மார்புக்கு கீழ் வலியா? மூச்சு திணறலா? நிமிடங்களில் தீர்வு தரும் 'வெப்ப முறை'!

கப்பில் வெப்ப முறையைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பது எப்படி என்பதை இப்பதிவில் காண்போம்.
Acupuncture treatment
AcupunctureImg credit: AI Image
Published on

சித்தா, அக்குபஞ்சர் (Acupuncture), ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ முறைகள் நம் நாட்டில் உள்ளன. இவை தன்னளவில் தனித்து பிற மருத்துவ முறைகளின் சார்பின்றி நோய்களைப் போக்க வல்லமை படைத்தவை. ஆயினும், அலோபதி மருத்துவம் தவிர மற்ற மருத்துவங்கள் அனைத்தும் மாற்று மருத்துவம் என்று அழைக்கப்படுகின்றன. அவைகளில் மருந்து, மாத்திரை, பத்தியம் இல்லாத ஒன்று அக்குபஞ்சர் ஆகும். மர்மத்தைப் போலவும், வர்மத்தை போலவும் அத்தகைய ஆற்றலைப் பயன்படுத்தி நோய்களை குணப்படுத்துவது தான் அக்குபஞ்சரின் தனிப்பெரும் சிறப்பு. கப்பில் வெப்ப முறையைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பது எப்படி என்பதை இப்பதிவில் காண்போம்.

சில நேரங்களில் நமக்கு நெஞ்சில் மார்புக்கு கீழ்ப்பகுதியில் வலி வரும். அப்பொழுது மூச்சு விட முடியாமல் சிரமப்படுவோம். அதேபோல் இடுப்பில் வலி வந்தால் நிமிர்ந்து உட்கார முடியாமல் பக்கவாட்டில் திரும்ப முடியாமல் அவதிப்படுவோம். அதற்கு கிராமத்தில் எளிமையாக செய்வது இந்த கப்பிங் முறை தான்.

அதை செய்து சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் நன்றாக மூச்சு விட முடியும். மருந்து, மாத்திரை, பத்தியம் எதுவும் தேவை இருக்காது. இதை நன்றாக பழகியவர்களே செய்வார்கள். அது செய்வது எப்படி என்பது இதோ.

ஒரு காற்று நுழையாத லோட்டா, டம்ளர், கண்ணாடி குடுவை, குப்பி என்று ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் உள்பக்கம் ஒரு பேப்பரை கொளுத்தி போடுவார்கள். எந்த இடத்தில் வலி இருக்கிறதோ முதுகு பக்கம் வலி என்றால் குப்புற படுக்க வைத்து அந்த வலி உள்ள இடத்தில் கெட்டியான பச்சை சாணத்தை வைப்பார்கள். அந்த சாணத்தின் மீது வெப்பம் உண்டாக்கிய லோட்டாவை கவிழ்த்து விடுவார்கள். அந்த வெப்பம் சுறு..சுறு.. என்று இழுக்கும். வாய்வு பிடிப்பு சரியாவது அதிலிருந்து நன்றாகத் தெரியும். சிறிது நேரம் கழித்து பார்த்தால் நமக்கு வலி எல்லாம் நீங்கிவிடும். அப்பொழுது அந்த லோட்டா தளர்ந்து விடும்.

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு பெண்ணும் கவனிக்க வேண்டிய 'ஈறு நோய்' அறிகுறிகள்!
Acupuncture treatment

அதன் பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்து தோலின் மேல் பகுதி கொஞ்சம் மேடிட்டுருக்கும். அதை கையால் தேய்த்து சரி படுத்தி விடுவார்கள். இதுதான் கப்பிங் முறை என்பது.

பெரும்பாலும் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மூச்சுப்பிடிப்புகளுக்கும், வாய்வுப் பிடிப்புகளுக்கும், வாயு கட்டுகளுக்கும் இந்த முறையைத்தான் பின்பற்றுவார்கள். சாதாரண லோட்டாவை பயன்படுத்தி இது போன்ற அற்புதங்களை நிகழ்த்தி சில நிமிடங்களில் வலிகளையும், இறுக்கங்களையும், பிடிப்புகளையும் நீக்கி விடுவது நடைமுறை. இப்படி அக்குபங்சர் (Acupuncture) முறையை அங்கு சாதாரணமாகப் பயன்படுத்துவதைக் காணலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com