

பல உடல் உபாதைகளை வெல்லும் வெற்றி இலையாக்கும் இந்த வெற்றிலை. பல நோய்கள் தோன்றுவதற்கு காரணம் அஜீரணம். சாப்பிட்டு ஒரு வெற்றிலையை மடித்து போட்டால் போட்டது கல்லா இருந்தாலும் ஜீரணம் ஆகிவிடும். வாயு தொல்லையினால் அவதி படாதவர்கள் உண்டோ இவ்வுலகில்? அதை போக்குவதில் இல்லை நிகர் வெற்றிலைக்கு. நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி ஞாபக சக்தியை பெருக்குகிறது வெற்றிலை.
வெற்றிலை நமது முக்கியமான உறுப்புகளுக்கெல்லாம் நண்பன். மூளை, இதயம், மண்ணீரல், கல்லீரல், கிட்னி இவைகளுக்கெல்லாம் வெற்றிலையை மிகவும் பிடிக்கும். நம்பமாட்டீர்கள் பைத்தியம் பிடிப்பதையும் வெற்றிலை தடுக்கும். அது ஒரு மனநல மருந்தும் கூட. இந்த வெற்றிலை இதய நாளங்களில் ஏற்படக்கூடிய அடைப்பை தடுக்கவும், அப்படி இருக்கும் அடைப்புகளை கரைக்கவும் செய்கிறது. காதில் எரிச்சலா, குடைச்சலா ஒரு துளி வெற்றிலை சாறு விடுங்கள் பிரச்னை தீரும்.
எல்லாவற்றிற்கும் மேலாக சொல்ல வேண்டியது வெற்றிலையின் anti inflammatory தன்மை. உடலில் கட்டிகள் தோன்றினால் அதன் மேல் வெற்றிலையை சூடு செய்து வைத்து கட்டுவார்கள். கட்டி உடனே உடைந்து ஆற ஆரம்பித்து விடும்.
மேலும் சாப்பிட்டு வெற்றிலை சுண்ணாம்பு போடுபவர்களுக்கு எளிதில் சர்க்கரை நோய் வருவதில்லை என்றும் கண்டறிந்துள்ளார்கள். ஆகவே சாப்பிட போடுங்கள் வாழை இலை. சாப்பிட்ட பின் போடுங்கள் வெற்றிலை.
கடைசியாக ஒரு விஷயம். வெற்றிலையை வீட்டில் ஒரு தொட்டியில் வளர்ப்பது சுலபம் மட்டுமல்ல லாபமும் கூட. மார்க்கெட்டில் பாத்து ரூபாய் கொடுத்தால் பத்து வெற்றிலை தான் கொடுப்பாங்க. வீட்டில் வளர்க்கும் வெற்றிலை கொடி இலைகளை கொட்டி கொடுக்கும்.
வெற்றிலையை வீட்டில் வளர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.
ஒரு மூன்று அல்லது நான்கு இஞ்சு நீளமுள்ள கணுக்கள் உள்ள வெற்றிலை துண்டை இலைகளை நீக்கி ஒரு பாட்டிலில் நீர் நிரப்பி மிதக்க விடலாம். அப்படி மிதக்க விடபட்ட தண்டு இரண்டு மூன்று நாட்களுக்குள் வேர் விட ஆரம்பிக்கும். அப்போது அதை தோட்டத்தில் மண்ணில் நேரடியாகவோ அல்லது ஒரு மண் தொட்டியில் நட்டு விடலாம். தொட்டியில் வைப்பதாக இருந்தால் மண்ணில் உரம் சேர்ப்பது வெற்றிலை செடி வேகமாக வளர உதவும்.
இந்த வெற்றிலை தொட்டியை பால்கனியிலோ அல்லது தோட்டங்களில் படர்வதற்கான மூங்கில் கொம்புகள் நட்டோ வசதி ஏற்படுத்தி வைக்கலாம். தினமும் சிறிது அளவு தண்ணீர் விட்டாலே போதும். அதிக தண்ணீர் செடியை அழுக செய்யலாம். வெற்றிலை செடி நன்கு பராமரித்தால் வேகமாக வளர்ந்து படர்ந்து நூற்றுக்கணக்கில் இலைகள் தந்து நம்மை அசத்திவிடும்.
வெற்றிலை ஒரு மூலிகை மறக்க கூடாது நாம் இதை. வெற்றிலை கொடி வீட்டில் இருப்பது நம்மோடு ஒரு வைத்தியன் இருப்பது போலாகும்.