

நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு அவர்கள் உணவு முறை காரணமாக இருந்தது. அவர்கள் சமையல் முறையும் காரணமாக இருந்தது. ஏன்னென்றால், அவர்கள் மண்பானையில் சமைத்தார்கள். இடையில் சில காலமாக நாம் அவற்றை மறந்து விட்டோம். மண்பானையில் சமைப்பது தற்போது பிரபலமாகி வருகிறது. அவற்றை பயன்படுத்துவது ஆரோக்கியமானது மற்றும் உங்கள் சமையலறைக்கு பாரம்பரிய தோற்றத்தைக் கொடுக்கும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 2024ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வில் உணவை ஊட்டச்சத்தாக மாற்ற ஒட்டாத சமையல் பாத்திரங்களை தவிர்க்க பரிந்துரைக்கிறது. அதற்கு பதிலாக மண்பானையில் சமைக்க பரிந்துரைக்கிறது. மண்பானையில் சமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. அவற்றை எப்படிக் கையாளவேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.
இதை சோப்பு போட்டு கழுவக்கூடாது. மேலும் புதிய மண்பானையில் சிறிது கோதுமை மாவை சேர்த்து கொதிக்க வைக்க உள்ளே இருக்கும் மண் வெளியேறிவிடும்.
தனியாக வைக்க வேண்டும்
மற்ற பாத்திரங்களும் இதை வைக்கக் கூடாது. ஏனென்றால் இது எளிதில் உடையக் கூடியவை மற்றும் கடினமான உலோகத்திற்கு அருகே வைக்கும் போது இதில் விரிசல் ஏற்பட்டுவிடும். பானைகளை வைக்க தனியாக ஓர் இடம் வேண்டும்.
மரக்கரண்டிகளை பயன்படுத்தவும்
மண் பாத்திரங்களில் சமைக்கும் போது உலோகக் கரண்டி களைத் தவிர்க்கவும். அது மண் பாத்திரத்தின் உட்புறத்தை அழிக்கக் கூடும். அதற்குப் பதிலாக எப்போதும் மரக் கரண்டி களையே பயன்படுத்துவது சிறந்தது. அவை கடுமையான வெப்பத்தையும் தாங்கக் கூடியதாக இருக்கும்.
சோப்பு வேண்டாம்
மண்பானையை சுத்தம் செய்ய சோப்பு பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக பேக்கிங் சோடா, உப்பு மற்றும் தேங்காய் துருவல் உபயோகிக்கலாம்.
நன்கு உலர வைக்கவும்.
மண்பாண்டங்களை சுத்தம் செய்த பிறகு நன்கு உலர்த்துவதை உறுதிப்படுத்துங்கள். ஈரம் பாத்திரத்தை அழிக்கும் .
மண்பானை சமையல் பயன்கள்
மண் பானையில் சமைக்கும் போது உணவு மென்மையாக பஞ்சு போல் இருக்கும். அரிசியானது கார்போஹைட்ரேட் கலவையாகும். நீங்கள் பீங்கான் அல்லது உலோக பாத்திரங்களில் சமைக்கும் போது பாத்திரங்கள் வெகுவாக சூடாகின்றன. அதனால் அரிசியின் ஊட்டச்சத்து எரிக்கப்படும். ஆனால் மண் பானையில் சமைக்கும் போது ஊட்டச்சத்துக்களை தக்க வைக்கின்றன. உலோகங்கள் பீங்கான் பாத்திரங்களில் சமைக்கும்போது அரிசியில் நச்சை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது
பானையில் சமைக்கப்பட்ட உணவு உண்பதன் மூலம் நம் உடலில் இன்சுலின் சமநிலையில் இருக்கும். இதனால் பானையில் சமைப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. நோயெதிர்ப்பும் அதிகமாகிறது.
பி. ஹெச். அளவு
களிமண் பாத்திரங்கள் இயற்கையாகவே காரத்தன்மை கொண்டவை. இதனால் பி.ஹெச். அளவு சமநிலை படுத்தப்படுகிறது.
சிட்ரிக் உணவுகள்
களிமண் பாத்திரங்கள் அதிக வெப்பத்தில் சமைப்பதற்கு ஏற்றது அல்ல. குறைந்த வெப்பத்தில் சமைப்பது நல்லது.
மண்பானை வாங்கியவுடன் அதில் சமைக்கத் கூடாது. அதை பத்துமணி நேரம் தண்ணீர் வைத்து ஊறியிருக்க வேண்டும். இதில் சிட்ரிக் அமில உணவுகளை சமைக்கக்கூடாது.