கால்சியம் மாத்திரையா? சுண்ணாம்பா?

கடல் சிப்பியில் இருந்து எடுக்கப்பட்ட சுண்ணாம்பு மருத்துவகுணம் வாய்ந்தது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது விலை அதிகம் என்பதால் உபயோகிக்காமல் இருக்கிறோம்.
Lime and betel leaves
Lime
Published on

முன்பு எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும் அதை மருந்து போல் பயன்படுத்தி வந்தார்கள். குறிப்பாக, வெற்றிலையோடு சேர்த்து பயன்படுத்துவார்கள். தற்போது வெற்றிலை போடும் பழக்கமே இல்லை‌. சாப்பிட்டவுடன் வெற்றிலை சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளுக்கும், தொண்டைக்கும் நல்லது.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பைத் தரக்கூடிய இயற்கை பொருள். ஒரு தேக்கரண்டி தேனில் ஊசிமுனையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் அதைவிட பெரிய மருந்தே கிடையாது‌. அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் இதை சாப்பிட்ட பிறகு சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பர். இது ஆண்மை விருத்திக்கு நல்லது என்று கூறப்படுகிறது. விந்தணுக்கள் குறைவாக உள்ளவர்கள் கரும்பு சாற்றில் சிறிது சுண்ணாம்பு கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

பெண்களுக்கும் கரு முட்டை உருவாக சுண்ணாம்பு காரணமாக உள்ளது‌. மாணவர்களுக்கு சுண்ணாம்பு நினைவாற்றலைப் பெருக்கும்‌.

படிக்கும் மாணவர்களுக்கு தயிரில் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து கொடுக்க நினைவாற்றல் பெருகும். மூளையின் சக்தி அதிகரிக்கும். மோர், ஜுஸ் மற்றும் நீரிலும் கலந்து தரலாம்.

இதையும் படியுங்கள்:
புற்றுநோய் முதல் பல் வலி வரை... சர்வ ரோக நிவாரணி எது தெரியுமா?
Lime and betel leaves

மாதுளம் பழச்சாறில் ஒரு கோதுமை அளவு சுண்ணாம்பு கலந்து குடிக்கலாம். இதனால், கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் சுலபமாக ஆகும். அதுமட்டுமல்ல, அது குழந்தைக்கும் போய்ச் சேர்ந்து மூளை வலுவான குழந்தை பிறக்கும்‌. இப்போதெல்லாம் கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள்‌; அது பக்க விளைவுகளைத் தரக்கூடும்‌.

இயற்கை முறையில் நாம் சாப்பிடும் கால்சியம் உடலுக்குத் தேவையானதை எடுத்து அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றி விடும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் சுண்ணாம்பு நல்ல தீர்வு தரும். ரத்தக் குறைபாடு, ரத்தம் போக்கு, வயிற்றுவலி சோர்வு போன்றவற்றை சுண்ணாம்பு போக்கும்.

இதையும் படியுங்கள்:
80-க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் தொப்புள் கொடி!
Lime and betel leaves

கீழாநெல்லி, கறிவேப்பிலை ரசம் ஆகியவற்றுடன் சிறிது சேர்க்கலாம்‌. ஈறுகளில் பிரச்சனை இருந்தால், வெற்றிலை, துளசியுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடலாம். விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் சிறிது சுண்ணாம்பு வைத்தால் விஷம் நீங்கும்.

நல்லெண்ணையில் சிறிது சுண்ணாம்பு கலந்து உடலில் பூசினால் கொசுக்கடி, வேர்க்குரு தடுக்கப்படும். பல்லில் கூச்சம், ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் இவற்றுக்கு சிறந்த மருந்து‌. தொண்டை இனிமையாக இருக்க இது உதவிபுரிகிறது‌.

பச்சரிசி, மிளகு இவற்றோடு சிறிது சுண்ணாம்பை கலந்து மென்றால் நல்ல குரல் வளம் கிடைக்கும்‌. வெற்றிலையில் சிறிது தேன் தடவி, கிராம்புடன் சிறிது சுண்ணாம்பும் சேர்த்து மென்றால் நல்ல குரல் வளம் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
2 நிமிஷத்துல ரெடியாகுதுன்னு இதை குழந்தைகளுக்கு தரீங்களா? அது சாப்பாடு இல்ல... ஸ்லோ பாய்சன்!
Lime and betel leaves

குளிர்காலத்தில் தொண்டை கட்டிக் கொண்டால் முருங்கைச் சாறுடன் கொஞ்சம் சுண்ணாம்பை குழைத்து தொண்டையின் வெளிப்புறத்தில் பூச வேண்டும். தொண்டை கமறல் நீங்கும். கலர் சேர்க்காத வெள்ளை சுண்ணாம்பு தான் சிறந்தது.

இன்று நாம் உபயோகிக்கும் சுண்ணாம்பு கடல் சிப்பியிலிருந்து எடுக்கப்படுவது அல்ல. சுண்ணாம்பு கற்களை நீர்த்து எடுக்கப்படுபவை. கடல் சிப்பியில் இருந்து எடுக்கப்பட்ட சுண்ணாம்பு மருத்துவகுணம் வாய்ந்தது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது விலை அதிகம் என்பதால் உபயோகிக்காமல் இருக்கிறோம். சுண்ணாம்பை நேரிடையாக யாரும் சாப்பிட முடியாது. அதைப் பதப்படுத்திதான் கடையில் விற்கிறார்கள். ஆரோக்கியம் தரும் வெற்றிலை, சுண்ணாம்பை தவிர்த்து புகையிலையை பயன்படுத்துபவர்கள் புற்று நோய்க்கு ஆளாகிறார்கள்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com