடல் நலக் குறைவு நிலையைக் குறிக்கலாம். உங்கள் நாக்கு நிறம் மாறினால் என்ன நோய் அறிகுறிகள் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

வெள்ளை நிறத்தில் உங்கள் நாக்கு இருந்தால் அது பூஞ்சை தொற்று, லுகேமியா மற்றும் வாய்வழி லிச்சென் பிளானஸ் என்ற ஒரு அழற்சி நிலை நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர். வெள்ளை நாக்கு நிறமாற்றம் கோடுகள், அல்லது தடித்த திட்டுகளில் தோன்றலாம்.

மஞ்சள் நிறத்தில் உங்கள் நாக்கு இருந்தால் அது பெரும்பாலான நேரங்களில், பாக்டீரியாவின் அதிகப்படியான வளர்ச்சியைக் குறிக்கிறது. இது பொதுவாக வாய்வழி சுகாதாரமின்மையால் ஏற்படுகிறது. எக்ஸிமா எனும் படை நோய், மஞ்சள் காமாலை, சில நேரங்களில் சர்க்கரை நோய், சொரியாசிஸ் நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

ஆரஞ்சு நிறத்தில் உங்கள் நாக்கு இருந்தால் வாய் சுகாதாரமின்மை, உலர்ந்த வாய், சில ஆன்டி பயாட்டிக் மருத்துகளின் பக்க விளைவு மற்றும் சில ஒவ்வாத உணவுகளின் அலர்ஜியின் குறிப்பாக (பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளவை) இருக்கலாம். சிவப்பு நிறத்தில் உங்கள் நாக்கு இருந்தால் வைட்டமின் பி குறைபாடு, அலர்ஜியின் அறிகுறிகளாக, கவாசாகி நோய் (இரத்த நாள குறைபாடு) அறிகுறிகளாக இருக்கலாம்.

கருப்பு நிறத்தில் உங்கள் நாக்கு இருந்தால் மட்டமான வாய் சுகாதாரம், சில மருந்துகளின் பக்க விளைவு, புகையிலை பழக்கத்தால், HIV நோய், சர்க்கரை நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களுக்கு நாக்குகள் கருப்பாகக் காணப்படும்.

இதையும் படியுங்கள்:
சிக்கனமும் சேமிப்பும் வீட்டின் இரு கண்கள்!
Tongue is not only for tasting food; it is also a mirror that shows disease!

ஊதா நிறத்தில் உங்கள் நாக்கு இருந்தால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு, எக்ஸிமா நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். சாம்பல் நிறத்தில் உங்கள் நாக்கு இருந்தால் சத்து குறைபாடு மற்றும் எக்ஸிமா நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். பச்சை நிறத்தில் உங்கள் நாக்கு இருந்தால் பாக்டீரியா வளர்ச்சி, பூஞ்சை தொற்றுக்கள், லிச்சென் பிளாரன்ஸ் நோய், வாய் சுகாதாரமின்மை, லுகோபிளாக்யா எனும் வலியற்ற வெள்ளை திட்டுகள் அறிகுறிகளாக இருக்கலாம்.

பர்பிள் நிறத்தில் உங்கள் நாக்கு இருந்தால் உடலில் இரத்த ஓட்ட குறைபாடு, சில இதயநோய்கள் மற்றும் கவாசாகி நோய் அறிகுறிகளாக இருக்கலாம். இதனை தவிர்த்து கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு. மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும், பச்சை அல்லது சிவப்பு Gallblader பிரச்னையையும், வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி), நில நிறம் இதய கோளாறு, பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்.

நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப்படவில்லை என்றும், நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு என்றும், நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு என்றும் பொருள். இதை வைத்தும் உடலின் குறைபாடுகளைக் கண்டுபிடிக்கலாம் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com